ஹிஜாஸ், அஹ்னப் தடுத்து வைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்

உடன் விடுதலை செய்யுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 96 பேர் கோரிக்கை

0 525

(நமது நிருபர்)
அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெற்று வரும் எதேச்ச­தி­கா­ரமும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலும் எமது ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ளத்தை ஆட்டம் காண செய்­துள்­ளன. இவை அனைத்தும் எமது அன்­றாட வாழ்வில் இடம்­பெறும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக எம்மை மரத்­துப்­போக செய்­துள்­ள­துடன் எமது பிர­ஜைகளில் ஒரு பகு­தி­யினர் இலக்கு வைக்­கப்­படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்­துள்­ளன என்று பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஹிஸ்­புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்­பு­க்கா­வ­லா­னது நன்­றாக திட்­ட­மி­டப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பின்­பு­லத்தில் ஒரு அணி­தி­ரட்டல் செயற்­பா­டாக அந்த சமூ­கத்­திற்கு களங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தையும் மற்றும் தனிமை படுத்­து­வ­தையும் நோக்­காகக் கொண்டு இடம்­பெ­று­கி­றது என்றும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.,

நாட்டின் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் 96 விரி­வு­ரை­யா­ளர்கள் இணைந்து இந்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ள­துடன் நேற்­றைய தினம் இணைய வழியில் ஊடக மாநாடு ஒன்­றையும் நடத்­தினர். இந்­நி­லையில் குறித்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

பல தசாப்­த­கால பெரும்­பான்மை அர­சியல் மற்றும் அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெற்று வரும் எதேச்­சை­ய­தி­கா­ரமும் இரா­ணு­வ­ம­ய­மாக்­கலும் எமது ஜன­நா­ய­கத்தின் அடித்­த­ளத்தை ஆட்டம் காண செய்­துள்­ளன. இவை அனைத்தும் எமது அன்­றாட வாழ்வில் இடம்­பெறும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக எம்மை மரத்­துப்­போக செய்­துள்­ள­துடன் எமது பிர­ஜைகளில் ஒரு பகு­தி­யினர் இலக்கு வைக்­கப்­படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்­துள்­ளன. ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகிய இரு­வரும் கைது செய்­யப்­பட்டு ஒரு வரு­டத்­திற்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மனித உரி­மைகள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழக்­க­றிஞர் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா ­குற்­ற­வியல் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினால் ஏப்ரல் 14, 2020 அன்று கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் பிரிவு 9இற்கு அமைய 10 மாதங்­க­ளுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டார். கைது செய்­யப்­ப­டும்­போது அவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றங்­க­ளா­வன உயிர்த்த ஞாயிறு தாக்­குதல்தாரி­க­ளுக்­கு“­உ­தவி புரிந்து உடந்­தை­யாக செயற்­பட்டார்” என்­ப­தாகும். தற்­போது இவர் மீது பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் பிரிவு 2(1)(h) இற்கு அமை­யவும் சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சட்­டத்தின் பிரிவு 3(1) இற்கு அமை­யவும் பேச்சு தொடர்­பு­டைய குற்­றங்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு இவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றங்கள் அனைத்தும் வய­துக்கு வரா­த­வர்­களால் குற்­ற­வியல் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் அந்த சிறு­வர்கள் தங்­களை அச்­சு­றுத்­த­லுக்கும் கட்­டா­யத்­திற்கும் உட்­ப­டுத்தி தக­வல்கள் பெறப்­பட்­ட­தாக கூறு­கி­றார்கள்.

