எமக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது

கொவிட் தொற்றினால் உறவுகளைப் பறி கொடுத்தவர்களின் துயரக் கதைகள்

0 391

சிங்­க­ளத்தில்: நதீஸா அத்துகோரள
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்­கையில் கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் மர­ணிப்­போர்­களின் எண்­ணிக்கை உயர்­வ­டைந்­துள்ள சூழலில் மக்கள் தங்­க­ளது உயிர்­க­ளுக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத நிலையில் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

கொவிட் 19 மர­ணங்கள் பத்­தா­யி­ரத்­தையும் கடந்­து­விட்­டது. இந்த பயங்­கர தொற்று நோயின் முடி­வினை எப்­போது எட்­டிக்­கொள்ள முடியும் என்ற நிச்­ச­ய­மற்ற தன்­மையில் உலகம் இருக்­கி­றது. சுவா­சிக்க இய­லாத நோயா­ளர்­களால் இலங்­கை­யி­லுள்ள வைத்­தி­ய­சா­லைகள் அனைத்தும் நிரம்பி வழி­கின்­றன.

இன்று வைத்­தி­ய­சா­லை­களில் ஏனைய சாதா­ரண நோயா­ளர்­க­ளுக்கு இட­மில்லை. வைத்­தி­ய­சா­லை­களின் விடு­திகள் தீவிர சிகிச்சை பிரி­வு­க­ளா­க­மாறி கொவிட் 19 நோயா­ளர்­களால் நிரம்­பி­யுள்­ளன. குறு­கிய கால எல்­லைக்குள் கொவிட் 19 எமக்கு தந்­து­விட்­டுள்ள வேத­னைகள் மட்­டிட முடி­யா­தவை. ஆயி­ரக்­க­ணக்­கான பிள்­ளைகள் தற்­போது பெற்­றோரை இழந்­துள்­ளனர். பெற்­றோ­ருக்கு பிள்­ளைகள் இல்­லாமற் போயுள்­ளனர். கண­வ­ருக்கு மனைவி, மனை­விக்கு கணவர் மற்றும் உற­வி­னர்கள் கொவிட் 19 தொற்­றினால் பலி­யெ­டுக்­கப்­பட்டு விட்­டார்கள். இன்று நாம் வாழ்க்­கையின் நிச்­ச­ய­மற்ற நிலை­மைக்கு மத்­தி­யிலே மூச்­சு­விட்டுக் கொண்­டி­ருக்­கிறோம்.

கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் கொவிட் 19 விடு­தியில் கட­மை­யாற்றும் வைத்­தி­யரின் அனு­ப­வங்கள் சில­வற்றை இங்கு பகிர்ந்து கொள்­கிறோம். மக்கள் இத்­தொற்­றி­லி­ருந்தும் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கான வலு­வூட்­டல்­க­ளுக்­கா­கவே இவ் அனு­ப­வங்கள் இங்கு பகி­ரப்­ப­டு­கின்­றன. அன்றி பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­வ­தற்­கல்ல.
நாட்டில் கொவிட் 19 மர­ணங்கள் அதி­க­ளவில் நிகழும் மாவட்­ட­மாக காலி மாவட்­டமே இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இம்­மா­வட்­டத்தில் தினம் சுமார் 20 கொவிட் 19 மர­ணங்கள் நிகழ்­கின்­றன. கொவிட் 19 வைத்­தி­ய­சாலை விடு­தி­களில் பணி­பு­ரியும் அதி­க­ள­வான வைத்­தி­யங்கள் தாதி­யர்கள் கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள்
கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் தற்­போது சுமார் 200க்கும் அதி­க­மான கொவிட் நோயா­ளர்கள் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர். சில நோயா­ளர்கள் கதி­ரை­களில் அமர்ந்­தி­ருக்­கின்­றார்கள். நல்ல நிலை­மையில் வைத்­தி­சா­லைக்கு வரும் நோயா­ளர்கள் சிறிது நேரத்தில் கஷ்­டப்­பட்டு சில நிமி­டங்­களில் மூச்சு நின்று விடு­கி­றது. நோயா­ளர்கள் நாங்கள் பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் போதே இறந்து விடு­கி­றார்கள். சில நோயா­ளர்கள் ஒக்­ஸி­ஜனில் சுவா­சித்துக் கொண்டு எங்­களை ஏக்­கத்­துடன் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இதனை எங்­களால் ஒது போதும் மறக்க முடி­யாது. கொவிட் நியு­மோ­னி­யா­வுக்கு ஆளான நோயா­ளி­களைக் காப்­பாற்­று­வ­தற்கு நாம் முழு முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­கிறோம்.அவர்­களை கைவி­டு­வ­தில்லை.என்­றாலும் அவர்கள் எங்­களை விட்டும் சென்று விடு­கி­றார்கள் கொவிட் எதிரி இவ்­வ­ள­வுக்கு மோச­மா­னவன்.

