ஜெய்லானியில் ஸியாரங்களை திறக்க தம்மரதன தேரர் மறுப்பு

0 663

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

தப்தர் ஜெய்­லா­னிக்கு உரித்­தான, ஏற்­க­னவே மண்­ணினால் மூடப்­பட்ட வர­லாற்றுப் புகழ்­மிக்க ஸியா­ரங்­களை மீண்டும் திறப்­ப­தற்கு நெல்­லி­ய­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார். அத்­தோடு ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் தகர கூடா­ரத்தை அகற்றி விடு­வ­தற்கும் அவர் தீர்­மா­னித்­துள்ளார்.

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் அவர் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில் தொல்­பொருள் ஆணை­யா­ளரின் உத்­த­ர­வுக்­க­மைய ஜெய்­லானி பள்­ளி­வாசல் கட்­ட­மைப்­புகள் கடந்த காலங்­களில் கட்டம் கட்­ட­மாக அகற்­றப்­பட்டு வந்­தன. ஆனால் ஆட்சி மாற்றம் கார­ண­மாக அது தடை செய்­யப்­பட்­டது. நாம் மீண்டும் ஆணை­யா­ளரின் உத்­த­ரவை அமுல் நடத்­த­வுள்ளோம்.

ஜெய்­லா­னி, தொல்­பொருள் பிர­தேசம் 2300 வருட வர­லாற்றைக் கொண்­ட­தாகும். இது பெளத்­தர்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். நாம் இரு ஸியா­ரங்­களை மூடி­ய­போது எமக்­கெ­தி­ராக பொலிஸில் முறைப்­பாடு செய்­தார்கள். பின்பு இந்த முறைப்­பாட்­டினை வாபஸ் பெற்றுக் கொண்­டார்கள்.

நான் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் உத்­தி­யோக பூர்­வ­மாக உடன்­ப­டிக்கை ஒன்­றினைச் செய்து கொண்டே எனது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளேன். ஆனால் புதிய நிர்­வா­கத்தில் ஒற்­று­மை­யில்லை. அவர்கள் இரு பிரி­வு­க­ளாகப் பிரிந்­தி­ருக்­கி­றார்கள்.

சிவ­னொ­ளி­பாத மலை­போன்று முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் இணைந்து முரண்­ப­டாது தங்கள் சமயக் கட­மை­களை இங்கு முன்­னெ­டுக்க வேண்டும்.

ஜெய்­லா­னியில் தற்­போது எஞ்­சி­யுள்ள பிர­தான ஸியா­ரத்தை மாத்­தி­ரமே எம்மால் அனு­ம­திக்க முடியும். ஏனைய கட்­ட­மைப்­புகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஸியா­ரத்­துக்­காக அவர்கள் ஒரு மெள­ல­வியை நிய­மித்துக் கொள்­ளலாம். மெள­ல­வியின் சம்­ப­ளத்தை என்னால் வழங்க முடியும்.

இங்கு பெளத்த தூபி நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. 1971 முதல் 1920வரை இங்கு முஸ்லிம்களே பெருமளவில் வந்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது பெளத்தர்களே பெருமளவில் வருகிறார்கள். எனவே அவர்களுக்கே முதன்மையளிக்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.