பள்ளிவாசல்களில் 100 பேர் எனும் வரையறை மீறப்படுகிறது

புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை

0 538

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
பள்­ளி­வா­சல்­களில் கூட்டுத் தொழு­கை­களில் ஆகக்­கூ­டி­யது 100 பேர் மாத்­தி­ரமே தொழ முடியும் என சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் அடங்­கிய சுற்­று­நி­ருபம் தெரி­வித்­தாலும் சில பள்­ளி­வா­சல்­களில் 300, 500 எனும் எண்­ணிக்­கை­யி­லானோர் தொழு­கி­றார்கள்.

மாடி­களைக் கொண்ட பள்­ளி­வா­சல்­களில் 750 முதல் 1000 பேர் அளவில் தொழு­வ­தாக உள­வுப்­பி­ரி­வினர் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ள­தாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சி.கே.ரத்­நா­யக்க வக்பு சபை உறுப்­பினர் மெள­லவி பஸ்ருல் ரஹ்­மா­னிடம் முறை­யிட்­டுள்ளார்.

கண்டி மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் கொவிட் 19 வழி­காட்­டல்கள் பொலி­சாரால் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். இது­பற்­றிய கடி­த­மொன்­றி­னையும் வக்பு உறுப்­பி­ன­ரிடம் கைய­ளித்­துள்ளார். கடி­தத்தின் பிர­திகள் உள­வுப்­பி­ரிவு, பிர­தி­பொ­லிஸ்மா அதிபர், கண்டி மாவட்ட சிரேஷ்ட பிர­தி­பொ­லிஸ்மா அதிபர் ஆகி­யோ­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் (SSP) கடந்த 30 ஆம்­ தி­கதி பஸ்ருல் ரஹ்­மானை தனது காரி­யா­ல­யத்­துக்கு அழைத்து இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.
கொவிட் 19வழி­காட்­டல்­களை பள்­ளி­வா­சல்­களில் மீறு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தெரிவித்ததுடன் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளையும், முஸ்லிம் சமூ­கத்­தையும் இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தும்­ப­டியும் வேண்­டிக்­கொண்டார்.

இதே­வேளை வக்­பு­சபை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை 3 ஆம் திகதி விசேட சுற்­று­நி­ரு­ப­மொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. இச்­சுற்று நிரு­பத்தில் பள்­ளி­வா­சல்­களில் கூட்­டுத்­தொ­ழு­கை­களின் ஈடு­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்கை ஆகக்­கூ­டி­யது 100 ஆக இருக்­க­வேண்டும் வுழுச் செய்யும் ஹவ்ழ் மூடப்படவேண்டும்,பயான்கள் சுருக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பன உட்பட 11 நிபந்தனைகள் உள்ளடங்கி யுள்ளதாகவும் வக்பு சபை உறுப்பினர் மெளலவி பஸ்ருல் ரஹ்மான் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.