2015க்கு முன் ஜெனிவாவுடன் இலங்கை அரசு

0 498

சிங்­க­ளத்தில் : ஒஸ்டின் பெர்னாண்டோ
(“அனித்தா” பத்­தி­ரிகை)
தமிழில் : எம்.எச்.எம்.நியாஸ்

25/1 பிரே­ரணை (2014.03.27)
2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்­காவை ஒரு செய­லி­ழந்த, பொறுப்­பற்ற நாடா­கவே சர்­வ­தேசம் கணித்­தது. அதன் விளை­வாக மீண்டும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­ கூ­றக்­கூ­டிய மற்றும் மனித உரி­மை­களின் விருத்­திக்­கான 25/1 பிரே­ரணை ஏற்றுக் கொண்­டது. அதில் எடுக்­கப்­பட்ட முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் பின்­வ­ரு­மாறு:

  1. நேர்­மை­யாக ஆய்வை மேற்­கொள்­ளக்­கூ­டி­யதும், பொறி­மு­றையில் இழப்பை ஏற்­ப­டுத்­தாத கொள்­கை­யா­கவும், மாற்­றங்­களைக் கொண்ட நீதி மிக்க வழி­முறை ஆகி­ய­வற்றை பரிந்­துரை செய்த மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூற்றை ஏற்றுக் கொள்ளல்.
  2. ஸ்ரீ லங்கா அர­சாங்­கத்­தினால் எதிர்­கால கட்­ட­மைப்­புக்­களை அமைத்தல், நிலக்­கண்­ணி­களை அப்­பு­றப்­ப­டுத்தல், இடம்­பெ­யர்ந்­தோரில் பெரும்­பான்­மை­யி­னரை மீளக் குடி­யேற்­றி­யமை ஆகி­ய­வற்றை பாராட்­டு­வ­துடன், நீதி, நல்­லி­ணக்கம், காணி உரிமை மற்றும் வாழ்­வா­தாரம் ஆகிய விட­யங்­களில் செய்து முடிக்க வேண்­டிய பல விட­யங்கள் இருப்­பதை சுட்­டிக்­காட்டல்.
  3. வட­மா­காண தேர்­தலை நடத்­தி­யமை பற்றி பாராட்­டுதல்.
  4. 2013 ஆகஸ்ட் மாதத்தில் மனித உரி­மைகள் ஆணை­யாளர் ஸ்ரீ லங்­கா­வுக்கு வருகை தரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­த­மை­யை­யிட்டு பாராட்டுத் தெரி­வித்தல்.
  5. சிவில் சமூக செயற்­பாட்­டி­னரைத் துன்­பு­றுத்தல், மனித உரி­மைகள் மீறல், சிறு­பான்மை மதத்­தி­னரை துன்­பு­றுத்தல், நீதித்­து­றையின் சுதந்­தி­ரத்தை பறித்தல் ஆகிய விட­யங்­களில் ஈடு­ப­டா­தி­ருப்­பதில் கவனம் செலுத்­துதல்.
  6. சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான உரி­மைகள் ஆகிய விட­யங்­களில் சட்­டங்­களை மீறாது சுயா­தீ­ன­மா­னதும் நம்­பிக்கை தரக்­கூ­டி­ய­து­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளும்­படி கேட்டுக் கொள்ளல். அது­மட்­டு­மன்றி அது விட­யங்­களில் பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் பற்­றிய அறிக்­கை­களால், கோரப்­படும் பரிந்­து­ரை­களை அரசால் நடை­மு­றைப்­ப­டுத்தல்.
  7. கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட உடன்­பா­டான பரிந்­து­ரை­களை ஸ்ரீ லங்கா அர­சினால் நடை­மு­றை­ப்­படுத்த வேண்டும். அது­மட்­டு­மன்றி நீதி, சமத்­துவம், பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­காக அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். பெறப்­பட்ட தீர்­மா­னங்­களை சட்­ட­ரீ­தி­யான அர்ப்­ப­ணங்­க­ளுக்­காக அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தற்கு ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்ட வேண்­டு­கோள்­களை மீள முன்­வைத்தல்.
  8. ஊட­க­வி­ய­லா­ளர்கள், மனித உரி­மை­களைப் பாது­காப்போர், சிறு­பான்மை சம­யத்­த­வர்­களின் உறுப்­பி­னர்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், பௌத்த, ஹிந்து, கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் தேவஸ்­தா­னங்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து வகை­யான தாக்­கு­தல்கள் பற்­றிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­துடன் அது போன்ற தாக்­கு­தல்கள் எதிர்­கா­லத்தில் நடை­பெ­றா­ம­லி­ருப்­ப­தற்கும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்தல்.
