பிள்ளைகளுக்கு ‘சோறு’ மாத்திரம் ஊட்டினால் போதுமா?

0 614

ஆஷிகா,
கொழும்பு.

உணவில் அறு­சுவை உள்­ளது போன்றே வாசிப்பும் பல்­சுவை நிரம்­பி­யது. அதை அனு­ப­வித்­த­வர்­களே அதன் சுவையை அறி­வார்கள். உணவை ருசிப்­ப­துபோல் வாசிப்­பையும் கொஞ்சம் ருசி பாருங்கள். பின்பு அது விடாது உங்­களை பிடித்­துக்­கொள்ளும். பிள்­ளை­க­ளுக்கும் சோற்­றினை மாத்­தி­ர­மன்றி வாசிப்­பையும் கொஞ்சம் ஊட்­டுங்கள். அது அவர்­களை ஆட்­கொள்ளும். தித்­திக்கும் தேன் சுவைக்கு ஒப்­பா­னது வாசிப்பில் ஏற்­படும் உணர்வு.

ஒக்­டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதம். இது­வரை வாசிக்க நினைக்­கா­த­வர்கள், புத்­த­கத்தின் வாச­னையை நுக­ரா­த­வர்கள், நூல­கத்தின் பக்கம் காலெ­டுத்து வைக்­கா­த­வர்கள், என அனை­வரும் இம்­மா­தத்­தி­லேயே வாசிக்க ஆரம்­பிக்­கலாம். வாசிப்பை ஆரம்­பிப்­ப­தற்கும் கல்வி கற்­ப­தற்கும் வய­தெல்­லையும் கிடை­யாது. நேர காலமும் கிடை­யாது. ஆரம்­பிக்கும் எந்­நாளும் நன்­னா­ளேதான்.

எமது பிள்­ளை­களை வாசிப்பின் பக்கம் அதி­க­ம­திகம் ஈடு­ப­டுத்த பெற்­றோர்கள் முயல வேண்டும். அவ­ரவர் தாய்­மொ­ழியில் அல்­லது கற்கும் மொழியில் வாசிப்­பினை அதி­க­ரிக்கச் செய்ய வேண்டும். இய­லு­மா­ன­வரை சிறு பரா­யத்­தி­லேயே வாசிப்பின் பக்கம் அவர்­களைக் கொண்டு செல்­வது சிறந்­தது. வாசிப்பின் பயனை அவர்கள் அறிய எடுத்துக் கூறுதல் அவ­சி­ய­மா­ன­தாகும்.

ஆனால் இன்­றைய நவீன காலத்தைப் பொறுத்­த­வ­ரையில் சிறு­வர்கள் மாத்­தி­ர­மன்றி பெரி­ய­வர்­க­ளுக்கும் வாசிப்­பின்பால் ஈடு­பாடு மிகக் குறை­வா­கவே உள்­ளது. சிலர் அதன் மகி­மை­யையும் பய­னையும் அறி­யாமல் இருக்­கின்­றனர். காரணம் இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­க­ளான கைய­டக்கத் தொலை­பேசி, டெப், மடிக்­க­ணினி போன்­ற­வை­கள்தான்.
பிள்­ளை­க­ளுக்கு வாசிப்பின் மகி­மையை எடுத்துக் கூறு­வ­தற்கு முன்பு பெற்றோர் அத­னது பூரணத்­து­வத்தை, அதன் மகி­மையை உணர்ந்­துக்­கொள்­வது மிக அவ­சி­ய­மாகும். பெற்­றோ­ரா­கிய நாங்கள் புத்­த­கமோ அல்­லது பத்­தி­ரி­கையோ எத­னையும் தொடாது வெறு­மனே எமது பிள்­ளை­களை மாத்­திரம் புத்­த­கத்தை எடுத்து வாசிக்கக் கூறினால் அந்தப் பிள்ளை புத்­த­கத்தைத் தொடு­வானா? அப்­படி பெற்றோர் கூறி­ய­தற்குப் பயந்து அவன் ஒரு கதைப் புத்­த­கத்தை எடுத்­தாலும் கூட அதில் ஒரு எழுத்­தை­யேனும் வாசிக்­க­மாட்டான். அவ­னு­டைய கவனம் சித­றியே காணப்­படும்.

