தமிழ்­நாட்டுத் தேர்­தலில் முஸ்­லிம்­களின் வகி­பாகம்

0 538

என்.எம்.அமீன்

நடந்து முடிந்த இந்­திய மாநில தேர்­தல்­களில் இந்­தி­யாவின் ஆளும் கட்சி ஆத­ரவு அணி­களைத் தோற்­க­டித்து தமிழ்­நாட்டில் மு.க.ஸ்டாலினும் மேற்கு வங்­கா­ளத்தில் மம்தா பானர்­ஜியும் வெற்றி பெற்று முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­றுள்­ளனர்.

நடந்து முடிந்த தேர்­தலில் தமிழ்­நாட்டில் முஸ்­லிம்­க­ளது வகி­பா­கத்தை ஆராய்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

தமிழ்­நாட்டில் சுமார் ஏழரை கோடி மக்கள் வாழ்­கி­றார்கள். அதில் சுமார் 45 லட்சம் முஸ்­லிம்கள் வாழ்­கி­றார்கள். முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் தமிழ்­நாட்டில் 5.9 சத­வீதம் ஆகும்.

தமிழ்­நாட்டில் திமுக, அதி­முக தின­க­ரனின் அம­முக, நடிகர் கமல்­ஹா­சனின் மக்கள் நீதி மய்யம் தனித்­த­னி­யாகவும் கூட்­டணி அமைத்தும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்­டி­யிட்­டன. மொத்தம் 5 முனை போட்டி. இதில் பல முஸ்­லிம்கள் போட்­டி­யிட்­டனர். பிர­தா­ன­மான போட்டி திமுக, அதி­முக இடை­யில்தான். மற்ற மூன்றும் சட்­டப்­பே­ர­வையில் பிர­தி­நி­தித்­துவம் பெற­வில்லை.

திமுக தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக்கு முஸ்­லிம்கள் பெரும்­பாலும் வாக்­க­ளித்­துள்­ளனர். இது தவிர எஸ்­டி­பிஐ, உவை­சியின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி இடம்­பெற்­றி­ருந்த அம­முக, மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகி­ய­வற்­றுக்கு ஓர­ளவு முஸ்­லிம்கள் வாக்­க­ளித்­துள்­ளனர். அதி­முக கூட்­ட­ணியில் பாஜக இடம்­பெற்ற கார­ணத்தால் பெரும்­பாலும் முஸ்­லிம்கள் அதற்கு வாக்­க­ளிக்­க­வில்லை.

திமுக சார்பில் மூன்று முஸ்­லிம்­களும் மனி­த­நேய கட்சி சார்பில் இரு முஸ்­லிம்­களும் இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூவரும் விடு­தலை சிறுத்தை கட்சி சார்பில் ஒரு­வரும் காங்­கிரஸ் சார்பில் ஒரு­வரும் போட்­டி­யிட்­டனர். இவர்­களில் இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்­டி­யிட்ட மூவர் தவிர ஏனைய ஏழு பேரும் வெற்றி பெற்­றனர். இவர்­களில் திமுக சார்பில் போட்­டி­யிட்ட முஸ்லிம் அமைச்­சர்கள் செஞ்சி மஸ்தான், ஆவடி நாசர் ஆகியோர் ஸ்டாலினின் அமைச்­ச­ர­வையில் நிய­மிக்­கப்­பட்­டனர்.

திமு­கவின் நீண்­ட­கால ஆத­ரவுக் கட்­சி­யாக செயற்­பட்டு வந்த இந்­திய யூனியன் முஸ்லிம் லீக், இம்­முறை ஒரு தொகு­தி­யி­லேனும் வெற்றி பெறாமை அக்­கட்சி எதிர்­நோக்­கிய பின்­ன­டை­வாகும்.தமது கட்­சிக்கு ஏன் இந்த தோல்வி ஏற்­பட்­டுள்­ளது என்­பதை மீளாய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வரு­கி­றது. தெரி­வு­செய்த தொகு­தி­களும் நிறுத்­தப்­பட்ட வேட்­பா­ளர்­களும் சாத­க­மாக இருக்­க­வில்லை. தமக்குச் சாத­க­மான தொகு­தி­களைக் கேட்டுப் பெறு­வ­தற்கு கட்சி தவ­றி­விட்­டது என்ற விமர்­ச­னமும் எழுப்பப்­பட்­டுள்­ளது.