ஒரு தாயார் கொவிட் நியு­மோ­னியா நிலை­மைக்­குள்­ளாகி மூச்சு விடு­வதில் மிகவும் கஷ்­டப்­பட்டார். இறு­தியில் தீவிர சிகிச்­சை­பி­ரிவில் அத்­தாயார் சுவா­சிக்க முடி­யாது தடு­மா­றிய நிலைமை. அந்த துய­ரத்தை விப­ரிக்க முடி­யாது அத்­தா­யாரின் உயிர் பிரிந்தபோது அவர் எனது ஒரு கையை இறுக்­கப்­பற்­றிப்­பி­டித்துக் கொண்­டி­ருந்தார் அத்தாய் ஏதோ கூறு­வ­தற்கு முயற்­சித்தார்.ஆனால் அவரால் முடி­யா­மற்­போ­னது.எங்கள் முன்னால் திடீ­ரென மக்கள் இறப்­பதை எம்மால் தாங்­கிக்­கொள்ள முடி­யாது.

30 வய­தான இளம் வய­தான ஒருவர். அவ­ருக்கு எவ்­வித தொற்று நோய்­களும் இருக்­க­வில்லை. கொவிட் தடுப்­பூசி இரண்­டி­னையும் ஏற்­றிக்­கொண்­டி­ருந்­தவர் அவர். இரண்டு மூன்­று­தி­னங்கள் சாதா­ர­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்தார். அவ­ரது மனை­விக்கு குழந்தை பிறந்து 6 மாதங்­களே ஆகி­யி­ருந்­தது. அந்த இளம் தந்­தைக்கு மனதில் எத்­த­கைய எதிர்­பார்ப்­புகள் இருந்­தி­ருக்கும்.அவ­ரது மனைவி வீடியோ தொழி­நுட்பம் ஊடாக தினமும் அவ­ருடன் கதைப்பார்.

“டாக்டர் எனக்கு நோய் அறி­கு­றிகள் இல்­லை­யல்­லவா? எப்­போது வீட்­டுக்குச் செல்ல முடியும்? என்று அவர் அடிக்­கடி என்­னிடம் கேட்பார். ஒரு நாள் நான் நோயா­ளர்கள் விடு­திக்குச் சென்ற போது அவர் அங்­கி­ருக்­க­வில்லை.

தீவிர சிகிச்சை பிரிவில் ஒக்­சிஜன் இயந்­தி­ரத்­துடன் பாரிய போராட்டம் நாடாத்திக் கொண்­டி­ருந்தார். நான் பாது­காப்பு அங்கி அணிந்து கொண்டு அவ­ரிடம் சென்றேன். அப்­போது எனது கரத்தை பல­மாக பற்­றிக்­கொண்டார். கண்­களில் நீர் வழிந்து கொட்­டி­யது. என்­னிடம் வேண்­டு­கோ­ளொன்­றினை விடுத்தார். வீட்­டா­ருக்கு வீடியோ அழைப்­பொன்­றினை ஏற்­ப­டுத்தி என்னை வீட்­டா­ருக்குக் காட்­டுங்கள் என்று வேண்­டிக்­கொண்டார். அவ­ரது வீட்டார் அழு­தார்கள். அது அவர் இறு­தி­யாக வீட்­டாரைத் தொடர்பு கொண்ட துய­ரான நிகழ்ச்­சி­யாகும். சில மணித்­தி­யா­லங்­களின் பின்பு கொவிட் கொலை­யாளி அவரை எடுத்துச் சென்­று­விட்டான்.

மேலும் 55 வய­தான தாயார் ஒருவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்தார். கொவிட் நிலைமை மோச­மா­கி­ய­போது அவ­ரது மகள் அவரைப் பரா­ம­ரிப்­ப­தற்கு தேவை­யான உத­வி­களைச் செய்­வ­தற்கு வைத்­தி­ய­சா­லைக்கு வந்தார். அப்­போது மகள் கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருக்­க­வில்லை.

