பள்ளிவாசல் கொத்தணி உருவாகும் அபாயம்

எச்சரிக்கும் வக்பு சபை

0 453

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
நாட­ளா­வி­ய­ ரீ­தியில் கொவிட் 19 பள்­ளி­வாசல் கொத்­த­ணியொன்று உரு­வாகும் அபா­ய­ நிலை உரு­வா­கி­யுள்­ள­தாக சுகா­தார தரப்­பி­னரும், பாது­காப்பு தரப்­பி­னரும் வக்பு சபைக்கு அறி­வித்­துள்­ளார்கள். முஸ்லிம் சமூ­கத்தில் சட்­டத்தை மதிக்கும் தரப்­பி­னரும் இது தொடர்பில் கவலை வெளி­யிட்­டுள்­ளனர். எனவே வக்­பு­சபை சுகா­தார வழி­காட்­டல்­க­ளையும் அறி­வு­றுத்­தல்­க­ளையும், நிபந்­த­னை­க­ளையும் மீறும்­பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ரான கடு­மை­யான நட­வ­டிக்கை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ள­துடன் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘பள்­ளி­வா­சல்­களில் கொவிட் 19 வழி­காட்­டல்கள், பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நிபந்­த­னைகள் மீறப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை கண்­கா­ணித்து வக்பு சபைக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கும்­படி வக்பு சபை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தொழு­கைக்­காக வருகை தரு­ப­வர்­களில் பலர் மாஸ்க் (முகக்­க­வசம்) அணி­யாதும், தொழுகை விரிப்பு (முஸல்லாஹ்) இன்­றியும் வருகை தரு­வ­தா­கவும் முறை­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. பெரும் எண்­ணிக்­கை­யானோர் பள்­ளி­வா­சல்­க­ளிலே வுழுச் செய்­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளையும் கொவிட்19 தொற்று தொடர்­பான வழி­காட்­டல்கள் நிபந்­த­னைகள் மீறப்­ப­டு­கின்­ற­னவா என கண்­கா­ணிக்­கும்­படி மாவட்­டத்தின் அனைத்துப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் மற்றும் உய­ர­தி­கா­ரி­களை கடிதம் மூலம் கோரி­யுள்ளார். கடி­தத்தின் பிரதி பிர­தி­பொ­லிஸ்மா அதி­ப­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வக்பு சபையும் சில அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. மாவட்ட மற்றும் பிர­தேச ரீதியில் பணி­யாற்றும் வக்பு சபையின் அதி­கா­ரிகள் தங்­க­ளது பிர­தேச பள்ளி வாசல்­களை கண்­கா­ணித்து அறிக்கை சமர்ப்­பிக்­கும்­படி வேண்­டப்­பட்­டுள்­ளனர். கிடைக்­கப்­பெறும் அறிக்­கையின் அடிப்­ப­டையில் வக்­பு­சபை அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும்.

கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளையும் நிபந்­த­னை­க­ளையும் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் மீறு­வ­தற்கு துணை­போகும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­துடன், அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்­கையில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை மொத்த சனத்­தொ­கையில் 10 வீத­மாக இருக்கும் நிலையில் முஸ்­லிம்­களின் கொவிட் 19 மர­ண­வீ­தமும், தொற்­று­வீ­தமும் 45 வீதத்தைக் கடந்­துள்­ள­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. முஸ்­லிம்­களின் கொவிட் 19 மர­ண­வீதம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் முஸ்லிம் சமூகம் பள்­ளி­வா­சல்­களை மைய­மாகக் கொண்டு விவா­தங்­களில் ஈடு­ப­டாது சுகா­தார பிரி­வி­ன­ரதும், வக்பு சபை­யி­னதும் வழி­காட்­டல்­களை கண்­டிப்­பாக தவ­றாது பின்­பற்­ற­வேண்டும். முஸ்­லிம்­களே நாட்டில் கொவிட் தொற்­றினை அதி­க­ரிக்கச் செய்­தார்கள் என்ற பழிச் சொல்­லுக்கு நாம் கார­ணமாய் விடக்­கூ­டாது.

நாட்டின் நிலை­மையையும் சமூ­கத்தின் நன்­மை­யையும் கருத்­திற்­கொண்டு பள்­ளி­வா­சல்­களை கொவிட் 19 சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றி பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென வக்பு சபை முஸ்லிம் சமூ­கத்தை வேண்­டிக்­கொள்­கி­றது. மாஸ்க், முஸல்லாஹ் இன்­றியும், வுழுவை வீடு­களில் நிறை­வேற்றிக் கொள்­ளா­மலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வருகை தரும் தொழு­கை­யா­ளி­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வேண்­டா­மெ­னவும் வக்­பு­சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களை வேண்டிக்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.