காதிநீதிமன்றங்களின் எதிர்காலம் என்ன?

0 606

ஏ.ஆர்.ஏ.பரீல்

பல நூற்­றாண்டு கால­மாக இலங்­கையில் நடை­மு­றை­யி­லி­ருந்து வரும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சில விதி­க­ளையும், காதி நீதி­மன்ற முறை­யை­யும் இல்­லாமற் செய்­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற அர­சாங்­கத்தின் கொள்கைத் திட்­டத்தின் கீழ் காதி­நீ­தி­மன்ற முறைமை இல்­லாமற் செய்­யப்­பட்டு அனைத்தும் பொதுச்­சட்­டத்தின் கீழ் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது.
வர­லாறு நெடு­கிலும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வந்த நிலையில் தற்­போ­தைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள முஸ்லிம் அமைச்­ச­ராக நீதி­ய­மைச்சர் அலி சப்­ரியே பதவி வகிக்­கிறார்.

இந்­நி­லை­யிலே தற்­போ­தைய அமைச்­ச­ரவை காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் சில பிரி­வு­களை இல்­லாமற் செய்­வ­தற்கும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இந்த அங்­கீ­கா­ரத்தை நீதி­ய­மைச்­ச­ரினால் எதிர்க்க முடி­யா­தி­ருந்­துள்­ளது. இதனை நீதி­ய­மைச்சர் பகி­ரங்­க­மா­கவே ஏற்றுக் கொண்­டுள்ளார்.

நூற்­றாண்டு கால­மாக முஸ்லிம் சமூகம் இந்­நாட்டில் அனு­ப­வித்து வந்த இந்த உரிமை விரைவில் பறிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் இதற்கு எதி­ராக முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பரந்த அளவில் எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­ப­டா­துள்­ளமை கவ­லை­ய­ளிக்­கி­றது. முஸ்லிம் சமூ­கத்தின் புத்­தி­ஜீ­விகள் குழு­வொன்று இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து காதி­நீ­தி­மன்ற முறைமை இல்­லாமற் செய்யப் படக்­கூ­டா­தென்று மனு­வொன்று தயா­ரித்து தற்­போது கையொப்ப வேட்­டையில் ஈடு­பட்­டுள்­ளது. இந்த மனு ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் நீதி­ய­மைச்­ச­ருக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இவ்­வா­றான எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தை தடுத்து நிறுத்­துமா என்­பது சந்­தே­கமே.

நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­து­வதில் எவ்­வித பயனும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. அவர் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்­திலும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையிலுமே இருக்­கிறார்.

காதி­நீ­தி­ப­திகள் போரம்
நாட்டில் 65 காதி­நீ­தி­மன்­றங்கள் இயங்­கி­வ­ரு­கின்­றன. காதி நீதி­ப­தி­களின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தற்கு காதி நீதி­ப­திகள் போரம் என்ற அமைப்­பொன்று செயற்­பட்டு வரு­கி­றது. கடந்­த­வாரம் காதி­நீ­தி­ப­தி­களின் போரம் அமைச்­ச­ர­வையின் தீர்­மானம் குறித்து நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் ஒதுக்­கி­யி­ருந்­தது. என்­றாலும் கொவிட் 19 கார­ண­மாக நாடு முடக்­கப்­பட்ட நிலையில் குறிப்­பிட்ட கலந்­து­ரை­யாடல் சூம் (zoom) செய­லி­யூ­டாக இடம்­பெற்­றது. இந்த சூம் செய­லி­யூ­டான கலந்­து­ரை­யா­டலின் போதும் நீதி­ய­மைச்சர் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தில் உறு­தி­யா­கவே இருந்­துள்ளார்.

காதி­நீ­தி­ப­திகள் போரம் நீதி­ய­மைச்­ச­ருக்கு தனது கோரிக்­கை­களை எழுத்து மூலம் அனுப்பி வைத்­துள்­ளது. இந்தக் கோரிக்­கை­களை காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் தலைவர் ஏ.எல்.எ.எம்.பௌஸ் மற்றும் உதவித் தலைவர் எம்.இப்ஹாம் யெஹ்யா ஆகியோர் கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்­ளனர்.

