தலிபான் அமைப்­பினால் இலங்­கையில் ஆதிக்கத்திலுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் வலுப்­பெறும்

தப்லீக் ஜமாஅத்தை தடைசெய்ய வேண்டும் என்கிறார் ஞான­சார தேரர்

0 502

ஆப்­கா­னிஸ்­தானில் மீண்டும் எழுச்சி பெற்­றுள்ள தலிபான் அமைப்­பினால் இலங்­கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்­றுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் வலுப்­பெறும். தப்லீக் ஜமாத் அமைப்பை அர­சாங்கம் தடை செய்­வ­துடன், இஸ்­லா­மிய அடிப்­ப­டைவாத கொள்­கை­யு­டைய அமைப்­புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்னர் நாட்டில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் முற்­றாக இல்­லாமல் போயுள்­ளது என்று ஒரு­போதும் கருத கூடாது என பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையிலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஆப்­கா­னிஸ்தானில் தலிபான் அமைப்பு மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை போராட்­டத்தின் ஊடாக கைப்­பற்­றி­யுள்­ளது. தலி­பான்கள் இறுக்­க­மான மத கொள்­கை­யி­னையும், மதத்தின் பெயரில் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­பவர்கள்
இறுக்­க­மான மத கொள்­கை­க்கு எதிர்ப்பு தெரி­வித்தே அந்­நாட்டு மக்கள் அபா­ய­க­ர­மான நிலையில் நாட்டை விட்டு வெளி­யே­று­கின்­றதை அவ­தா­னிக்க முடி­கி­றது.தலிபான் அமைப்­பின் மீள் எழுச்சி இலங்­கையில் தற்­போது 70 வீத­ம­ளவில் ஆதிக்கம் பெற்­றுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளுக்கு சாத­க­மாக அமையும்.

தலிபான் அமைப்பின் கொள்­கையால் ஈர்க்­க­ப்பட்­டுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இலங்­கை­யிலும் உள்­ளன. குறிப்­பாக தப்­லீக்­ ஜமாஅத் அமைப்பை குறிப்­பிட வேண்டும். இந்த அமைப்பை அர­சாங்கம் உட­ன­டி­யாக தடை செய்ய வேண்டும்.அத்­துடன் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­யு­டைய அமைப்­புக்கள் குறித்தும் அதிக கவ­னம்­செ­லுத்­தப்­பட வேண்டும்.

இலங்­கையில் வாழும் சுதேச பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கைக்கும், மதத்தின் பெயரை குறிப்­பிட்டுக் கொண்டு தவ­றான புரி­தல்கள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­க­ளுக்கு கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். இருப்­பினும் இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்­களின் தலை­மைகள் என்று குறிப்­பிட்டுக் கொள்­ப­வர்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­க­ளினால் ஈர்க்­கப்­பட்­டுள்­ளார்கள்.இவர்கள் குறித்து முதலில் முஸ்லிம் மக்கள் ஒரு தீர்வை எடுக்க வேண்டும்.

இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் பகி­ரங்­க­மாக செயற்­ப­டு­கி­றது.என்­று­பல முறை ஆதா­ரத்­துடன் வெளிப்­ப­டுத்­தினோம். எமது கருத்தை முஸ்லிம் சமூக தலை­வர்கள் இன­வாத கோணத்தில் கருதி எம்மை இன­வா­திகள் என்றும்,முஸ்லிம் சமூக விரோ­திகள் என்றும் சித்­த­ரித்து அடிப்­ப­டை­வா­தி­களை பாது­காத்­தார்கள். விளைவு ஏப்ரல் 21 குண­டுத்­தாக்­கு­த­லுடன் வெளி­யா­னது.

மதத்தின் பெய­ரி­னாலும், தவ­றான போத­னை­க­ளி­னாலும் பயங்­க­ர­வா­தி­க­ளினால் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதனால் ஒட்­டு­மொத்த முஸ்லிம்களும் அன்று பாதிக்­கப்­பட்­டார்கள். இன்றும் அதன் விளைவு தொடர்கிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் இல்லை என்று கருத முடியாது. ஆகவே அரசாங்கம் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கருத்திற் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.