தொழுகை நேரங்­களில் வர்த்­தக நிலை­யங்­க­ளை மூடு­வ­தில்லை எனும் சிபா­ரிசு கலந்­து­ரை­யா­டலை பிற்­போட்­டது சவூதி சூரா­ க­வுன்ஸில்

0 360

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரே­பி­யாவில் வெள்­ளிக்­கி­ழமை தவிர்ந்த ஏனைய நாட்­களில் தொழுகை நேரங்­களில் கடை­க­ளையும், வர்த்­தக நிலை­யங்­க­ளையும் மூடு­வ­தில்லை எனும் தனது சிபா­ரிசு தொடர்­பான கலந்­து­ரை­யா­டலை அந்த நாட்டின் சூரா­க­வுன்ஸில் பிற்­போட்­டுள்­ளது.

இஸ்­லா­மிய விவ­கார அமைச்சின் வரு­டாந்த அறிக்கை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் அமர்வு கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெ­ற­வி­ருந்த நிலையில் அமர்வு இடம்­பெ­று­வ­தற்கு இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்பு சூரா­க­வுன்ஸில் தனது தீர்­மா­னத்தை உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை தவிர்ந்த ஏனைய நாட்­களில் தொழுகை நேரங்­களில் வர்த்­தக நிறு­வ­னங்­களை மூடு­வ­தற்கு கட்­டா­யப்­ப­டுத்தக் கூடாது எனவும் சூரா­ க­வுன்ஸில் தெரி­வித்­துள்­ளது.

திங்­கட்­கி­ழமை அமர்வில் சூரா­ க­வுன்­ஸிலின் இரு விஷேட சிபா­ரி­சுகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி வாக்­க­ளிப்பு இடம்­பெ­ற­வி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். முத­லா­வது சிபா­ரிசு கலா­நிதி பஹத் அல் துக்­கைபி மற்றும் பொறி­யி­ய­லாளர் அலி அல்­கர்னி ஆகி­யோரால் முன்­வைக்­கப்­பட்­டது.

இஸ்­லா­மிய விவ­கார அமைச்சு தனியார் மயப்­ப­டுத்தும் தேசிய நிலை­யத்­துடன் இணைந்து அமைச்சின் சில சேவை­களை தனியார் மயப்­ப­டுத்தல் தொடர்பில் ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்டும். குறிப்­பாக பள்­ளி­வா­சல்­களின் கட்­டி­டங்­களை பழு­து­பார்த்தல் மற்றும் துப்­பு­ரவு செய்தல் போன்ற அமைச்சின் சேவைகள் தனியார் மயப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

இரண்­டா­வது வெள்­ளிக்­கி­ழமை தவிர்ந்த ஏனைய நாட்­களில் தொழுகை நேரங்­களில் வர்த்­தக நிறு­வ­னங்கள் மற்றும் கடை­களை மூட வேண்டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது. இந்த குறிப்­பிட்ட சிபா­ரிசு சூரா­க­வுன்ஸில் உறுப்­பி­னர்­க­ளான அட அல்­சுப்­ஹைதி, கலா­நி­தி­க­ளான பைசால் அல்­பாதில், லதீபா அல் ஷாலான், லதீபா அல் அப்துல் கரீம் ஆகி­யோரால் முன்­வைக்­கப்­பட்­டது. இஸ்­லா­மிய விவ­கார அமைச்சு சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற வேண்டும். எரி­வாயு நிலை­யங்கள், பாம­சிகள் என்­பன உட்­பட வர்த்­தக நிறு­வ­னங்­களை வெள்­ளிக்­கி­ழமை தவிர்ந்த ஏனைய நாட்­ட­களில் தொழுகை நேரங்­களில் மூடும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது என இவர்கள் சிபா­ரி­சினை முன் வைத்­துள்­ளனர்.

மேலும் தனது ஏனைய சிபா­ரி­சு­க­ளையும் பிற்­போட்­டுள்­ளது. இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு பள்­ளி­வா­சல்­களின் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் தொடர்பான தீர்மானங்களையும், சுற்று நிருபங்களையும் துரிதப்படுத்த வேண்டும் எனும் சிபாரிசும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சு இமாம்களுக்கும் மத போதகர்களுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.