தடுப்பூசி ஏற்றியோருக்கே உம்ராவுக்கு அனுமதி

- சவூதி சுகாதார அமைச்சு

0 521

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொரோனா வைர­ஸுக்கு எதி­ரான தடுப்­பூ­சி­களை ஏற்­றிக்­கொண்­டுள்ள யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு மாத்­தி­ரமே உம்­ராவை நிறை­வேற்ற முடியும் என்றும் மக்­காவின் பெரிய பள்­ளி­வா­சலில் தொழு­கையில் ஈடு­ப­ட­மு­டி­யும் என்றும் சவூதி அரே­பிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தவக்­கல்னா (Tawakkalna) வின் விண்­ணப்பம் எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு பின் பூர­ண­மாக ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும் என சவூதி சுகா­தார அமைச்சு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் நோய் தடுக்கும் சக்­தி­யு­டை­ய­வர்கள் என தடுப்­பூ­சி­களை ஏற்­றிக்­கொண்­டுள்­ள­வர்­களே கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் தெரி­வித்­துள்­ளது.
தவக்­கல்னா விண்­ணப்­பத்தில் விண்­ணப்­ப­தா­ரி­களின் சுகா­தார நிலைமை கொரோனா தடுப்­பூ­சிகள் இரண்­டினை ஏற்­றிக்­கொண்­டுள்­ள­வர்­க­ளி­னதே வெளிப்­ப­டுத்­தப்­படும் பைஸர் பயோடெக், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேகா மற்றும் மொடர்னா அல்­லது ஜோன்சன் & ஜோன்சன் ஒரு தடுப்­பூசி ஏற்­றுக்­கொண்­ட­வர்­க­ளி­னதே சுகா­தார நிலைமை விண்ணப்­பத்தில் வெளிப்­ப­டுத்­தப்­படும்.

நோய் தடுக்கும் சக்தி குறிப்­பிட்ட அனு­ம­திக்­கப்­பட்ட தடுப்­பூசி இரண்­டா­வது டோஸ் ஏற்­றிக்­கொண்ட நாளி­லி­ருந்து ஆரம்­ப­மாகும். இதே­வேளை ஜோன்சன் & ஜோன்சன் தடுப்­பூசி ஏற்­றிக்­கொண்­ட­வர்­களின் நோய் தடுக்கும் சக்தி தடுப்­பூசி ஏற்றி 14 நாட்­களின் பின்பே ஆரம்­ப­மாகும்.

இதே வேளை சைனோபார்ம் மற்றும் சினோவக் தடுப்­பூசி ஏற்­றிக்­கொண்­டுள்­ள­வர்­களின் நோய் தடுக்கும் சக்­தியை உலக சுகா­தார ஸ்தாபனம் (WHO) அனு­ம­தித்­துள்­ளது. என்­றாலும் சவூதி அரே­பியா அனு­ம­தித்­துள்ள தடுப்­பூ­சி­களில் ஒன்­றினை மேல­தி­க­மாக பெற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும் என சவூதி சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
தடுப்­பூசி ஒன்­றினை ஏற்­றிக்­கொண்­ட­வர்கள் மற்றும் தடுப்­பூசி முத­லா­வது டோஸ் ஏற்­றிக்­கொள்­வ­தற்கு முன்போ அல்­லது பின்போ தொற்­றினால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­த­வர்­களின் சுகா­தார நிலைமை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.

பைசர், அஸ்ட்ரா செனேகா அல்­லது மொடர்னா தடுப்­பூசி முத­லா­வது டோஸ் ஏற்­றிக்­கொண்­ட­வர்­கள்­போன்று சைனோபார்ம் மற்றும் சினோவெக் இரண்டு டோஸ்கள் ஏற்­றிக்­கொண்­ட­வர்கள் ஒரு டோஸ் ஏற்­றிக்­கொண்­ட­வர்­க­ளா­கவே தவக்­கல்னா விண்­ணப்­பத்தில் கரு­தப்­ப­டு­வார்கள்.

ஹஜ், உம்ரா அமைச்சு வெளி­யிட்­டுள்ள விதி­க­ளின்­படி உம்­ரா­வுக்­கான அனு­ம­தியும் மக்கா பெரிய பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­கான அனு­ம­தியும் குறிப்­பிட்ட அனு­ம­திக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­களை ஏற்­றுக்­கொண்­டுள்ள யாத்­தி­ரி­கர்­க­ளுக்கே வழங்­கப்­படும். அத்­தோடு முத­லா­வது தடுப்­பூசி ஏற்றிக் கொண்டு 14 நாட்கள் பூர்த்­தி­யா­ன­வர்கள் மற்றும் கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­த­வர்­களின் சுகா­தார நிலைமை தவக்­கல்னா விண்­ணப்­பத்தில் உள்­ள­டங்­கி­யுள்ள நிலை­மையை அவ­தா­னித்து அனு­மதி வழங்­கப்­படும். இந்த விண்­ணப்­பங்கள் எதிர்­வரும் 10ஆம் திகதி ஆரா­யப்­பட்டே தீர்­மா­னிக்­கப்­படும்.

ஒரு தடுப்­பூசி ஏற்­றிக்­கொண்­டுள்­ள­வர்கள் அல்­லது கொரோனா தொற்று ஏற்­பட்டு குண­ம­டைந்­த­வர்கள் உம்­ரா­யாத்­தி­ரைக்­கான அனு­ம­தியைப் பெற முடி­யாது. அத்­தோடு பெரிய பள்­ளி­வா­சலில் தொழுகைகளில் ஈடுபட முடியாது மற்றும் மதீனாவில் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் மற்றும் அவரது அடக்கஸ்தலத்துக்கும், ரவ்தா சரீபுக்கும் விஜயம் செய்ய முடியாது.

ஒரு தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் நோய்தடுப்புச்சக்தி, மற்றும் அவர்களது சுகாதார நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சவூதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.