கோரிக்­கைகள்
காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு நீதிச் சேவை ஆணைக்­குழு மற்றும் காதி­நீ­தி­ப­திகள் போரத்­தினால் பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. நீதி­வான்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு நீதி­வான்­களின் நிறு­வனம் (Judges Institute) தொட­ராக பயிற்சி வழங்கி வரு­கி­றது. ஆனால் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­ப­டு­வ­தில்லை. காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு கடந்த 10 வரு­டங்­களில் 3 பயிற்­சி­களே வழங்­கப்­பட்­டுள்­ளன.

எனவே காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு நீதிச்­சேவை ஆணைக்­குழு காதி நீதி­ப­திகள் போரத்­துடன் இணைந்து பயிற்­சிகள் வழங்க வேண்டும். இதற்­கான விரி­வுரை மண்­டபம், விரி­வு­ரை­யாளர் கட்­டணம், சான்­றிதழ் என்­ப­ன­வற்றை நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவே வழங்க வேண்டும்.

காதி­நீ­தி­ப­திகள் நிய­மனம்
முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட திருத்தம் தொடர்பில் நீதி­ய­மைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட குழு சட்­டத்­த­ர­ணி­களே காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென பரிந்­து­ரைத்­துள்­ளது. ஆனால் இஸ்­லா­மிய சட்டம் பற்­றிய அறிவு அனு­பவம் உள்­ள­வர்­களே நிய­மிக்­கப்­பட வேண்டும்.

இதே­வேளை பட்­ட­தா­ரிகள், மௌல­விகள், அல்­ஆலிம் பட்டம் பெற்­ற­வர்கள், ஓய்வு நிலை அதி­பர்­களும் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென காதி­நீ­தி­ப­திகள் போரம் பரிந்­து­ரைக்­கி­றது.

வழக்­கு­களை மாற்­றுதல்
ஒரு காதி­நீ­தி­மன்­றத்­தி­லி­ருந்து வழக்­கொன்­று­வேறு காதி­நீ­தி­மன்­றுக்கு மாற்­றப்­படும் போது விஷேட காதி­யாக ஒருவர் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு நீதிச்­சேவை ஆணைக்­குழு நீண்ட காலம் சுமார் 3 – 5 மாதங்கள் எடுக்­கி­றது. இக்­கால தாமதம் தவிர்க்­கப்­பட வேண்டும். இக்­கால தாம­தத்­திற்கு காதி­நீ­தி­ப­திகள் மீதே மக்கள் குற்றம் சுமத்­து­கி­றார்கள். அத்­தோடு தாப­ரிப்பு வழக்­காக அது இருந்தால் தாப­ரிப்பு பணம் பெற்றுக் கொள்­வ­திலும் கால­தா­மதம் ஏற்­ப­டு­கி­றது.

செய­லா­ள­ராக முஸ்லிம் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும்
நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­ட­பி­ரி­வுக்கு முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் மற்றும் இஸ்­லா­மிய சட்ட அறி­வு­டைய முஸ்லிம் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும்.

ஏனைய நீதி­மன்­றங்­க­ளுக்கு தெளி­வில்லை
நாட்டின் ஏனைய நீதி­மன்­றங்­க­ளான மஜிஸ்­திரேட் நீதி­மன்றம் மற்றும் மாவட்ட நீதி­மன்­றங்கள் என்­பன முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் தெளி­வில்­லாமல் இருக்­கின்­றன.

காதி­நீ­தி­மன்­றங்கள் தாப­ரிப்பு, கைக்­கூலி, மஹர் என்­பன செலுத்­தப்­ப­டாது நிலு­வை­யா­கிய நிலையில் அவற்றை விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு பெற்றுக் கொடுப்­ப­தற்கு குறிப்­பிட்ட நீதி­மன்­றங்­க­ளுக்கு வலியுறுத்தற் கட்டளை அனுப்பி வைக்­கின்­றன. நிலு­வையை பெற்றுக் கொள்­வ­தற்கு விண்­ணப்­ப­தாரி அந்­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது. ஆனால் இந்த நடை­முறை சட்­டத்தில் இல்லை. நீதி­மன்ற பதி­வாளர் பிர­தி­வா­தி­யி­ட­மி­ருந்து நிலுவை தொகையை அற­விட்டு குறிப்­பிட்ட காதி நீதி­மன்­றத்­துக்கே அனுப்பி வைக்க வேண்டும். இந்­ந­டை­முறை பின்­பற்­றப்­ப­டா­மை­யினால் பாதிக்­கப்­படும் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளையே குறை கூறு­கி­றார்கள்.

