ஓட்டமாவடி ஜனாஸா அடக்கத்துக்கு இட ஒதுக்கீட்டால் மஜ்மா நகரில் காணி இழந்தோருக்கு மாற்றுக்காணிகள் வழங்க கோரிக்கை

0 408

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் மைய­வா­டிக்­காக காணிகள் பெறப்­பட்­டதால் 14 பேர் 14.5 ஏக்கர் காணி­களை இழந்­துள்­ளனர். இவர்­க­ளுக்கு மாற்றுக் காணிகள் வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லாளர் வீ.தவ­ரா­ஜா­விடம் கடந்த திங்­கட்­கி­ழமை மகஜர் ஒன்றை கைய­ளித்­துள்­ளனர்.

இது தொடர்­பாக மஜ்மா நகர் கிராம அபி­வி­ருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தெரி­விக்­கையில், கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொரோனா உடல்­களை நல்­ல­டக்கம் செய்யும் மைய­வா­டிக்கும் மற்றும் அதன் பாது­காப்பு வல­யத்­துக்­கா­கவும் மொத்­த­மாக 14.5 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் காணி­களை இழந்­துள்ள 14 நபர்­களும் பல வரு­டங்­க­ளாக பாது­காத்து வந்த இருப்­பி­டங்கள், ஆட்டுத் தொழு­வங்கள், மற்றும் பயிர் செய்­கைகள் காணி­களை இழந்து பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நிர்க்­க­தி­யான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். இதனைக் கருத்திற் கொண்டு பாதிப்­ப­டைந்­துள்ள நபர்­க­ளுக்கு கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச செய­லக எல்­லைக்குள் மாற்றுக் காணி­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுத்து பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.