ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

0 619

எம்.எல்.எம்.மன்சூர்

ஞான­சார தேரர் சம­கால இலங்கை அர­சியல் சமூ­கத்தின் (Polity) ராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) கரு­தப்­ப­டு­பவர். பொது­வாக அவர் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடி­யாது என்­பது போன்ற எழு­தாத ஒரு சில விதிகள் சில வருட கால­மாக மக்கள் மனங்­களில் வேரூன்­றி­யி­ருக்­கின்­றன. 2018 ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் அவர் திக­னைக்குச் சென்று, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களை நேர­டி­யாக தூண்­டிய சந்­தர்ப்­பத்தில் (அதனை நிரூ­பிப்­ப­தற்கு போதிய ஆதா­ரங்­களும், சாட்­சி­யங்­களும் இருந்து வந்த போதிலும் கூட) நல்­லாட்சி அர­சாங்கம் அவர் மீது கை வைக்கத் தயங்­கி­யது.

ஏதேதோ பிரச்­சி­னைகள் தொடர்­பாக அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தினமும் குறைந்­தது இரண்டு அறிக்­கை­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­லேயே ஞான­சார தேரரின் பெயரைக் குறிப்­பிட்டு, அவ­ரு­டைய மத நிந்­தனை கருத்­துக்­க­ளுக்கு கண்­டனம் தெரி­விக்க முடி­யாத நிலை. பாரா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பாக அமைச்சர் சரத் வீர­சே­க­ர­விடம் முஜிபுர் ரஹ்மான் எழுப்­பிய கேள்­வி­யை­யா­வது குறைந்­தது சஜித் பிரே­ம­தாச கேட்­டி­ருக்­கலாம். அப்­போது அதற்கு ஒரு புதிய பரி­மாணம் கிடைத்­தி­ருக்கும். ஆனால், அவ்­விதம் ஒரு கேள்வி கேட்­ப­தற்­கான துணிச்சல் கூட சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு இல்லை என்­பது இன்­றைய இலங்கை அர­சி­யலின் பெரும் துர­திர்ஷ்டம்.

நிலைமை இனி­மேலும் அப்­படித் தான் இருக்கும். முஸ்­லிம்கள் தொடர்­பான பிரச்­சி­னை­களில் தலை­யி­டு­வ­தற்கு மற்­ற­வர்­க­ளிலும் பார்க்க சஜித்­துக்கு ஒரு தார்­மீக கட­மை­யி­ருக்­கி­றது. 2019ஆம் ஆண்­டிலும், 2020 ஆம் ஆண்­டிலும் இடம்­பெற்ற இரு தேசிய தேர்­தல்­க­ளிலும் கிட்­டத்­தட்ட 85% முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அவ­ருக்கும், அவ­ரு­டைய கட்­சிக்கும் வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். (அதே காரி­யத்தை மீண்டும் மீண்டும் செய்­வ­தற்கு 2024 மற்றும் 2025 தேர்­தல்கள் வரும் வரையில் அவர்கள் பொறு­மை­யின்றி காத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் பகி­ரங்க இர­க­சியம்).

மற்­றொரு விட­யத்­தையும் இங்கு முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்டும். ஞான­சார தேரரின் கருத்­துக்­க­ளுக்கு எதி­ரி­வி­னை­யாற்­றிய பல தரப்­புக்கள் அவர் முன்­வைத்­தி­ருக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை நடத்தி, நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்­டுக்­கொண்­டார்­களே தவிர, முஸ்­லிம்­களின் மத உணர்­வு­களை புண்­ப­டுத்தும் விதத்தில் அவர் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்­களை எவ­ருமே கண்­டிக்­க­வில்லை. கத்­தோ­லிக்க திருச்­ச­பைகள் சார்பில் இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்த அருட் தந்தை சிரில் காமினி பெர்­ணான்டோ அந்த மத நிந்­தனை அம்­சத்தை தொட­வே­யில்லை. ஒரு சிறு­பான்மைச் சமூ­கத்தின் மத உணர்­வுகள் புண்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்­பாக பௌத்த மத பீடங்கள் எப்­படிப் போனாலும், ஏனைய கிறிஸ்­தவ, இந்து மத பீடங்­க­ளி­லி­ருந்தும் எதிர்ப்போ, கண்­ட­னங்­களோ தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கவில்லை. இட­து­சாரி தரப்­புக்­களும் கூட அதே போன்ற ஒரு நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­வது போல் தெரி­கின்­றது.