  9. 2013 ஆகஸ்ட் முதலாம் திகதி ‘வெலி­வே­ரி­யா’வில் அரச படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட மோச­மான தாக்­குதல் மற்றும் அது பற்றி 2013 இல் இரா­ணுவப்
    படை­யி­னரால் நடத்­தப்­பட்ட விசா­ரணை பற்­றிய அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்­தும்­படி அரசைக் கேட்டுக் கொள்ளல்.
  10. 13ஆவது யாப்புத் திருத்­தத்­துக்கு உடன்­பா­டாக அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் தீர்­மா­னங்­களை எடுக்­கக்­கூ­டிய வகையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்தை ஊக்­கு­வித்தல்.
  11. மனித உரி­மைகள் பற்­றியும் இடம்­பெ­யர்ந்தோர் பற்­றியும் ஐ.நா வின் விஷேட பிர­தி­நி­திகள் 2013 டிசம்­பரில் ஸ்ரீ லங்­கா­வுக்கு வருகை தந்­தமை பற்றி மகிழ்ச்­சி­ய­டை­வ­துடன், இடம்­பெ­யர்ந்த அனைவர் சம்­பந்­த­மா­கவும் முறை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கும் கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது. மேலும் இடம்­பெ­யர்ந்தோர் கல்­வியைப் பெறும் உரி­மைகள் பற்றி ஆராய்­வ­தற்கு மற்­று­மொரு விஷேட குழு­வுக்கு அழைப்பு விடுத்­தது பற்­றியும் மகிழ்ச்­சியைத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் ஏனைய விட­யங்கள் பற்­றியும் பல்­வேறு குழுக்­க­ளுடன் பேசி ஆராய்­வது பற்­றியும் அரசு முறை­யான ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும்.
  12. நடை­பெற்று வரும் மனித உரி­மைகள் மீறல் விட­யத்தில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் பெறு­பே­று­களை அரசு ஏற்­ப­டுத்­த­வில்லை. எனவே அது விட­யத்தில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை நடத்­து­வது சம்­பந்­த­மாக மனித உரி­மைகள் ஆணை­யாளர் கீழ்­வரும் விட­யங்­களை கோரி­யுள்ளார்.
    i. ஸ்ரீ லங்­காவில் மனித உரி­மைகள் பற்­றிய நட­வ­டிக்­கைகள் பற்­றியும் அது விட­யத்தில் ஏற்­பட்­டுள்ள விருத்தி பற்­றியும் மதிப்­பீடு செய்தல்.
    ii. கற்­ற­றிந்த பாடம் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு இயங்­கிய காலத்தில் இரு சாரார் மூல­மா­கவும் மனித உரி­மைகள் மிக மோச­மாக மீறப்­பட்­டி­ருத்தல் மற்றும் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டி­ருத்தல் ஆகி­யன பற்றி முழு­மை­யான விசா­ர­ணை­யொன்றை நடத்­துதல். அது­மட்­டு­மன்றி குறித்த விஷேட ஆணைக்­கு­ழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளது பக்­கச்­சார்­பற்ற பொறுப்புக் கூறலை உறு­திப்­ப­டுத்தல்.
    iii. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 28 ஆவது கூட்டத் தொடரின் போது ஸ்ரீ லங்­காவின் மனித உரி­மைகள் விடயம் பற்றி வாய்­மூலம் எடுத்­துக்­கூறல். அதன்­போது ஆணைக்­கு­ழுவின் தற்­போ­தைய பிரே­ர­ணை­களை செயல்­ப­டுத்தல் பற்­றியும் அறிக்கை சமர்ப்­பித்து கலந்­து­ரை­யா­ட­லுக்கு இடம்­கொ­டுத்தல்.
    ஸ்ரீ லங்கா அரசின் ஆலோ­ச­னைகள், கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் உடன்­பாட்­டுடன் இந்தப் பிரே­ர­ணையை செயல்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான தொழில்­நுட்ப உத­வி­க­ளுக்­கான ஒத்­து­ழைப்பை வழங்­குதல்.