தனது தாயார் அருகில் அவர் 4 நாட்கள் இருந்தார். அப்­போது அந்த 27 வய­தான பெண்ணின் மகளும், கொவிட் தொற்­றுக்­குள்­ளானார். அவ­ளுக்கு எவ்­வ­ளவு கஷ்­டங்கள் இருந்­த­போதும் அவள் தாயாரை விட்டு விட்டு வேறாக சிகிச்­சைக்-கு செல்­ல­வில்லை.அவள் இழுப்பு நோயால் பாதிக்­கப்­ப­டு­பவள். திடீ­ரென அவள் இந்த நோயினால் பாதிக்­கப்­ப­டுவாள். தீவிர சிகிச்­சைப்­பி­ரிவில் 6தினங்கள் கிசிச்சை பெற்று வந்த இந்த யுவதி கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளானாள்.இறு­தியில் கொவிட் வைர­ஸூக்கு அவள் பலி­யானாள். தனது தாயா­ருக்கு பணி­வி­டைகள் செய்­வ­தற்கு வைத்­தி­ய­சா­லைக்கு வந்­தி­ருந்த அந்த யுவ­தி பலி­யான செய்­தியை அவ­ளது தாயா­ருக்கு அறி­விக்கும் நிலை­மையில் நாம் இருக்­க­வில்லை. அந்­தத்­தாயார் சிகிச்­சையின் பின்பு குண­மாகி வீடு செல்­லும்­வரை தனது மகள் வேறோர்­வி­டு­தியில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவே எண்­ணி­யி­ருந்தாள்.
அநே­க­மான பெற்றோர் கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களைச் செய்­வ­தற்கு பிள்­ளை­களே வரு­கி­றார்கள். தங்­க­ளது தந்தை, தாயார் சுவா­சிக்க முடி­யாது தடு­மாறி உயிர்த்­து­றப்­பதை எந்த பிள்­ளை­களால் தான் தாங்­கிக்­கொள்ள முடியும். நாம் எங்கள் பணி­களைச் செய்­வ­தை­விட இந்த நிலை­மை­களை எம்மால் பொறுத்­துக்­கொள்ள முடி­யுமா-?

சுவா­சிப்­ப­தற்கு முடி­யாமற் போகும்­போது, என்னைக் காப்­பா­றுங்கள் என அவ­லக்­குரல் எழுப்பும் போது நாங்கள் மிகவும் பாதிப்­புக்­குள்­ளா­கிறோம். கவ­லைப்­ப­டு­கிறோம். எதுவும் செய்ய முடி­யாத நிலை­மைக்குத் தள்­ளப்­ப­டு­கிறோம். கொவிட் 19 பயங்­க­ரத்தை, அபா­யத்தை இன்னும் இந்­நாட்டு மக்கள் புரிந்து கொள்­ள­வில்லை. விளங்கிக் கொள்­ள­வில்லை. மக்கள் தினமும் தாம் அணிந்து கொண்­டி­ருந்த உடை­க­ளுடன் பொலித்தீன் பையில் இறுதிப் பயணம் செல்­கி­றார்கள்.

கொவிட் தொற்­றினால் பலி­யான தனது தாயா­ரைப்­பற்றி மகள் ஒருவர் தனது அனு­ப­வத்தை எம்­மிடம் விப­ரித்தாள்.

