‘அல்லாஹ்’ பற்றிய ஞானசார தேரரின் கருத்து புத்தரின் போதனைகளுக்கு முரணானது

குர்­ஆ­னுக்கு விளக்கம் கொடுக்க ஒரு தகுதி வேண்டும் என்கிறார் சுதஸ்­ஸன தேரர்

0 675

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி அல்லாஹ் எனக் குறிப்­பிட்டு பெளத்த குரு ஒருவர் வெளி­யிட்ட கருத்து முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த அனை­வ­ரதும் மனதை நோக­டிக்கச் செய்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தை ஆயுதம் ஏந்தச் செய்­வ­தற்­கான கருத்­து­களே இவை. ஊட­கங்­களில் எவ்­வா­றான கரு­த்துக்கள் தெரி­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதை புத்த பெருமான் தெளி­வாகக் கூறி­யுள்ளார் என ஞான­சார தேரர் அண்­மையில் அல்லாஹ் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் முக­மாக நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கெக்­கி­ராவே சுதஸ்­ஸன தேரர் தெரி­வித்தார்.
அவர் ஊடக மாநாட்டில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘வடக்கில் தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு போராட்­டத்­துக்கு அழைப்­பு­வி­டுத்­தது போன்று குறிப்­பிட்ட தேரர் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அழைப்பு விடுத்­துள்ளார். அவர்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யுள்ளார். தமிழ் ஈழப்­போரின் போது முஸ்லிம் சமூ­கமே பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு உள­வுத்­த­க­வல்­களை வழங்­கி­யது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்­து­றை­யிலும் முஸ்லிம் சமூகம் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­டது. இன்றும் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முஸ்­லிம்கள் பாரிய ஒத்­து­ழைப்­பினை வழங்கி வரு­கி­றார்கள்.

மத்­திய கிழக்கு நாடுகள் எமது பணி­யா­ளர்­களை உள்­வாங்கிக் கொண்­டுள்­ளன. எமது நாட்­டுக்கு அந்­நிய செலா­வணி மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து கிடைக்­கி­றது. இதுவே எமது நாட்டின் பொரு­ளா­தார நிலைமை. ஒரு சில தேரர்­களின் தவ­றான கருத்­து­களால் தவ­றான போக்­கு­களால் அந்­நா­டுகள் எமக்­கான எண்ணெய் ஏற்­று­ம­தியை நிறுத்­தி­விட்டால் எமது நிலைமை என்­ன­வாகும்.

கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்தை மோச­மாக சாடிய அமைச்­சர்கள் நிதி உத­விகள் வழங்­கு­மாறு இஸ்­லா­மிய நாடு­க­ளிடம் மண்­டி­யி­டு­கின்­றார்கள். அரபு நாட்­டுத்­த­லை­வர்­க­ளிடம் முழந்­தா­ளி­டு­கி­றார்கள். பங்­க­ளா­தே­ஷிடம் கடன் வாங்­கு­கி­றார்கள்.இவ்­வாறு உதவி பெற்­றுக்­கொள்­ளும்­போது அவர்­க­ளிடம் இன­வாதம் இல்லை. அரபு நாடு­க­ளி­னதும், முஸ்லிம் நாடு­க­ளி­னதும் தலை­வர்­களை வணங்கி நிதி­யு­தவி பெற்­றுக்­கொண்டு இங்கு வந்து முஸ்­லிம்கள் அனை­வரும் அடிப்­ப­டை­வா­திகள் என்­கி­றார்கள்.

எல்­லோ­ருக்கும் சமய கிரந்­தங்­களை விமர்­சிக்க முடி­யாது. குர்­ஆ­னுக்கு விளக்கம் கொடுக்க ஒரு தகுதி வேண்டும். ஒருவர் சமய கிரந்­தங்­களை விமர்­சிப்­ப­தென்றால் அவர் அந்தக் கிரந்தம் உரு­வான சூழல், சமூ­க­நி­லைமை, இது உரு­வான கால அர­சியல் முறைமை என்­பன பற்­றி­யெல்லாம் அறிந்­தி­ருக்க வேண்டும் அல்குர் ஆனில் மனித உரி­மைகள் பற்றி போதிக்­கப்­பட்­டுள்­ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இரண்டு தொலைக்­காட்சி சேவைகள் சில தேரர்­களை அழைத்து குரல் பதி­வு­களை மேற்­கொண்டு அவற்றை அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்­தி­னார்கள். ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது இந்த தொலைக்­காட்சி சேவைகள் மும்­மு­ர­மாக செயற்­பட்­டன. பின்பு பொதுத்­தேர்­த­லின்­போதும் இவ்­வாறே செயற்­பட்­டார்கள். இது ஓர் அர­சியல் நிகழ்ச்சி.

இப்­போது ஏதேனும் ஒரு தொலைக்­காட்சி சேவை இது­பற்றி பேசு­கி­றதா? மீண்டும் தேர்­த­லொன்று வரப்­போ­கி­றது. மாகா­ண­சபைத் தேர்தல், அதன் பின்பு 2,3 வரு­டங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல், தேர்தல் வரும்­போது புதைக்­கப்­பட்­டுள்ள சட­லங்­களைப் பற்றிப் பேசு­வார்கள்.

நான் ஏப்ரல் 21 ஆம்­தி­க­தியே பிறந்தேன். அதனால் நான் இறக்­கும்­வரை உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் எனது நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.
இவ்­வா­றான தேரர்கள் எப்­போதும் இன­ரீ­தி­யான பிரச்­சி­னை­களை உரு­வாக்­கவே முயற்­சிக்­கி­றார்கள். ஆனால் உண்­மை­யான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது அப்­ப­டியே இருக்­கின்­றன. இதனால் நாட்டு மக்­களே பாதிப்­ப­டை­கி­றார்கள். இஸ்­லா­மிய புரட்­சி­யொன்று ஏற்­பட்­டதன் பின்பு பல நாடு­களில் பிரச்­சி­னைகள் உரு­வா­கின. இந்த இஸ்­லா­மிய புரட்­சியின் பின்­ன­ணி­யினை ஆராய்ந்து பார்த்தால் அங்கே அர­சி­யலே இருந்­தது இலங்­கை­யிலும் இதுவே நடந்­தது.

பெளத்த குரு­மார்கள் புத்­த­பெ­ரு­மானின் போத­னைப்­ப­டியே ஊட­கங்­களில் கருத்து தெரி­விக்­க­வேண்டும். மாறாக அர­சியல் பின்­ன­ணியைக் கொண்டு கருத்­துக்­கூ­றக்­கூ­டாது. இன­வாதம் பேசக்­கூ­டாது. கொலைக்­குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­தலை செய்யும் வகை­யி­லான கருத்­துக்கள் வெளி­யி­டக்­கூ­டாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.