இவ்­வா­றாக பரிந்­து­ரை­களும் பிரே­ர­ணை­களும் அர­சுக்கு முன்­வைத்­தாலும் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த அரசு முயற்­சிக்­க­வில்லை. அதற்­கான கார­ணங்­களைக் கூறு­வது அர்த்­த­மற்­றது. இந்த சந்­தர்ப்­பத்தில் சர்­வ­தேசம் பொறு­மையின் எல்­லையைத் தாண்டி விட்­டது. அதன் பெறு­பே­றாக 2015 மார்ச் மாதத்தில் மனித உரி­மைகள் ஆணைக்­குழு ஸ்ரீ லங்­கா­வுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள எண்­ணி­யது. பொரு­ளா­தார தடையை ஏற்­ப­டுத்­து­வது, உட்­பட ஸ்ரீ லங்கா அரசை பல்­வேறு வழி­களில் தண்­டிக்­கவும் முயன்­றது.

நல்­லாட்சி அரசின் வரு­கையும் மனித உரி­மை­க­ளுக்­கான பிரே­ர­ணை­களும்

2015 ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­க­னவே ஆட்­சி­யி­லி­ருந்த அரசு தோற்­க­டிக்­கப்­பட்டு நல்­லாட்சி என்ற பெயரில் புதிய அரசு பத­விக்கு வந்­தது. நல்­லாட்சி அரசின் வெளி­நாட்­ட­மைச்­ச­ரான ‘மங்­கள சம­ர­வீர’ முன்னாள் அரசின் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற மேலும் காலம் தேவைப்­ப­டு­கி­றது என்று ஐ.நா வுக்கும் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கும் கடிதம் அனுப்­பினார்.

2015 ஒக்­டோபர் முதலாம் திகதி மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் பற்றி எவரும் கலந்­து­ரை­யாட முன் வர­வில்லை. அது திடீ­ரென வானத்­தி­லி­ருந்து விழ­வில்லை. மகிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சினால் 2009 மே மாதம் 27ஆம் திகதி சுய­ந­லத்­துடன் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வாறு அது செய­லி­ழந்­தமை கார­ண­மாக சர்­வ­தேசம் விரக்­தி­ய­டைந்­தது. அதன் விளை­வாக, 2015 ஒக்­டோ­பரில் மனித உரிமை ஆணைக்­குழு இணை அனு­ச­ர­ணையை ஏற்றுக் கொண்­டது. இந்த நிலை மகிந்த ராஜ­பக்ஷ செய­லி­ழந்து, பொறுப்­பற்­ற­வ­ராக அடை­யாளம் காணப்­பட்டார். அது விட­யத்தில் நல்­லாட்சி அரசும் பொறுப்புக் கூற வேண்டி வரும். நல்­லாட்சி அரசின் கோரிக்­கைக்கு செவி­ம­டுத்த சர்­வ­தேசம், பழைய தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு புதிய (நல்­லாட்சி) அர­சுக்கு அதற்­கான காலக்­கெ­டுவை நீடிக்க இட­ம­ளித்­தது. மேலும் ஏற்­க­னவே 2009 மே மாதம் 27ஆம் திகதி முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­யையும் அதன்பிறகு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணையையும் மகிந்த ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும். அதன் விளைவாகவே 2015 ல் மகிந்த ராஜபக்ஷ அல்லது நல்லாட்சி அரசு சர்வதேசத்தின் பொருளாதாரத் தடை போன்ற கெடுபிடிகளுக்கு சிக்க வேண்டியேற்பட்டது. மேற்படி குறிப்பிட்ட ஒவ்வொரு (அரசும் ஐ.நா வும்) இணைந்த பிரேரணைக்கு மகிந்த ராஜபக்ஷவே முன்னின்று வாக்குறுதியளித்திருந்தார். எனவே அனைத்துப் பிரேரணைகளிலும் மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருந்தமையால் அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு பல நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் புதியதோர் பிரேரணையை அரசுக்கு முன்வைத்தது. இது கூட இவ்விடயத்தில் புதிய பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.