லயன்ஸ் கழகம் நடாத்தும் கொவிட் விழிப்புணர்வு நிகழ்நிலை விவாதம்

0 397

நாடளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும்  மிக முக்கியமான பிரச்சனை கொரோனா வைரஸ் தொற்று. இதன் பொருட்டு சர்வதேச லயன்ஸ் கழகம் ,  டிஸ்ட்ரிக்ட் 306 பி1 பிரிவை சேர்ந்த லயன்ஸ் அங்கத்தவர்களினால் நிகழ்நிலை விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த  விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இரவு 7.30 மணி தொடக்கம் நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க MBBS (COL), MD (COL), MRCO (UK), MD (Bristol), PhD (COL), FRCP (lOND), FCCP, FNASSL, வைத்தியர் பியர் கோரி M.D., M.P.A. மற்றும் வைத்தியர் லென்னி டா கோஸ்டா MBBS, DGM, FCMT (USA), FINEM ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் அழித்து, நமது அப்பாவி மக்கள் அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தும் இந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திலேயே குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் முன்கூட்டிய பதிவு செய்து உங்கள் இடத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

பதிவுகளுக்கு lionscovid@gmail.com என்ற மின்னஞ்சலுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.