மே 16, 2020 அன்று பொலிஸ் பயங்­க­ர­வாத எதிர்ப்பு விசா­ரணைப் பிரி­வினால் மன்னார் மாவட்­டத்தைச் சேர்ந்த கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னப் ஜஸீம் என்­பவர் கைது செய்­யப்­பட்டார். ஜஸீ­மு­னு­டைய கைதிற்­கான குற்­றச்­சாட்டு இவ­ரு­டைய நூலான நவ­ரசம் இன­வா­தத்தைத் தூண்டும் கருத்­துக்­களை உள்­ள­டக்­கி­யது என்­ப­துடன் மாண­வர்கள் மத்­தியில் இன­வாத கருத்­துக்­களை போதித்தார் என்­ப­தாகும்.பல்­கலைக் கழ­கத்­துடன் தொடர்­பு­டை­ய­ சில மனோ­தத்­துவ வைத்­தி­யர்­களை உள்­ள­டக்­கி­ய “­வல்­லு­னர்கள் குழு” ஒன்­றினால் இக்­க­வி­தைகள் தொடர்­பாக பல தெளி­வற்ற விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.அவ்­வி­மர்­ச­னத்தின் படி, இந்­நூலின் உள்­ள­டக்­க­மா­னது வன்­மு­றை, வெ­றுப்பு மற்றும் தற்­கொலை எண்­ணங்­களைத் தூண்டும் கருத்­துக்­களை கொண்­டி­ருப்­ப­தாகும். இவர்­க­ளு­டைய அறிக்­கை­யா­னது மேற்­கூ­றப்­பட்ட முடி­வுகள் தொடர்­பான நியா­யப்­ப­டுத்­தலை வழங்க தவ­றி­ய­துடன் மேலும் இவ் ஏற்­பாட்டில் இரண்டு வெவ்­வேறு வித­மான முரண்­பட்ட மொழி­பெ­யர்ப்­பு­களும் (சிங்­கள மற்றும் ஆங்­கிலம்) உள்­ள­டங்­கி­யுள்­ளன என்றும் கூறப்­பட்­டது. இவ்­மு­ரண்­பட்ட தன்­மை­யா­னது இவர்­க­ளு­டைய இந்த செயற்­பாட்டை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்க வேண்டும். பொலிஸ் பயங்­க­ர­வாத எதிர்ப்பு விசா­ரணைப் பிரி­வினால் கூறப்­பட்ட விட­யங்­க­ளிற்கு முரண்­பட்ட வகை­யில், இந்த கவி­தைகள் வன்­முறை சம்­பந்­த­மான விட­யங்­களை ஆழ­மாக விமர்­சிக்­கின்­றன என்­பதை அண்­மைய மொழி­பெ­யர்ப்­புக்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

ஹிஸ்­புல்­லாவின் கைதும் தொடர்ச்­சி­யான தடுப்­புக்­கா­வலும் சட்­டத்­த­ர­ணி­களின் உரி­மை­க­ளுக்கும் சட்ட ஆட்­சிக்கும் எதி­ரான தாக்­கு­த­லாகும். அவ்­வாறே, ஜஸீ­மி­னு­டைய கைதா­னது ஒரு­வரின் தனிப்­பட்ட கருத்து சுதந்­திரம் மற்றும் பன்­மைத்­துவம் மீதான ஒரு தாக்­குதல் என்­ப­துடன் எண்­ணங்­களின் மீதான ஒரு பரந்த போர் என்­ப­தனை தெளி­வாகப் புலப்­ப­டுத்­து­கி­றது.இரண்டு வழக்­கு­க­ளி­னதும் போக்­கினை பார்க்­கும்­போது தெளி­வாக புலப்­ப­டு­வது யாதெனில் ஹிஸ்­புல்லா மற்றும் அஹ்னப் ஆகி­யோரின் உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளன என்­ப­தாகும். இழி­வான மற்றும் கேள்­விக்­கு­ரிய உத்­திகள் பல அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களை உரு­வாக்க தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. மேலும் தடுப்­புக்­கா­வலில் அவர்­க­ளு­டைய சுகா­தாரம் மற்றும் பாது­காப்பு தொடர்­பான அடிப்­ப­டை ­உ­ரி­மை­களும் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹிஸ்­புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்­பு­கா­வ­லா­னது நன்­றாக திட்­ட­மி­டப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பின்­பு­லத்தில் ஒரு அணி­தி­ரட்டல் செயற்­பா­டாக அந்த சமூ­கத்­திற்கு களங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தையும் மற்றும் தனிமைப்படுத்­து­வ­தையும் நோக்­காகக் கொண்டு இடம் ­பெ­று­கி­றது. இச் சமூ­கத்­திற்கு எதி­ரான வன்­மு­றைகள் மற்றும் அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் அர­சி­னால் “­தே­சிய பாது­காப்பு” என்ற பெயரில் வலுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. மார்ச், 2021இல் 1000 மத்­ரசா பாட­சா­லைகள் மூடு­தல் ­மற்றும் புர்­காவை தடை செய்தல் போன்ற திட்­டங்கள் பொதுப் பாது­காப்பு அமைச்­ச­ரினால் முன்­மொ­ழி­யப்­பட்­டது. ஒரு மாத காலத்­திற்குப் பின் அமைச்­ச­ர­வை­யினால் பொது­வெ­ளியில் அனைத்­து­வி­த­மான முகக்­க­வ­சங்­க­ளை ­அ­ணி­வ­தற்­கான தடைக்­கு ஒப்­புதல் வழங்­கப்­பட்­டது. மேலும் மே மாதத்தில் சுங்கத் திணைக்­கள உப பணிப்­பா­ள­ரினால் நாட்­டிற்கு கொண்டு வரப்­படும் அனைத்து வித­மான இஸ்­லா­மிய சமய தொடர்­பு­டைய நூல்­களும் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் என்ற அறி­வித்­தலும் வழங்­கப்­பட்­டது. இவ்­வா­றான செயற்­பா­டுகள் முஸ்லிம் என்ற கார­ணத்­திற்­காக ஒருவர் குற்­ற­வா­ளி­யாக்­கப்­ப­டு­வ­தை ­பு­லப்­ப­டுத்­து­வ­துடன் மேலும் எமது ஜன­நா­யக சுதந்­தி­ரத்தின் மீதான ஒரு தாக்­குதல் என்­ப­தையும் காட்டி நிற்­கி­றது.

