20 ஐ ஆதரித்த எம்.பி.க்களின் முறைப்பாடு போலி நாடகம்

இரா­ச­மா­­ணிக்கம் பேசி­யதால் ரோஷ­ம் வந்­துள்­ள­து என்­கிறார் ஹக்­கீம்

0 614

(எம்.ஏ.எம்.அஹ்ஸன்)
ஞான­சார தேருக்கு எதி­ராக முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளமை ஒரு போலி நாடகம் எனக் குறிப்­பிட்­டுள்ள முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கூஜா தூக்கிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் தேர­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­வதில் எந்­தப்­ப­யனும் கிடை­யாது என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வீர­கே­ச­ரியின் ‘சம­காலம்’ அர­சியல் கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிடும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

ஞான­சார தேரர் அல்­லாஹ்வை அவ­ம­திக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரி 20 ஆம் திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஆறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அண்­மையில் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­தி­ருந்­தனர். இது தொடர்பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

அது ஒரு போலி­யான வேலை. அதனால் நடை­பெ­றப்­போ­வது எதுவும் இல்லை. காலம் கடந்த பின் ஞானம் வந்­தது போல யாரோ ஒருவர் செய்­ததைப் பார்த்து செய்­கி­றார்கள். இரா­ச­மா­ணிக்கம் இதைப்­பற்றி பேசி விட்டார் என்­ப­தற்­காக ரோஷம் வந்து செய்­தி­ருக்­கி­றார்கள். இது பத்தாம் பசளித் தன­மான அர­சியல். இதைப் பார்த்து எனக்கே சிரிப்பு வரு­கின்­றது. எங்­க­ளுக்­கென்று ஒரு தனி­யான நிலைப்­பாடு இருக்க வேண்டும். பௌத்த குரு­மார்­களின் செயற்­பா­டு­களை பௌத்த மக்­களே விமர்­சிக்­கின்ற நிலைமை வந்­தி­ருக்­கின்ற நிலையில் நாங்கள் சென்று அவர்­களைக் கைது செய்­யு­மாறு அல்­லது சிறையில் அடைக்­கு­மாறு கோரு­வது அவர்­க­ளுக்­கான வாய்ப்பை அதி­க­ரித்துக் கொடுப்­ப­தா­கவே அமையும். ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கூஜா தூக்கிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் தேர­ருக்கு எதி­ராக கை தூக்கிக் கொண்டிருப்பவர்கள் தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்வதில் எந்தப்பயனும் கிடையாது. இது ஒரு போலி நாடகம் என்பதே எனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்­பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.