திமுக சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற செஞ்சி மஸ்­தானின் பொறுப்பு சிறு­பான்மை நலம் மற்றும் வெளி­நாடு வாழ் தமிழர் நலன் என்ற அமைச்சின் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. மற்­றொரு திமுக முக்­கி­யஸ்­த­ரான எஸ்.எம் நவா­ஸுக்கு பால்­வளத் துறை அமைச்சு வழங்­கப்­பட்­டுள்­ளது. திமுக சார்பில் பாலை­யங்­கோட்­டையில் அப்துல் வஹாப் தெரி­வா­கி­யுள்ளார்.

இத் தேர்­தலில் காங்­கி­ர­சி­லி­ருந்து ஜே.எம்.ஹெச்.ஹஸன் மௌலானா, வேளச்­சேரி தொகு­தியில் வெற்றி பெற்­றுள்ளார். இத் தேர்­தலில் மனி­த­நேய கட்சி சார்பில் பேரா­சி­ரியர் எம்.எச். ஜவா­ஹி­ருல்­லாஹ்வும் ப. அப்துல் ஸமதும் தெரி­வா­கி­யுள்­ளனர். இம்­முறை நாகப்­பட்­டினம் தொகு­தியில் இளம் அர­சியல் செயற்­பாட்­டா­ளரும் கலை இலக்­கிய செயற்­பாட்­டா­ள­ரு­மான விடு­தலை சிறுத்­தைகள் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட ஆளூர் ஷா நவாஸ் வெற்றி பெற்­றுள்ளார்.

நடந்து முடிந்த தேர்­தலில் தமிழ் நாட்டு முஸ்­லிம்கள் கூடு­த­லாக திமுக கூட்­ட­ணிக்கே வாக்­க­ளித்­துள்­ளனர். இது­தொ­டர்­பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள ஆய்வு ஒன்றில் முஸ்­லிம்கள் திமு­க­வுக்கு 69.2 சத­வீதம் வாக்­க­ளித்­துள்­ளனர். ஆளும் கட்­சி­யாக இருந்த ஏ.டி.எம் கேயிற்கு 24.18 சத­வீ­தமே வாக்­க­ளித்­துள்­ளனர். முஸ்­லிம்­களைப் போன்று தமிழ்­நாட்டு கிறிஸ்­த­வர்­களும் திமுக கூட்­ட­ணிக்கே கூடு­த­லாக வாக்­க­ளித்­துள்­ளனர். திமு­க­வுக்கு 56.6 சத­வீ­தமும் ஏ.டி.எம்.கேயிற்கு 38.3 சத­வீ­தமும் வாக்­க­ளிக்க பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் இத்­தேர்­தலில் ஏனைய கட்­சி­க­ளுக்கு அளித்த வாக்கு 7.3 சத­வீதம் என வெளி­யான புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­நேரம் மேற்கு வங்­கா­ளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான அரசின் 43 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் 5 முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சுக்­களும் இரு இணை அமைச்­சுக்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. மேற்குவங்காளம் ஜமாஅதுல் உலமா ஹிந்தின் தலைவர் சித்திகுல்லாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இனவாதம் தலைதூக்கி இருந்த இந்தியா இப்போது புது வழியில் செல்வதற்குத் தயாராகி வருகின்றது என்பதனையே மாநிலத் தேர்தல் முடிவுகளும் அதன்பின் தலைவர்கள் எடுத்துள்ள முற்போக்கான தீர்மானங்களும் சுட்டிக் காட்டுவதாக உள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.