ஏதோ ஒரு காரணம் அவர்­களை அவ்­வாறு செய்­வ­தி­லி­ருந்து தடுத்து நிறுத்­து­கின்­றது. அந்தக் காரணம் என்ன என்­ப­தனை துல்­லி­ய­மாக தெரிந்து வைத்­தி­ருப்­பது ஞான­சார தேரர் போன்­ற­வர்­களை எதிர்­கொள்­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு உதவ முடியும்.
‘முஸ்­லிம்கள் ஒரு மூடுண்ட சமூ­க­மாக, மாற்­றங்­களை விரும்­பாத சமூ­க­மாக இருந்து வரு­கின்­றார்கள்’ என்ற கருத்து ஏனைய சமூ­கங்­களின் பொதுப்­புத்­தியில் ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்­கின்­றது. அந்தப் மனப்­ப­திவை நீண்ட விரி­வு­ரைகள் மூலம் போக்­கி­விட முடி­யாது. அனைத்­து­ம­டங்­கிய ஒரு சீர்­தி­ருத்தச் செயன்­மு­றைக்கு செயல் வடிவம் கொடுப்­பதன் மூலமே மட்­டுமே அதனைச் செய்ய முடியும்.

பொது­வாக முன்­மு­டி­வு­க­ளு­டனும், காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டனும் செயற்­பட்டு வரும் ஞான­சார தேரர் போன்­ற­வர்கள் ஒரு போதும் எதிர்­த­ரப்பு நியா­யங்­களை பார்க்­கவோ, கேட்­கவோ விரும்ப மாட்­டார்கள். அப்­ப­டி­யான நபர்­க­ளுடன் விவாதம் ஒரு புற­மி­ருக்க, நட்பு ரீதி­யான ஓர் உரை­யா­டலை நடத்­து­வது கூட சாத்­தி­ய­மில்லை.

ஆனால், அவ­ரையும், அவ­ரு­டைய சக பய­ணி­க­ளாக இருந்து வரும் ஒரு சில தீவி­ர­வாத பிக்­கு­க­ளையும் நாங்கள் உதா­சீனம் செய்ய முடி­யாது. ஏனென்றால், இந்தத் தசாப்தம் நெடு­கிலும் இலங்கை அர­சி­ய­லிலும், இனங்­க­ளுக்கும், மதங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வு­களை நிர்­ண­யிக்கும் விட­யத்­திலும் அவர்கள் மிக முக்­கி­ய­மான ஒரு பாத்­தி­ரத்தை வகித்து வரு­வார்கள். யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அதே நிலைமை தான் நிலவி வரும்.
இலங்­கையில் சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் பகி­ரங்­க­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு பிர­சார இயக்­கத்தை முத­லா­வ­தாக ஆரம்­பித்து வைத்­தவர், ஞான­சார தேரர் தனது குரு­வா­கவும், வழி­காட்­டி­யா­கவும் மதிக்கும் கங்­கொ­ட­வில சோம தேரர் (1948 – 2003). அவர் 1990 களின் இறுதிப் பகு­தியில் முஸ்­லிம்கள் தொடர்­பாக தெரி­வித்து வந்த எதிர்­மறைக் கருத்­துக்­களை கேட்­ப­தற்­கென அந்தத் தலை­மு­றையைச் சேர்ந்த பல்­லா­யிரக் கணக்­கான இளை­ஞர்கள் ஒரு வித பர­வச உணர்­வுடன் அவ­ரது கூட்­டங்­களில் பங்­கேற்­றார்கள்.
அச்­சந்­தர்ப்­பத்தில் அவர் அமைச்சர் அஷ்ரப் தொடர்­பாக தொடர்ந்து முன்­வைத்து வந்த சில குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டு­மென அஷ்ரப் விரும்­பினார். அதற்­கி­ணங்க, (முழு இலங்­கையும் ஆவ­லு­டனும், பதற்­றத்­து­டனும் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த) அந்த உரை­யாடல் நிகழ்ச்சி 2000ஆவது ஆண்டில் TNL தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பா­கி­யது. ஆனால், அன்று சோம தேரர் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைத்த குற்­றச்­சாட்­டுகள், இன்று முன்­வைக்­கப்­பட்டு வரும் குற்­றச்­சாட்­டுக்கள் அள­வுக்கு பார­தூ­ர­மா­ன­வை­யாக இருந்து வர­வில்லை. அமைச்சர் அஷ்ரப் தனது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்து, முஸ்­லிம்­க­ளுக்கு நியா­ய­மற்ற விதத்தில் சலு­கை­களை வழங்கி வரு­கின்றார் என்ற விதத்­தி­லேயே பெரும்­பா­லான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

