20ஐ ஆதரித்தோரை மன்னித்தது மு.கா.

தௌபீக்கிற்கு தேசிய அமைப்பாளர் பதவி

0 539

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மன்­னிப்பு கோரி­யுள்­ள­மையால், அவர்­களை மன்­னிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிடும் போதே அவர் இத்­த­க­வலை வெளி­யிட்டார்.
“இவ்­வி­டயம் தொடர்பில் அர­சியல் உச்ச பீடம் ஏற்­க­னவே தீர்­மா­னித்து விட்­டது. அவர்கள் மன்­னிப்பு கோரி­யுள்­ளதால் மன்­னிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அந்த விவ­காரம் நிறை­வ­டைந்­து­விட்­டது. அவர்­க­ளு­டைய வேறு திற­மை­களைக் கருத்திற் கொண்டு கட்­சியை முன்­னோக்கிக் கொண்டு செல்ல வேண்­டிய தேவை எமக்­கி­ருக்­கி­றது. அதற்­கான பொறுப்­புக்கள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. அதனை அவர்கள் சிறப்­பாக செய்­வார்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம். 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என்ற முடிவு கட்­சி­யி­னு­டை­ய­தல்ல. கட்சி என்­றாலும் சில விவ­கா­ரங்­களில் சில தடு­மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. அதற்கு அப்பால் தேவை­யான நட­வ­டிக்­கை­களை கட்சி யாப்­பிற்­க­மைய செய்­தி­ருக்­கின்றோம். அந்த அடிப்­ப­டை­யி­லேயே இந்த முடி­வுகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன” என்றும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரி­வித்தார்.

இத­னி­டையே, முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய அமைப்­பாளர் பத­விக்கு திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கட்­சியின் தலைவர் அறி­வித்­துள்ளார். திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற கட்­சியின் நிகழ்வொன்றிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.