முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை

தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்தது

0 358

றிப்தி அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இறுதி பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு இது­வரை கட்­சியால் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் இதன் கார­ண­மாக இறு­தி­யாக இடம்­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு முன்­னரே கட்­சியை விட்டு விலகிச் சென்­ற­வர்­களும் வேறு கட்­சி­களில் இணைந்து கொண்­ட­வர்­களும் கூட இது­வரை முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னர்­க­ளா­கவே பெய­ரி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வந்­துள்­ளது.

தகவல் அறியும் சட்­டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு மேற்­கொள்­ளப்­பட்ட விண்­ணப்­பத்தின் ஊடா­கவே இந்த விடயம் தெரி­ய­வந்­தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிர்­வாக உறுப்­பி­னர்­களின் பெயர்ப் பட்­டி­யலை வழங்­கு­மாறு தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு மேற்­கொள்­ளப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்கு கடந்த ஜுன் 30ஆம் திகதி அளிக்­கப்­பட்ட ஆவ­ணங்­க­ளு­ட­னான பதி­லி­லேயே இந்த விபரம் தெரிய வந்­தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கடந்த 2020ஆம் ஆண்டு பெப்­ர­வரி 23ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி, பொல்­கொல்­லயில் இடம்­பெற்­றது.

இந்த பேராளர் மாநாட்­டுக்கு முன்னர் நடை­பெற வேண்­டிய கட்­டாய உயர்­பீடக் கூட்டம் கட்சி தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில்; 2020ஆம் ஆண்டு பெப்­ர­வரி 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

இதில் தெரி­வு­செய்­யப்­பட்ட கட்­சியின் நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் உள்­ளிட்ட 99 அதி­யுயர் பீட உறுப்­பி­னர்­களின் பெயர்ப் பட்­டியல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்­கீ­மினால் பேராளர் மாநாட்டில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெறப்­பட்­டது.

எனினும் கட்­சியின் பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட புதிய நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரிய வந்­துள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சிரேஷ்ட பிரதித் தலை­வ­ராக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எம். அஸ்­லமும், பொரு­ளா­ள­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசீமும், பிரதித் தேசிய அமைப்­பா­ள­ராக முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஏ.எம்.ஜெமீலும், பிரதிப் பொரு­ளா­ள­ராக எம்.சீ. எஹியா கானும், போராளர் மாநாட்டின் செய­லா­ள­ராக முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் அஹமட் ஹையும், கல்வி மற்றும் கலா­சார விவ­கார இணைப்­பா­ள­ராக முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உது­மா­லெப்­பையும் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

எனினும் இந்த புதிய தெரி­வுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

மாறாக 2020 பெப்­ர­வரி 21 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ள­ரினால் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­பப்­பட்­டுள்ள தக­வலில் கட்­சியின் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ராவுத்தர் நெய்னா முஹம்­மது – சிரேஷ்ட பிரதித் தலைவர் எனவும், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எம். அஸ்லம் – பொரு­ளாளர் எனவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசீம் – பிரதி தேசிய அமைப்­பாளர் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் கட்­சியின் பிரதி பொரு­ளாளர் பதவி வெற்­றி­ட­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ள­ரினால் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, குறித்த போராளர் மாநாட்­டுக்கு முன்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஐ.எம்.மாஹீர் மற்றும் எஸ்.எல்.எம். பழீல் ஆகியோர் தொடர்ந்தும் கட்­சியின் நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளாக செயற்­ப­டு­வ­தா­கவும் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­ணங்க ஐ.எம்.மாஹீர் மற்றும் அக்­கட்­சியின் பேராளர் மாநாட்டு செய­லா­ள­ரா­கவும் எஸ்.எல்.எம். பழீல் அக்­கட்­சியின் கல்வி மற்றும் கலா­சார விவ­கார இணைப்­பா­ள­ராக செயற்­ப­டு­வ­தா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, சுக­யீனம் கார­ண­மாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்­வ­தாக முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ராவுத்தார் நெய்னா முஹம்­மது, கடந்த பேராளர் மாநாட்­டுக்கு முன்னர் அறி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து அப்­ப­த­விக்கு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்­யப்­பட்ட போதிலும் இது­வரை ராவுத்தர் நெய்னா முஹம்­மதின் பெயரே தேர்தல் ஆணைக்­கு­ழுவின் ஆவ­ணங்­களில் காணப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு வழங்­கப்­பட்ட தக­வல்­க­ளுக்­க­மைய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஐ.எல்.எம். மாஹிர் இரண்டு கட்­சி­களின் உறுப்­பி­ன­ராக செயற்­ப­டு­கின்றார்.

தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் வழங்­கப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஐ.எல்.எம். மாஹிர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மாநாட்டு செய­லா­ள­ரா­கவும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் கல்வி, சமய மற்றும் கலா­சார விவ­கார பணிப்­பா­ள­ரா­கவும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விப­ரங்கள் வழங்­கப்­ப­டா­தமை தொடர்பில் அக்­கட்­சியின் செய­லாளர் நிசாம் காரி­யப்­பரை நாம் தொடர்புகொண்டு கேட்டதற்கு “குறித்த போராளர் மாநாடு நிறைவடைந்த பின்னர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவிட்டேன்” என அவர் தெரிவித்தார்.

“எனினும், போராளர் மாநாட்டு அறிக்கை இதுவரை அனுப்பப்படவில்லை. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஞாபகமூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அந்த அறிக்கை அனுப்பப்படும்” என ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.