மிகவும் பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில் TNL தொலைக்­காட்­சியில் ஒரு மணித்­தி­யா­ல­யத்­திற்கு மேல் இடம்­பெற்ற அந்த நிகழ்ச்சி, இரண்டு சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான ஓர் உரை­யா­ட­லுக்­கான முன்­மா­தி­ரி­யாக இருந்­தது என்று கூற வேண்டும். சோம தேரர் முஸ்­லிம்கள் தொடர்­பாக ஆதா­ர­மற்ற கருத்­துக்­களை பரப்பி வந்த போதிலும், அந்த உரை­யாடல் நிகழ்ச்­சியில் ஒரு துற­விக்கே உரிய பக்­கு­வத்­து­டனும், நிதா­னத்­து­டனும், பொறு­மை­யு­டனும் அமைச்சர் அஷ்­ரப்பை எதிர்­கொண்டார். வார்த்­தை­க­ளையும் மிகவும் கண்­ணி­ய­மான விதத்தில் பயன்­ப­டுத்­தினார். (ஆனால், அவ­ரு­டைய சீட­ரிடம் அத்­த­கைய பண்­பு­களை துளியும் எதிர்­பார்க்க முடி­யாது).

அமைச்சர் அஷ்­ரப்பும் அதே விதத்தில் எந்­த­வொரு கட்­டத்­திலும் ஆத்­தி­ரப்­ப­டாமல், பொறுமை இழக்­காமல், நிதா­ன­மாக தனது தரப்பை முன்­வைத்தார். அஷ்­ரப்பின் வாதம் எந்த அள­வுக்கு வலு­வா­ன­தாக இருந்து வந்­தது என்றால், அந்த நிகழ்ச்­சியை நெறிப்­ப­டுத்­திய சமுத்­தித சம­ர­விக்­ரம ஒரு கட்­டத்தில் தான் அந்த நிகழ்ச்­சியின் ‘Anchor’ என்­ப­த­னையும் மறந்து, தன்னை அறி­யா­ம­லேயே அஷ்­ரப்­புக்கு எதிர் தரப்பில் நின்று ஆவே­ச­மாக கருத்­துக்­களை முன்­வைக்கத் தொடங்­கினார்.
எவரும் எதிர்­பா­ராத விதத்தில் மிகவும் சுமு­க­மாக அந்த நிகழ்ச்சி நிறை­வ­டைந்­த­துடன்,

அது­வ­ரையில் அஷ்­ரபை வில்­ல­னாக சித்­தி­ரித்து வந்த சிங்­கள ஊட­கங்­களின் அணு­கு­மு­றையில் அதன் பின்னர் ஓர­ள­வுக்கு மாற்­றங்கள் ஏற்­பட்­டன.