“எனது தாயார் எம்.எம்.சந்­ர­லதா வயது 56 கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­ய­தை­ய­டுத்து அவரை நாம் கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்தோம். ஐந்து தினங்­களின் பின்பு தாயார் சுவா­சிப்­ப­தற்கு சிர­மப்­பட்டார். அன்­றி­லி­ருந்து தாயா­ருக்கு பணி­வி­டைகள் செய்­வ­தற்கு நான் அவர் அரு­கிலே இருந்தேன். சில தினங்­களில் அவர் சிறிது குண­ம­டைந்த நிலைக்­குள்­ளானார். தாயார் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையின் சாதா­ரண விடு­தியில் தங்­கியே சிகிச்சை பெற்­று­வந்தார். கொவிட் 19 விடு­தியில் தினம் 4,5 பேர் மர­ணிப்­பதை நான் என் கண்ணால் கண்டேன். வீட்­டுக்குச் செல்ல வேண்டும் என்றே தாயார் தினமும் அழுதார். என்­றாலும் தாயார் பூரண குண­ம­டை­யா­ததால் டாக்­டர்கள் தொடர்ந்தும் சிகிச்­சை­ய­ளித்து வந்­தார்கள். நன்­றாக பேசிக்­கொண்­டி­ருந்த எனது தாயா­ருக்கு திடீ­ரென சுவா­சிப்­பதில் கஷ்டம் ஏற்­பட்­டது. அப்­போது எனது தாயாரின் கட்­டிலை சுற்­றி­யி­ருந்த பல நோயா­ளர்கள் என் கண்­முன்னே இறப்தைக் கண்டேன்.
எனது தாயாரின் நெஞ்­சினை இரவு முழு­வதும் வரு­டிக்­கொண்டு நான் பல நாட்கள் தூங்­காமல் இருந்­தி­ருக்­கிறேன் இறு­தியில் எனது தாயாரின் இறுதி மூச்சு எனது கரங்­களின் மீதே வெளி­யாகி அவ­ரது உயிர் பிரிந்­தது. நான் எனது தாயாரின் உடலை அணைத்­துக்­கொண்டு பல மணி நேரம் இருந்தேன். ஒரு பிள்ளை எதிர் நோக்கும் துன்­ப­க­ர­மான நிலைமை இத­னை­விட வேறு எது­வாக இருக்க முடியும்.

வைத்­தி­ய­சா­லையில் இட நெருக்­கடி உச்­சத்தை தொட்­டி­ருந்­தது. ஒரு கட்­டிலில் கொவிட் நோயா­ளிகள் இரண்டு, மூன்று பேர் இருந்­தார்கள். நோயா­ளர்கள் விடு­தியில் நிலத்தில் காலடி வைத்து நகர்­வ­தற்கு முடி­யாத அள­வுக்கு நோயா­ளர்கள் தரையில் இருந்­தனர். வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்­களில் அநேகர் கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருந்­தனர். இறு­தியில் எனது தாயாரின் உடலை எனது கைக­ளா­லேயே பொலிதீன் பைக்குள் போட­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. எனது தாயாரின் தலை­யைத்­த­டவி பிரித் ஓதி­ய­பின்பே பையை மூடினேன். நான் அப்­போது கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருந்­ததால் மீண்டும் தாயாரின் முகத்தை என்னால் பார்க்க முடி­யா­மற்­போ­னது. நான் என்ன பாவம் செய்தேன். என் கண் முன்­னாலே தாயாரின் உயிர் பிரிந்­தது. இவ்­வா­றான நிலைமை எந்­த­வொரு பிள்­ளைக்கும் ஏற்­ப­டக்­கூ­டா­தென நான் பிரார்த்­தனை செய்­கிறேன். என்­று­கூறி அப்பெண் அமை­தி­யானாள்.

கொவிட் 19 பலி­யெ­டுத்த தனது தந்தை பற்­றியும் அவ­ளது அனு­ப­வங்கள் பற்­றியும் மக­ளான ஊட­க­வி­ய­லாளர் நிலக் ஷி மது­வந்தி இவ்­வாறு தெரி­வித்தார். நிலக் ஷியும் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருந்­தவர். தற்­போது சிகிச்­சையின் பின்பு குண­ம­டைந்­துள்ளார்.

‘கடந்த மாதம் நடுப்­ப­கு­தியில் எனது தந்­தைக்கு சாதா­ரண காய்ச்சல் ஏற்­பட்­டது. மருந்து குடித்­தாலும் காய்ச்சல் குறை­ய­வில்லை. அதனால் பி.சி.ஆர்.பரி­சோ­தனை செய்தோம்.பரி­சோ­த­னையின் பின்பு தந்­தைக்கு கொவிட் தொற்­றி­யி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டோம். தந்தை பிங்­கி­ரிய தனி­மைப்­ப­டுத்தல் நிலை­யத்தில் அனு­ம­திக்­கப்­பட்டார். தந்­தையை தனி­மைப்­ப­டுத்தல் நிலை­யத்தில் அனு­ம­தித்த தினம் மாலையில் தாயா­ருக்கு கொவிட் தொற்­றுக்­குள்­ளானார். தாயார் சிறிது சிறி­தாக தொற்­றினால் பாதிப்­புக்­குள்­ளானார். அதி­காலை ஒரு மணிக்கு தாயாரை களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றோம். வைத்­தி­ய­சா­லையில் ஒரு கட்­டிலில் இரண்டு மூன்று பேர் இருந்­தார்கள். எல்­லோரும் பாதிக்­கப்­பட்ட நோயா­ளிகள். வைத்­தி­ய­சாலை முன்­ற­லிலும் நோயா­ளர்கள் நிறைந்­தி­ருந்­தார்கள். தாயாரை அமர வைப்­ப­தற்கும் இடம் இருக்­க­வில்லை. தாயாரை கல்­மதில் மேல் அமர வைத்து விடியும் வரை நுளம்­பு­களை விரட்­டிக்­கொண்­டி­ருந்தேன்.

