பயங்கரவாத தடை சட்டத்தை  நீக்காது திருத்த வேண்டும்

நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு அறிக்கை

0 434

மனித உரி­மைகள் தொடர்­பான முன்­னைய ஆணைக்­கு­ழுக்கள் மற்றும் குழுக்­களின் தீர்­மா­னங்­களை மதிப்­பீடு செய்தல், அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு, தனது இடைக்­கால அறிக்­கையை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்­தது.

மனித உரி­மைகள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் மற்றும் இது­போன்ற கடு­மை­யான குற்­றங்கள் குறித்த முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்கள் அல்­லது குழுக்­க­ளினால் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட்ட விட­யங்கள் குறித்து விசா­ரணை செய்தல், அறிக்­கை­யிடல் அல்­லது தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­காக, ஜன­வரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்­ர­வரி மாதம் 12ஆம் திக­தி­களில் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி மூலம், இந்த ஆணைக்­கு­ழு­வுக்­கான உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர்.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலை­மை­யி­லான இந்த ஆணைக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக, ஓய்­வு­பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்­திரா பெர்­னாண்டோ, ஓய்­வு­பெற்ற மாவட்டச் செய­லாளர் நிமல் அபே­சிறி மற்று யாழ்ப்­பாண முன்னாள் மேயர் யோகேஷ்­வரி பற்­கு­ண­ராஜா ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்ற கருத்­துடன் உடன்­ப­டாத ஆணைக்­குழு, பிரித்­தா­னியா உள்­ளிட்ட ஏனைய நாடுகள் பயங்­க­ர­வா­தத்தைத் தடுப்­ப­தற்­காக அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள சட்­டங்­களை ஆராய்ந்து, இச்­சட்டம் திருத்­தப்­பட வேண்டும் என்­பதை, இவ்­வி­டைக்­கால அறிக்­கையின் ஊடாகச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் 9, 11 மற்றும் 13ஆம் பிரி­வுகள் குறித்து விசேட கவனம் செலுத்­தி­யுள்ள ஆணைக்­குழு, பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை கூடிய ஜன­நா­யக முறையில் அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பான மூன்று முன்­மொ­ழி­வு­களை, இடைக்­கால அறிக்கை ஊடாக முன்­வைத்­துள்­ளது.

இச்­சட்­டத்தின் 9ஆவது பிரிவின் ஊடாகத் தடுத்து வைத்தல் நட­வ­டிக்­கை­களைச் செயற்­ப­டுத்தும் போது,  குறைந்­தது மூன்று மாதங்கள் அல்­லது அதற்கு மேற்­பட்ட காலம் வரையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் மீது குற்றப் பத்­தி­ரங்­களைத் தாக்கல் செய்து வழக்­கு­களை விசா­ரணை செய்து முடிப்­பது குறித்தும் 11ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களைச் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைப்­ப­தற்குப் பதி­லாக, விசேட பாது­காப்பின் கீழ் அவர்­களின் சொந்த வீடு­க­ளிலோ அல்­லது கிரா­மங்­க­ளிலோ தடுத்து வைக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

13ஆவது பிரிவின் கீழ் ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக, குறைந்­த­பட்சம் மூன்று உறுப்­பி­னர்­களைக் கொண்ட, அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு ஆலோ­சனை சபையை நிய­மிக்க வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்­தையும், ஆணைக்­குழு தனது இடைக்­கால அறிக்­கையின் ஊடாக முன்மொழிந்துள்ளது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.