முஸ்லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் கொவிட்­ நி­லை­மை­க­ளிலும் பிர­தி­ப­லிக்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஆண்டு கொவிட் தொற்று உச்­சக்­கட்­டத்தில் இருந்த நிலையில் சுகா­தார அமைச்­சினால் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு முரண்­பட்ட விதத்­தில் ­கொவிட் தொற்­றினால் இறந்த உடல்­களை தகனம் செய்­வது தொடர்­பான ஒரு கட்­டாய சட்டம் கொண்­டு­ வ­ரப்­பட்­டது. பல்­கலைக் கழ­கத்­துடன் தொடர்­பு­டைய சிலர் உள்­ள­டங்­க­ளாக ­பல நிபு­ணர்­களால் ஆதா­ர­மற்ற பொது சுகா­தார விதிகள் குறிப்­பி­டப்­பட்டு இக்கட்­டாய சட்­ட­மா­னது ஆத­ரிக்­கப்­பட்­டது. மேலும் இது முஸ்­லிம்­களால் பாரம்­ப­ரி­ய­மாக கடை­பி­டிக்­கப்­பட்டு வரும் அவர்­க­ளது இறப்பு தொடர்­பான சடங்­கு­க­ளை­ அ­லட்­சியம் செய்யும் அல்­லது அவ­ம­திக்கும் ஒரு செயற்­பா­டாகும். இன்று தக­னத்­திற்­கு ­அ­னு­மதி வழங்­கப்­பட்ட போதிலும் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தி­யான ஓட்­ட­மா­வ­டி, மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் மட்­டுமே இது அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. இறந்த உடல்­களை தகனம் செய்­வது தொடர்­பான சிக்­கல்கள் புலப்­ப­டுத்­து­வது யாதெனில் கொவிட் தொற்­றினை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு ஆயு­த­மாக பயன்­ப­டுத்தும் ஒரு வெளிப்­ப­டை­யான முயற்சி என்­ப­தா­கும். வைத்­தி­யர்கள், சுகா­தார பரி­சோ­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள், இரா­ணு­வத்­தினர், அரச கட்­டுப்­பாட்­டுக்குள் உள்ள ஊட­கத்தின் அறிக்­கைகள் மற்றும் செயற்­பா­டுகள் மூலம் முஸ்­லிம்­களே இவ் வைரஸ் பர­வ­லுக்கு முக்­கிய காரணம் என்ற ஒரு பிம்பம் உரு­வாக்கப்பட்­டுள்­ளது.

இப்­போக்கு ஒன்றும் புதி­ய­தல்ல. ஒரு தசாப்­தத்­திற்கு மேலாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் உச்­சக்­கட்ட வன்­மு­றையின் ஒரு தொடர்ச்­சியே இது­வாகும். 2012 இல் ஆரம்­பித்த ஹலா­லிற்கு எதி­ரான பிரச்­சாரம், அளுத்­கம மற்றும் திக­னயில் இடம்­பெற்ற கல­வரம், பள்­ளி­வா­சல்கள் மீது இடம்­பெற்ற திட்­ட­மி­டப்­பட்ட தாக்­குதல் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிரச்­சா­ரங்கள் உள்­ள­டங்­க­லாக பல செயற்­பா­டுகள் இதற்கு ஆதா­ர­மாகும். மேலும், அர­சியல் மய­மாக்­கப்­பட்ட பிரச்­சா­ரங்கள் பல முஸ்லிம் தனி­ம­னி­தர்­களை குறி­வைத்து இடம்­பெற்­றுள்­ளன. உதா­ர­ண­மாக வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் கட்­டாய கருத்­த­டையில் ஈடு­பட்­டமை என்ற குற்­றச்­சாட்டின் மூலம் கைது செய்­யப்­பட்டார். மற்றும் செயற்­பாட்­டா­ளர் ­றம்ஷி றஷீக் ­உ­யிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுக்­குப்­பின்­ முஸ்லிம்களுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கள் மீது கண்­டனம் தெரி­வித்­த­மைக்­காக கைது செய்­யப்­பட்டார். பொது­மக்­களின் பாது­காப்பை உறுதி செய்யும் பொறுப்­பு­டைய அரச துறைகள் இவ்­வா­றான வழக்­கு­களை வேக­மாக முன்­னெ­டுக்கும் நில­மை­யுடன் ஒப்­பிட்டு பார்க்­கும்­போ­து­ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் பல வன்­மு­றை­களை தடுக்க தவ­றி­ய­துடன் ஒரு­வ­ரையும் பொறுப்­புக்­கூற வைக்­க­வில்லை.