ஆதலால், முதலில் பெற்றோர் ஒவ்­வொரு நாளும் ஒரு குறிப்­பிட்ட ஓய்வு நேரத்தை தெரிவு செய்து பிள்­ளை­க­ளுடன் அமர்ந்து 15 நிமி­டங்­க­ளுக்கு அதி­க­மல்­லாது வாசிக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் கடந்­ததும் பிள்­ளைகள் தானா­கவே இன்னும் அதிக நேரம் அமர்ந்து வாசிக்க விரும்­பு­வார்கள். இயல்­பா­கவே அவர்கள் வாசிப்பின் இர­ச­னையை உண­ரு­வார்கள்.

பெற்­றோரும் வாசிக்க வேண்டும் என்று யாரா­வது கூறினால் உடனே ‘அட எங்­க­ளுக்கு எங்கே நேரம் இதற்­கெல்லாம்?’ ‘சமைக்க வேண்டும், துவைக்க வேண்டும்’ ‘நான் வேலை­யி­லி­ருந்து வரு­வதே ஓய்­வெ­டுக்­கத்தான்.’ என்று இன்­ன­பிற கார­ணங்­களைக் கூறி வாசிப்பைத் தட்டிக் கழிப்­பார்கள்.

ஒரு பிள்­ளையின் முதல் ஆசான் தாய்தான். வீட்டில் ஒரு தாயே தனது பிள்­ளையின் அறிவு வளர்ச்­சிக்கு வித்­திட வேண்டும். அத­னையும் ஆரோக்­கி­ய­மான முறையில் மேற்­கொண்டால் சிறந்­த­தொரு பிர­தி­ப­லனை அடைய முடியும்.

வாசிப்பை பழக்­கு­வ­தற்கோ ஆரம்­பிப்­ப­தற்கோ வீடு நிறைய புத்­த­கங்கள் தேவை­யில்லை. தின­சரி பத்­தி­ரி­கை­களை அல்­லது சிறுவர் சஞ்­சி­கை­களை வாங்­கலாம். ஆரம்­பத்தில் அவர்­களை வாசிக்க வரு­மாறு அழைத்தால் வர­மாட்­டார்கள். அது பிள்­ளை­களின் இயல்பு. அவர்­க­ளாக ஒன்றை விரும்பிச் செய்­தலும் மற்­ற­வர்­களின் தூண்­டு­தலில் அவர்கள் இயங்­கு­வதும் வித்­தி­யா­ச­மா­னது. எனவே, முதல் நாள் தாய் அல்­லது தந்தை சத்­த­மாக அவர்­களின் செவி­களில் விழும்­வி­தத்தில் வாசிக்க வேண்டும். இயல்­பா­கவே அவர்கள் உங்­களின் அருகில் வரு­வார்கள். அதற்கு அடுத்­த­ப­டி­யாக தாங்­களே தெரிவு செய்து வாசிக்க ஆரம்­பிப்­பார்கள். முக்­கி­ய­மாக விளை­யாட்டுச் செய்­தி­களை வாசிக்­கவே முன்­வ­ரு­வார்கள். பின்பு படிப்­ப­டி­யாக சிறுவர் சஞ்­சி­கை­களின் பக்கம் அவர்­களின் கவனம் திரும்பும். இது வாசிப்பினால் ஏற்­படும் ஆரோக்­கி­ய­மான முன்­னேற்­ற­மாகும்.
பிள்­ளை­களின் ஆர்­வத்தைத் தூண்­டி­யதும் அவர்­க­ளுக்­காக சின்னச் சின்ன கதைகள் வண்ணப் படங்­க­ளுடன் கூடிய கதைப் புத்­த­கங்கள் என்­ப­வற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். சிறிது சிறி­தாக புத்­த­கங்கள் சேரும்­போது வீட்டின் ஒரு இடத்தைத் தெரிவு செய்து புத்­த­கங்­களை ஒரு ஒழுங்கில் வைக்க பழக்க வேண்டும். பின்பு அவர்­க­ளா­கவே தாம் சேமித்த புத்­த­கங்­களை நேர்த்­தி­யாக வைப்­ப­தற்கும் பரா­ம­ரிப்­ப­தற்கும் ஒரு புத்­தக அடுக்கை கேட்­பார்கள். அதற்­கான உத­வியை பெற்­றோரே மன­மு­வந்து ஆர்­வத்­துடன் செய்ய வேண்டும்.