இந்­தி­யாவில் RSS இயக்கம் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான கடும் காழ்ப்­பு­ணர்ச்­சி­யுடன் கூடிய பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்த பொழுது, 1980 களில் சோ ராம­சாமி தனது ‘துக்ளக்’ இதழில் இதே மாதி­ரி­யான ஓர் உரை­யா­ட­லுக்கு வாய்ப்­ப­ளித்தார். ஆர் எஸ் எஸ் இயக்­கத்தின் தென் மண்­டலப் பொறுப்­பாளர் சூரி­ய­நா­ரா­யணன் என்­ப­வ­ருக்கும், இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தலை­வர்­களில் ஒரு­வரும், பத்­தி­ரி­கை­யா­ள­ரு­மான அ.க. அப்துல் ஸம­துக்­கு­மி­டையில் ஒரு நீண்ட உரை­யாடல் இடம்­பெற்­ற­துடன், ‘துக்ளக்’ பத்­தி­ரிகை மூன்று இதழ்­களில் தொடர்ச்­சி­யாக அதனை பிர­சு­ரித்­தது.

ஆனால், இலங்­கையின் இன்­றைய சூழ்­நி­லையில் அத்­த­கைய பகி­ரங்க உரை­யா­டல்­க­ளுக்கோ, விவா­தங்­க­ளுக்கோ அறவே சாத்­தி­ய­மில்லை. ஞான­சார தேரர் போன்­ற­வர்­களின் மனப்­பாங்கு அப்­ப­டி­யான ஒரு நட்பு ரீதி­யான கருத்துப் பரி­மாற்­றத்­திற்கு பொருந்தக் கூடி­ய­தா­கவும் இருந்து வர­வில்லை. ‘ஹிரு’ ரிவி யில் கிட்­டத்­தட்ட இரண்டு மணித்­தி­யா­லங்கள் நீடித்த அவ­ரு­டைய சர்ச்­சைக்­கு­ரிய நேர்­கா­ணலின் போது, திட்­ட­வட்­ட­மான கேள்­வி­க­ளுக்கு (Pointed Questions) பதி­ல­ளிக்­காமல் அவர் நழுவிச் சென்­ற­தையும், பல கேள்­வி­க­ளுக்கு மழுப்­ப­லாக பதி­ல­ளித்­த­த­னையும் தெளி­வாக பார்க்க முடிந்­தது.
ஈஸ்டர் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி யார் என்ற விட­யத்தை அம்­ப­லப்­ப­டுத்த வேண்டும் என கிறிஸ்­தவ / கத்­தோ­லிக்க தரப்­புக்­க­ளி­லி­ருந்தும், அதே போல எதிர்க்­கட்சித் தரப்­பி­லி­ருந்தும் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் கடும் அழுத்­தங்கள் ஒரு புறம். முன்­னெப்­போதும் இல்­லாத விதத்­தி­லான பொரு­ளா­தார, சமூக நெருக்­கடி மறு­புறம். தேசா­பி­மா­னிகள் எதிர்­பார்த்த விதத்தில் பொரு­ளா­தா­ர­மொன்றை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாத உள், வெளி நிர்ப்­பந்­தங்கள்; துரித வேகத்தில் நிகழ்ந்து வரும் அரச சொத்­துக்­களின் விற்­பனை. இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுடன் எமது நாட்­டிற்கு பாதகம் விளை­விக்கக் கூடிய சரத்­துக்­க­ளுடன் ஒப்­பந்­தங்­களை செய்து கொள்ள வேண்­டிய பல­வீனம்.

ராஜ­பக்ச அர­சாங்­கத்தின் தூய சிங்­கள – பௌத்த பிம்பம் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்­ச­மாக தகர்க்­கப்­பட்டு வரும் ஒரு சூழ்­நி­லையில், அதனை பாது­காத்துக் கொள்­வ­தற்­கென திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு சேதக் கட்­டுப்­பாட்டு செயற்­பா­டா­கவே (Damage Control Exercise) இதனை பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அதா­வது, ஆளும் தரப்பும், அதன் முதன்மை சிங்­கள பௌத்த சித்­தாந்­தத்தை வடி­மைப்­ப­வர்­களும் ‘நீங்கள் சில்­லறைப் பிரச்­சி­னை­களை வைத்து ஒரு­வ­ருடன் சண்டை பிடித்துக் கொண்­டி­ருக்­கி­றீர்கள். அதனை தக்க தரு­ண­மாக பயன்­ப­டுத்தி, இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் நம் இனத்­தையே அழிக்கப் போகி­றார்கள்’ என்ற செய்­தியை ஞான­சார தேர­ருக்கு ஊடாக சிங்­கள மக்­க­ளுக்கு விடுக்க முயல்­கி­றார்கள்.