மேன்­மு­றை­யீடு
விவா­க­ரத்து மற்றும் தாப­ரிப்பு வழக்­கு­களில் தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்னர் காதி­நீ­தி­ப­திகள் மேன்­மு­றை­யீட்டு சபைக்கு மேன்­மு­றை­யீடு செய்­யப்­படும் வழக்­குகள் தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு கால தாமதம் ஏற்­ப­டு­கி­றது.

பிள்ளை தாப­ரிப்பு, மனைவி தாப­ரிப்பு வழக்­குகள் மேன்­மு­றை­யீடு செய்­யப்­படும் போது மேன்­மு­றை­யீட்டு சபை தீர்ப்பு வழங்கும் வரை ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள தாப­ரிப்பு தீர்ப்பில் 50 வீதம் மாதாந்தம் செலுத்­தப்­ப­டு­வ­தற்கு உத்­த­ர­வி­டப்­பட வேண்டும். இவ்­வாறு வழங்க உத்­த­ர­வி­டப்­ப­டா­ததால் பெண்கள் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­றார்கள்.

ஆலோ­சனைச் சபை
முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் தொடர்­பாக காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கும், முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக ஆலோ­சனைச் சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும்.
குறிப்­பிட்ட ஆலோ­சனைச் சபையில் தலை­வ­ருடன் மேலும் 9 பேர் அங்­கத்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

நிய­மிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள்.
தலைவர், பதி­வாளர் நாயகம், ஏனைய அங்­கத்­த­வர்கள் – 65 காதி நீதி­ப­தி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 2 காதி­நீ­தி­ப­திகள், காதி மேன்­மு­றை­யீட்டு சபை உறுப்­பினர் ஒருவர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர், நீதிச் சேவை ஆணைக்­கு­ழுவின் காதி பிரிவின் பிர­தி­நிதி ஒருவர், நீதி­ய­மைச்­சரின் பிர­தி­நி­தி­யொ­ருவர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், வக்பு சபையின் தலைவர் மற்றும் முஸ்லிம் விவாக பதி­வாளர் ஒருவர்.

காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் இடம்
காதி நீதி­ப­தி­க­ளுக்கு ஒவ்வொரு மாவட்­டங்­க­ளிலும் மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் தமது பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இடம் ஒதுக்­கப்­பட வேண்டும். தற்­போது காதி­நீ­தி­மன்­றங்கள் பாட­சாலை கட்­டி­டங்­க­ளிலும், பள்­ளி­வாசல் மண்­ட­பங்­க­ளிலும், சன­ச­மூக நிலை­யங்­க­ளி­லுமே இயங்கி வரு­கின்­றன. இதனால் மக்கள் காதி­நீ­தி­மன்­றினை தரக்­கு­றை­வாக கரு­து­கின்­றனர்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் காதிநீதிமன்றங்கள் செயற்படுவதற்கு மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் மாதம் இரு நாட்கள் சனிக்கிழமைகளில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

சிங்கள மொழிபெயர்ப்பு
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

காதிநீதிமன்றங்கள் மீள கட்டமைக்கப்படல்
தற்­போது அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை, பதுளை மாவட்­டங்­களில் தலா ஒரு காதி­நீ­தி­மன்றம் வீதமே இயங்கி வரு­கின்­றன. இம்­மா­வட்­டங்­களில் தலா இரண்டு காதி­நீ­தி­மன்­றங்கள் ஸ்தாபிக்­கப்­பட வேண்டும்.
புதி­தாக முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி நிர்­வாக மாவட்­டங்­க­ளுக்கு காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­பட வேண்டும்.

இதே­வேளை கண்டி மாவட்­டத்தில் தற்­போது 10 காதி நீதி­ப­திகள் கட­மை­யாற்­று­கின்­றனர். இவ் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட வேண்டும்.

அடையாள அட்டை
நீதிச்­சேவை ஆணைக்­குழு காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு உத்­தி­யோக அடை­யாள அட்டை வழங்க வேண்டும் என காதி­நீ­தி­ப­திகள் போரம் நீதி­ய­மைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.