இதன்­போது பிள்­ளைகள் மாத்­தி­ர­மன்றி பெரி­ய­வர்­களும் வாசிப்பில் ஈடு­பட ஆரம்­பிப்­பார்கள். இதனால் பெறும் நன்­மைகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. வேலை வேலை­யென நாள் முழு­வதும் அழுத்­தத்தில் உழலும் ஒருவன் வாசிப்­பதன் மூலம் தன்­னை­ய­றி­யாது தன் உட­லையும் உள்­ளத்­தையும் அமை­திப்­ப­டுத்­து­கின்றான். இதனால் நோயில் வீழ்­வதில் இருந்தும் பாது­காக்க முடி­கி­றது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதி­க­ரிக்­கின்­றது. சிந்­தனா சக்­தியும் ஞாபக சக்­தியும் அதி­க­ரிக்­கின்­றன.

அதே­வேளை, பிள்­ளைகள் தம்­மு­டைய வாசிப்பில் கவனம் செலுத்­து­கையில் அவர்­களின் அறிவு, தேடல், மொழி­யாற்றல், ஞாப­க­சக்தி, கற்­பனா சக்தி, எழுத்­தாற்றல், ஆக்­கத்­திறன் என அனைத்தும் விருத்­தி­ய­டை­கின்­றன. ஒரு பிரச்­சி­னை­யையோ அல்­லது ஒரு விட­யத்­தையோ சிந்­தித்து செய­லாற்றும் திறனைப் பெறு­கின்­றனர். சுய­மாகத் தீர்வு காண முய­லு­கின்­றனர். இவை­ய­னைத்தும் அவர்­களின் கல்வி வளர்ச்­சிக்கு மட்­டு­மன்றி பிற்­கா­லத்­திற்கும் கைகொ­டுக்­கின்­றது. தோல்­வியைக் கண்டு துவ­ளாது வெற்­றிக்­கான பாதையைத் தேட அவர்­களைத் தூண்­டு­கின்­றது. இதனால் ஒரு சிறந்த ஆரோக்­கி­ய­மான புத்­தி­ஜீ­வி­யான சமூகம் உரு­வா­கின்­றது.

சரி, பிள்­ளை­களை வாசிப்பில் ஈடு­ப­டுத்­து­வ­துடன் பெற்­றோரின் கடமை தீர்ந்­ததா? இல்லை, அவர்கள் தொடர்ந்தும் வாசிப்பில் பிணைந்­தி­ருக்க சில பல வழி­களை சொல்லிக் கொடுக்­கலாம். அவர்­களின் பிறந்த நாளுக்கு புத்­த­கங்­களை பரி­ச­ளிக்­கலாம். அதே­போன்று அவர்­களின் நண்­பர்­களின் பிறந்த தினத்­திற்கும் புத்­த­கங்­களைப் பரி­ச­ளிக்க உத­வுங்கள்.

வழ­மை­யாக அநேக வீடு­களில் பிள்­ளைகள் உண்­டி­யலில் காசு சேமிப்­பார்கள். அது ஆரோக்­கி­ய­மான ஒரு நற்­ப­ழக்­க­மாகும். அதே பழக்­கத்தை இன்றும் கொஞ்சம் பிர­யோ­ச­ன­மான ஒரு தேவைக்குப் பயன்­ப­டுத்­தினால், அதன்­மூலம் பெறும் பயன் மிகவும் பெறு­மதி வாய்ந்­தது. அது என்ன அப்­படி பெறு­ம­தி­வாய்ந்த பயன் என நினைக்­கி­றீர்­களா? அதுதான் புத்­தக அன்­ப­ளிப்பு அல்­லது பரி­மாற்றம்.