எனது கண் முன்­னாலே சில மணித்­தி­யா­லங்­களில் இரு நோயா­ளர்கள் இறந்து வீழ்ந்­தார்கள். எனது தாயார் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் உயி­ருக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்­கையில் தந்தை ஒக்­ஸிஜன் இயந்­தி­ரத்தின் மூலம் உயிர் வாழ்ந்து கொண்­டி­ருந்தார். பிள்ளை ஒரு­வ­ருக்கு வாழ்க்­கையில் இத­னை­விட துயரம் எது­வாக இருக்க முடியும். தந்­தையும் தாயும் கொவிட் தொற்­றினால் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருக்­கையில் நான் அனா­தை­யாக்­கப்­பட்­ட­தைபோல் உணர்ந்தேன். அப்­போது நான் கொவிட் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருக்­க­வில்லை. சில தினங்­களின் பின்பே நான் தொற்­றுக்­குள்ளேன்.

தந்தை இர­ண­வில தனி­மைப்­ப­டுத்தல் மத்­திய நிலை­யத்தில் ஒக்­ஸிஜன் இயந்­தி­ரத்தின் மூலம் 16 நாட்கள் உயிர் வாழ்ந்தார். சாப்­பிட முடி­யாது சுவா­சிக்க முடி­யாது. இருமல், சளி போன்ற நிலை­மை­யினால் தந்தை மிகவும் பாதிக்­கப்­பட்டார். நானும் தாயாரும் களு­போ­வி­லயில் தந்தை இர­ண­வி­லயில்.

நாளுக்கு நாள் தந்­தையின் நிலைமை மோச­மாகி வரு­வ­தாக தொலை­பேசி தக­வல்கள் மூலம் அறிந்து கொண்டேன். தந்தை ஆகஸ்ட் 17 ஆம் திகதி இறந்­து­விட்­ட­தாக எனக்கு அறிவிக்கப்பட்டது. தந்தையின் உடலை பார்ப்பதற்கு குடும்பத்தில் ஒருவருக்கே அ-னுமதியளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. என்றாலும் எனது கோரிக்கையினையடுத்து எனக்கும் சகோதரருக்கும் தந்தையின் உடலை பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. உடலுக்கு அருகில் நாம் அனுமதிக்கப்படவில்லை. தூரத்திலிருந்தே தந்தையின் முகத்தைப் பார்த்தோம். சில வினாடிகளில் பெட்டியை மூடிவிட்டார்கள்.

எமது உறவினர்கள் எவரும் இல்­லாத இர­ண­வி­லயில் எனது தந்தை உடுத்­தி­யி­ருந்த ஆடை­க­ளுடன் மாத்­தி­ரமே இறு­திப்­ப­யணம் சென்றார்.

எனது குடும்­பத்­துக்கு ஏற்­பட்ட நிலைமை இவ்­வு­லகில் எவ­ருக்கும் ஏற்­ப­டக்­கூ­டாது. தொடர்ந்தும் அழு­வ­தற்கு என்­னிடம் கண்ணீர் இல்லை. நான் இறக்கும் வரை இந்த வேத­னைகள் என்னை விட்டும் நீங்­காது.

நானும் தாயாரும் குண­மா­கி­விட்­டாலும் எங்கள் உடலில் பல­மில்லை. வேத­னை­களை நினைக்­கும்­போது இறந்­து­வி­டு­வது மேல் எனத் தோன்­று­கி­றது.

நான் அனை­வ­ரி­டமும் கும்­பிட்டுக் கேட்­கிறேன் பாது­காப்­பாக இருங்கள். எனது தந்தை கொவிட் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்பு பெற சுகா­தார வழி­காட்­டல்­களை முழு­மை­யாக கடைப்­பி­டித்தார். என்­றாலும் கொவிட் 19 எனது தந்தையையும் விழுங்கிக் கொண்டது என்று அவர் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.