தெஹிவளையில் பள்ளி மீது தாக்குதல்

கைதுசெய்யப்பட்ட தாக்குதல்தாரியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

0 414

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தெஹி­வளை பாத்­தியா மாவத்­தையில் அமைந்­துள்ள பாத்­தியா மஸ்ஜித் என்று அழைக்­கப்­படும் மத்­ர­ஸதுல் பெளசுல் அக்பர் பள்­ளி­வாசல் வாயில் நேற்றுக் காலை 8.00 மணி­ய­ளவில் விஷ­மி­யொ­ரு­வனால் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது.

விரைந்து செயற்­­பட்ட கொஹு­வலை பொலிஸார் சி.சி.ரி.வி பதிவு மற்றும் தாக்­கு­தல்­தாரி வருகை தந்த மோட்டார் சைக்­கிளின் பதி­வி­லக்கம் என்­பன­வற்றின் மூலம் அ

வரை கைது செய்­துள்­ளனர். இன்று அவர் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டவுள்ளார்.

பள்­ளி­வாசல் கதவு மோட்டார் சைக்­கிளால் மோதப்­பட்டு தாக்­கப்­பட்­ட­போது முன்­னா­லுள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவ­ரது வீட்டுக் கதவும் தாக்­கப்­பட்­டது.

பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வசிக்கும் ரம்ஸீன் அஸீஸ் மற்றும் பள்­ளி­வாசல் முஹத்தினார் எம்.அலியார் ஆகியோர் கொஹு­வலை பொலிஸில் இது தொடர்­பான முறை­ப்பா­டு­களைப் பதிவு செய்­துள்­ளனர். சந்­தேக நபர் போதி­ய­வத்­தயைச் சேர்ந்­தவர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இப்­பள்­ளி­வாசல் சட்­ட­வி­ரோத நிர்­மாணம் என நகர அபி­வி­ருத்தி அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.