கூரகல ஜெய்லானியில் மண்ணைப்போட்டு ஸியார அடையாளங்கள் மறைப்பு

0 729

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல நூற்­றாண்டு காலம் வர­லாற்றுப் புகழ் மிக்க ஜெய்­லானி பள்­ளி­வாசல் எல்­லைக்குள் பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்­தி­ருந்த தொல்­பொருள் சின்­னங்­க­ளான இரு ஸியா­ரங்கள் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் மண்­ணினால் முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளன. அவ்­வி­டத்தில் ஸியா­ரங்கள் அமைந்­தி­ருந்­த­தற்­கான அடை­யாளம் தெரி­யாத வகையில் மூடப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் கவலை வெளி­யிட்­டுள்­ளன.

ஜெய்­லானி பள்­ளி­வா­சலைச் சென்­ற­டையும் பாதையில் அமை­யப்­பெற்­றுள்ள குறிப்­பிட்ட இரண்டு ஸியா­ரங்­களும் பல தசாப்­தங்கள் பழமை வாய்ந்­த­தாகும். ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் கோடிக்­க­ணக்­கான ரூபாய் செலவில் தாது­கோ­பு­ர­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் நிலை­யிலே தொல்­பொருள் அடை­யாளச் சின்­னங்­க­ளான ஸியா­ரங்கள் விஷ­மி­களால் மண்­கொண்டு மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வாசல் நிர்­வாகத்­தினால் இது தொடர்பில் கல­தொட்ட பொலிஸில் முறைப்­பா­டொன்றும் செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த மாதம் ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு வக்பு சபை­யினால் புதிய நிர்­வாக சபை­யொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த விஷம செயற்­பாடு பிரதி பொலிஸ் மாஅ­தி­பரின் கவ­னத்­திற்கும் கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மூடப்படுவதற்கு முன்

மண்­ணினால் மூடப்­பட்­டுள்ள ஸியா­ரங்­களில் கபூர் மஸ்­தானின் ஸியாரம் 80 ஆண்­டுகள் பழமை வாய்ந்­த­தாகும். ப.மு.ஹாஜி­யாரின் ஸியாரம் சுமார் 68 ஆண்­டுகள் பழமை வாய்ந்­த­தாகும்.

பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் பிர­மாண்­ட­மான தாது­கோ­புரம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் நிலையில் அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­களின் தொல்­பொருள் அடை­யா­ளங்­களை அழிக்கும் முன்­னேற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இதே­வேளை பள்­ளி­வா­சலில் முஹர்ரம் புது­வ­ருட கொடிகள் ஏற்­றப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அண்­மையில் பெரும்­பான்­மை­யினர் பள்­ளி­வா­சலை வெசக் கூடு­களால் அலங்­க­ரித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வா­சலில் அக்­கறை செலுத்­தா­தி­ருந்­த­மையே இவ்­வா­றான செயல்­க­ளுக்கு காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு தொடர்ந்தும் மக்கள் நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிவாசலின் இருப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் தலைவி ரொசானா அபுசாலியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.