எந்த ஒரு நல்ல செய­லையும் செய்­வ­தற்கு நல்ல நாளை எதிர்­பார்க்கத் தேவை­யில்லை. “நன்றே செய், அதை இன்றே செய்” என்­ப­தற்­க­மைய இந்த வரு­டத்தில் இன்­றைய நாளே உங்கள் பிள்­ளை­க­ளுக்கு சில நல்ல புத்­த­கங்­களை வாங்கிக் கொடுக்­கலாம். அவற்றில் ஒன்றை அவர்­களின் நெருங்­கிய ஒரு நண்­ப­னுக்கோ அல்­லது ஒன்­றுக்கு மேற்­பட்ட நண்­பர்­க­ளுக்கோ அன்­ப­ளிப்­பாக வழங்கச் சொல்­லுங்கள். இதை ஒரு வகையில் அன்­புடன் கூடிய புத்­தக பரி­மாற்றம் என்றும் கூறலாம். அந்தப் புத்­த­கத்தை அன்­ப­ளிப்புச் செய்யும் முன்பு உள்­ளட்­டையில் ஏதேனும் ஒரு வாச­கத்தை உங்கள் பிள்­ளை­களின் ஞாப­க­மாக எழுதி பெயர் திகதி என்­ப­வற்றை குறிப்­பிட்டு பின்பு அதனை அன்­ப­ளிப்புச் செய்ய கூறுங்கள். உண்­மையில் அத்­த­ரு­ணத்தில் மிகவும் ஆத்ம திருப்­தியை பெற்­றோரே உணர்­வீர்கள். இப்­ப­ழக்­கத்தை அவர்கள் தம்­மு­டைய ஆயு­ளுக்கும் தொடரும் ஒரு நற்­கா­ரி­ய­மாக செய்­வ­தற்கு உத­வுங்கள்.

இம்­மு­றையை சிறி­ய­வர்கள் மட்­டு­மன்றி பெரி­ய­வர்­களும் பின்­பற்­றலாம். இதன்­மூலம் திரு­மணம், குடும்பம் என்ற கார­ணத்தால் தொடர்­பு­விட்­டுப்­போன பாட­சாலை நட்­புகள், சிறு­ப­ராய நட்­புகள் புதுப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. வீட்டு வேலைகள், உழைப்பு, பிள்­ளைகள் வளர்ப்பு, ஏனைய பொறுப்­புகள் என சுழன்று ஒரு­வி­த­மான மன அழுத்­தத்தில் இருப்­ப­வர்­க­ளுக்கு ஓய்வும் மன அமை­தியும் கிடைக்­கின்­றது.

ஒவ்­வொரு வரு­டமும் வாசிப்பு மாத­மான ஒக்­டோபர் மாதத்தில் புத்­தக பரி­மாறல் செய்­கையில் அம்­மா­தத்­தினை மிகவும் ஆர்­வத்­துடன் எதிர்­பார்த்துக் காத்­தி­ருப்­பார்கள். முதற் தடவை புத்­த­கங்கள் வாங்க பெற்றோர் உதவ வேண்டும். அவர்கள் புத்­த­கத்தை தெரிவு செய்­வ­தற்கும் பிரித்­த­றி­வ­தற்கும் கட்­டா­ய­மாக உதவ வேண்டும். சிறந்த அறிவு சார்ந்த புத்­த­கங்கள், மதம் சார்ந்த நூல்கள், நகைச்­சுவைப் புத்­த­கங்கள், நீதிக் கதைகள், மொழிபெ­யர்ப்புக் கதைகள், துப்­ப­றியும் சிறுவர் நாவல்கள், வண்­ணப்­பட கதைகள் போன்ற சிறந்த, சிறு­வர்­க­ளுக்குப் பொருத்­த­மான புத்­த­கங்­களைத் தெரிவு செய்ய ஆலோ­சனை வழங்­கு­வது முக்­கி­ய­மா­னது. பின்பு இறுதித் தெரிவை அவர்­க­ளி­டமே விட்­டு­விட வேண்டும்.