ஞான­சார தேரரை உள்­ளிட்ட ஒரு பிரி­வினர் இலங்­கையின் அனைத்து சமூக, பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளிலும் ஒரு தீவிர வல­து­சாரி நிலைப்­பாட்டை எடுப்­ப­வர்கள். கொத்­த­லா­வல பாது­காப்பு பல்­க­லைக்­க­ழக விவ­கா­ரத்தின் போது நிகழ்ந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து அவர் ஊட­கங்­களில் தோன்றி, கல்­வியை தனி­யார்­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வாக கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்கை தொழிற்­சங்­கங்கள், சிவில் சமூக மற்றும் மனித உரிமை அமைப்­புக்கள், ஜேவிபி/ முன்­னிலை சோசலிக் கட்சி மற்றும் ‘அந்­தரே’ என்று அழைக்­கப்­படும் அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் போன்ற தரப்­புக்­களை ‘சிங்கள இனத்தை பிள­வு­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்தும்’ சக்­தி­க­ளா­கவே அவர்கள் பார்க்­கின்­றார்கள். இன்று நாட்டை அலைக்­க­ழித்து வரும் சமூக,பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை இவர்கள் துளியும் கண்டு கொள்­ளாமல் இருப்­ப­தனை அந்தக் கண்­ணோட்­டத்தின் ஒரு நீட்­சி­யா­கவே பார்க்க முடி­கி­றது.

ஞான­சார தேரர் அம்­ப­லப்­ப­டுத்­திய அதிர்ச்­சி­யூட்டும் தகவல் அவர் எதிர்­பார்த்த அள­வுக்கு சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் உட­ன­டி­யாக பீதி­யையோ, பதற்­றத்­தையோ தூண்­ட­வில்லை. இது அவ­ருக்கும் அவ­ரு­டைய ‘Handlers’ களுக்கும் ஏற்­பட்ட ஒரு பெரிய பின்­ன­டைவு. அநே­க­மாக, முதல் தட­வை­யாக சிங்­கள பௌத்த மக்கள் அவ­ரு­டைய உள்­நோக்­கங்கள் குறித்து சந்­தே­கப்­படத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்­கான அறி­குறி.
மறு­பு­றுத்தில், (அடுத்து வரும் காலப் பிரிவில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களின் மேல் பழியை போடக் கூடிய ஏதேனும் அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்­தா­லே­யொ­ழிய) எதிர்­காலத் தேர்­தல்­களில் இஸ்­லா­மோ­போ­பி­யாவை மட்டும் வைத்து சிங்­கள மக்­களின் வாக்­கு­களை அள்ளிக் கொள்ள முடி­யாது போகலாம். ஆனால், அவர்கள் சும்மா இருக்கப் போவ­தில்லை. புதிய புதிய புர­ளி­களை கிளப்பிக் கொண்­டே­யி­ருப்­பார்கள்.

இறு­தி­யாக, முஸ்­லிம்கள் இன்று எதிர்­கொண்டு வரும் நெருக்­க­டிக்கு இஸ்­லா­மோ­போ­பியா, இன­வாதம், மத­வாதம், அந்­நியச் சக்­தி­களின் சூழ்ச்சி என்று எத்­த­னையோ கார­ணங்­களை அடுக்­கிக்­கொண்டு போகலாம். ஆனால், அதே வேளையில், அதன் தீவிரத் தன்­மையை தணிக்கும் விட­யத்தில் முஸ்லிம் சமூகம் கொண்­டி­ருக்கும் பொறுப்­புக்­களை எந்தக் காரணம் கொண்டும் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது.