எதேச்­ச­தி­காரம் மற்றும் இரா­ணு­வ­ம­ய­மாக்கல் வேகப்­ப­டுத்தும் மத்­தி­யில்தான் முஸ்லிம் மக்கள் குறி­வைக்­கப்­ப­டு­வ­துடன் ஜன­நா­யக அமைப்­புக்­களும் பல­வீ­ன­மாக்­கப்­ப­டு­கின்­றன. பல உயர் அதி­கா­ரி­க­ளையும் அர­சி­யல்­வா­தி­க­ளையும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய குற்­ற ­வி­சா­ர­ணைப்­பிரின் அதி­கா­ரி­யான சானி அப­ய­சே­கர மற்றும் பௌத்­த ­ம­தத்தை விமர்­சித்து எழு­தி­யது என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட சக்­திகா சத்­கு­மார போன்ற பலர் கைது செய்­யப்­பட்­டார்கள். பயங்­க­ர­வாத தடைச்­சட்டம், அவ­ச­ர­கால ஒழுங்­குகள் அர­சி­யல் ­ம­ய­மாக்­கப்­பட்ட கரு­வி­க­ளாக அதி­கா­ரத்தால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அரச நிறு­வ­னங்­க­ளையும் நீதித்­து­றை­யையும் கேள்­விக்கு உட்­ப­டுத்தும் விதத்தில் இந்தச் சட்­டங்கள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பெரும்­பான்மை அணி­தி­ரட்­டல்கள், ஆட்­சி­யா­ளர்­களை எதிர்ப்­போரை தாக்­கு­வ­தற்கும் மற்றும் மாற்­றுக்­க­ருத்தை நொருக்­கு­வ­தற்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

கல்­வித்­து­றையில் உள்ள அனை­வரும் தமது பேச்சு சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்தி அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு எதி­ராக இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்கில் கேள்வி எழுப்­பு­வது அவ­சி­ய­மாகும். அத்­துடன் பொது உயர் கல்வி நிறு­வ­னங்­களின் அங்­கத்­த­வர்கள் என்ற முறையில் ஒடுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆதரவாக குரல் எழுப்பவேண்டும். நியாயமின்மை, பெரும்பான்மை அரசியல், இனவாதம் போன்றவை ஏற்படுத்திய அழிவுகள் மூலம் கற்றுக்கொண்டவையை அடிப்படையாக வைத்தும் நாளாந்தம் எமது சமூகத்தின் ஒரு பகுதியினர் அச்சத்துடனும் பாதுகாப்பின்மையுடனும் வாழ்வதை வைத்தும் நாம் அனைவரும் இத்தாக்குதல்களுக்கு எதிராக செயற்பட வேண்டும். தீங்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவது அனைவர் மீதும் நிச்சயமாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீம்; ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்துடன்; இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரட்டும் பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்பதையும் புலப்படுத்துகிறது.மேலும் குற்றவியல் நீதி முறைமையின் சீரழிவு மற்றும் அரச துறையின் வீழ்ச்சி சமூகத்தின் அடிப்படையான ஜனநாயகத் தளங்களை சீர்குலைக்கிறது என்ற ஆழ்ந்த கவலை எங்களுக்குண்டு. ஆகவே நாங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவும் ஜனநாயகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அது போன்ற ஏனைய சட்டங்களை இரத்து செய்யுமாறு கோருகிறோம். இறுதியாக எமது கல்விச் சுதந்திரத்தை பயன்படுத்தி இப்போராட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அனைவர் சார்பிலும் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு அனைத்து கல்வி சார் சமூகத்திற்கும் அழைப்பு விடுக்கிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.