ஒக்­டோபர் மாதம் முடி­வ­தற்கு முன்பே அவர்­க­ளிடம் ஒரு உண்­டி­யலை ஒப்­ப­டை­யுங்கள். ஒரு நாளைக்கு குறைந்­தது ஒரு ரூபாய் இட்­டேனும் சேமிக்க தூண்­டுங்கள். இவ்­வாறு சேமிப்­பதால் அடுத்த வரு­டத்தில் சேமிக்க ஆரம்­பித்த அதே திக­தியில் 365 ரூபாய் அவர்­க­ளுக்குக் கிடைக்கும். அதே­போன்று ஐந்து அல்­லது பத்து ரூபா அள­விலும் பணத்­தை­யிட்டு சேமிக்­கலாம். இதனால் இன்னும் அதி­க­ள­வான சேமிப்பின் பலனை அவர்கள் பெறு­வார்கள். உற்­சா­கத்­து­டனும் சேமிக்க ஆரம்­பிப்­பார்கள். ஆகக் குறைந்­தது 365 ரூபாய் பணத்­திற்கு குறைந்த விலையில் நிறை­வான வண்­ணங்­க­ளுடன் கூடிய ஒரு புத்­த­கத்தை வாங்கி தனது நண்­ப­னுக்கு அன்­ப­ளிப்புச் செய்ய அந்தப் பிள்­ளையால் இய­லு­மா­கி­றது.

இதனால் ஒரு பிள்ளை நல்­ல­தொரு புத்­த­கத்தை அன்­ப­ளிப்பு செய்­கின்றான். ஒரு நண்­பனை வாசிக்கத் தூண்­டு­கிறான். அநா­வ­சி­ய­மான ‘ஸ்டிக்கர்’, நடி­கர்­களின் படங்கள், ‘கார்டூன்’ படங்கள், விளை­யாட்டு வீரர்­களின் படங்கள் போன்­ற­வற்றை வாங்­கு­வ­தற்குப் பதி­லாக பணத்தை சேமிப்­ப­தற்கும் பழ­கிக்­கொள்­கின்றான். தொல்லை தரும் தொலை­பேசி விளை­யாட்­டுக்­க­ளி­லி­ருந்து தொலை­வா­கிறான். வீணான பொழு­து­போக்­கு­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­கிறான். கவனம் சித­று­வ­தி­லி­ருந்தும் பாது­காக்­கப்­ப­டு­கிறான். வாசிக்கும் ஆர்­வத்­தினால் பணத்தை சேமிப்­ப­துடன் புத்­த­கங்கள் சேமிக்­கவும் பழ­கு­கிறான். புத்­த­கத்தை தனது ஆருயிர் நண்­ப­னாக ஏற்­றுக்­கொள்­கிறான்.

எனவே, வாசிப்பு எனும் மூல­த­னத்தால் ஒருவன் நன்­மை­ய­டை­கி­றானே அன்றி அவன் ஒரு­போதும் நட்­ட­ம­டை­வ­தில்லை. அள்ள அள்ள ஊறும் கிணற்­றைப்­போன்று வாசிக்க வாசிக்க ஒரு மனிதன் பக்­கு­வ­ம­டை­கிறான். அவ­னது அறிவும் விருத்­தி­ய­டை­கி­றது. இம்­மு­றையை சிறி­ய­வர்கள் மட்­டு­மன்றி பெரி­ய­வர்­களும் பின்­பற்­றலாம். சிறந்­த­தொரு நூலைத் தெரி­வு­செய்து ஒரு­வ­ருக்கு அன்­ப­ளிப்­பாகக் கொடுத்து அவர்­க­ளி­ட­மி­ருந்து இன்­னு­மொரு நூலை நாம் அன்­ப­ளிப்­பாக பெற­மு­டியும். அன்­ப­ளிப்புச் செய்யும் புத்­தகம் புதி­தா­கவே இருக்க வேண்டும் என்­றில்லை. வாசிக்கக் கூடிய நல்ல நிலையில் உள்ள எந்த ஒரு புத்­த­கத்­தையும், எந்த மொழிப் புத்­த­கத்­தையும் அன்­ப­ளிப்­பாக வழங்க முடியும்.
ஆகவே, வாசிப்­பெனும் மூல­த­னத்தை குறை­வில்­லாது இடுவோம். நிறை­வான பூர­ண­மான பலனைப் பெறுவோம். எமது எதிர்­கால சந்­த­தி­களை அறி­வு­மிக்­க­வர்­க­ளா­கவும், சிந்­தனா சக்­தி­யு­டை­வர்­க­ளா­கவும் உருவாக்குவோம். வாசிப்பை நேசிப்போம். வாழ்வை இரசிப்போம். இறுதியாக வாசிப்பினால் சேமிப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.