எதிர்­பா­ராத ஒரு சிறு சம்­பவம் சில நொடி­களில் அனைத்­தையும் தலை­கீ­ழாக மாற்றி விட முடியும். அதா­வது, எந்­த­வொரு இயக்­கத்­தையும் சாராத ஒரு தீவிர மன­நோ­யாளி (Lone Wolf) (அண்­மையில் நியூ­சி­லாந்தில் இடம்­பெற்­றதைப் போன்ற ஒரு) திடீர் வெறி­யாட்­டத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்தால், அது ஒரு சில நிமி­டங்­களில் ஒட்­டு­மொத்த சமூ­கத்தின் மீதும் எத்­த­கைய பின்­வி­ளை­வு­களை எடுத்து வர முடியும் என்­ப­தனை சொல்ல வேண்­டி­ய­தில்லை. அந்த நிச்­ச­ய­மற்ற நிலை தான் இன்று முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டி­ருக்கும் மிகப் பெரிய அச்­சு­றுத்தல்.

இந்தப் பின்­பு­லத்தில், ஞான­சார தேரர் உள்­ளிட்ட தரப்பு முஸ்லிம் சமூ­கத்தின் மீது பிர­யோ­கித்து வரும் அழுத்­தங்­களை இரு வழி­களில் எதிர்­கொள்ள முடியும். ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் கூட்­டாக இணைந்து முன்­னெ­டுக்க வேண்­டிய தேசிய ரீதி­யான செயற்­பா­டு­களும், இஸ்­லா­மிய சமூ­கத்­திற்­குள்ளே மேற்­கொள்ள வேண்­டிய செயற்­பா­டு­களும் இதில் அடங்­கு­கின்­றன.

– மித­வாத சிந்­த­னை­யையும், நிதான புத்­தி­யுடன் செயற்­படக் கூடிய ஆற்­ற­லையும் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் / தொழி­வாண்­மை­யா­ளர்­களின் ஒரு கூட்டு (Collective) உட­டி­ன­யாக உருவாக்கப்பட வேண்டும். (அதன் உறுப்பினர்கள் இயக்க சார்பில்லாதவர்களாக இருந்து வருவது முக்கியம்).
அந்த அமைப்புக்கு ஊடாக குறிப்பாக பௌத்த பீடங்களுடனும், ஏனைய மதத் தலைமைகளுடனும், அதே போல அரச தரப்புடனும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, தொடர்ச்சியான விதத்தில் உரையாடல்களை முன்னெடுத்தல்.
– நீண்ட காலமாக தாமதமடைந்திருக்கும் (MMDA போன்ற) சட்ட சீர்திருத்தங்களை எடுத்து வருவது தொடர்பாக உடடியாக ஒரு கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டும். (அந்தக் கருத்தொற்றுமையை எட்டுவதில் இதுவரையில் தடையாக இருந்து வந்த நபர்கள் யார் என்ற விடயத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்).
– முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அரசாங்கத் திணைக்களம் அதற்கிருக்கும் பணிப்பாணையை (Mandate) முழுமையாக பயன்படுத்தி, பள்ளிவாசல்களை / மதரசாக்களை ஒழுங்குமுறைப்படுத்தும் (Regulatory Body) அதன் பொறுப்பை நிறைவேற்றி வைப்பதுடன், அது தொடர்பாக அந்த Collective இடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளல்.
– அடுத்த முக்கியமான விடயம் பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர் சபைகளை நியமனம் செய்வது தொடர்பாக கண்டிப்பான அளவுகோல்கள் (Criteria) பின்பற்றப்பட வேண்டிய தேவை. ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் சபையில் இருக்கும் உறுப்பினர்களில் குறைந்தது 75 சதவீதத்தினர் (முஸ்லிம் சிவில் சமூக கூட்டமைப்பினால் நிர்ணயிக்கப்படும்) தகைமைகளின் அடிப்படையில் அவற்றுக்கு நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு விதி உடனடியாக உருவாக்கப்படுதல் வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.