கொல்லத் துரத்தும் கொரோனா

ஒரு வைத்தியரின் அனுபவப் பகிர்வு

0 546

Dr. MSM. நுஸைர்
Registrar in Medicine
தேசிய சுவாச நோய் வைத்தியசாலை,
வெலிசரை.

நாட்டில் அமுல்படுத்தப்பட் டுள்ள பயணக்­கட்டுப்பாடு­க­ளுக்கு மத்­தி­யிலும் சுவாச நோய் கிளினிக் மக்­களால் நிரம்­பி­யி­ருந்­தது. வைத்­தி­யர்­களும் இய­லு­மான பாது­காப்பு முறை­மை­களை கடைப்­பி­டித்த வண்ணம் நோயா­ளிக்கு சிகிச்­சை­ய­ளித்து கொண்­டி­ருந்­தனர். தேசிய சுவாச வைத்­தி­ய­சாலை என்­பதால் அனைத்து நோயா­ளி­களும் சுவாசப் பிரச்­சி­னை­க­ளுக்­காகவே க்ளி­னிக்­குக்கு வருகை தந்­தி­ருந்­தனர். சிலர் இரு­மிக்­கொண்டும் இன்னும் சிலர் மூச்சு விடு­வதில் சிர­மத்­தோடும் அமர்ந்­தி­ருந்­தனர். இவர்­களில் யார் கொரோனா நோயாளி என்­பதை யூகிப்­பது சிர­ம ­சாத்­தி­ய­மான விடயம் என்­பதால் சற்று பதற்றத்­தோடே வைத்­தி­யர்­களும் தாதி­மாரும் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்­தனர்.

அப்­போது ஓர் இளம் பெண் வைத்­தியர் ஒருவர் தனது கண­வனை அழைத்துக் கொண்டு விஷேட வைத்­திய நிபு­ணரை சந்­திப்­ப­தற்­காக வரு­கை­ தந்­தி­ருந்தார்.

மிகவும் வாட்­ட­சாட்­ட­மான உடல் வாக்கை கொண்­டி­ருந்த அந்த வாலிபர் மூச்சு விடு­வதில் சற்று சிர­மப்­பட்டுக் கொண்­டி­ருந்தார்.

அருகில் அவ­ரது மனைவி பல வைத்­திய அறிக்­கை­க­ளோடும் X ray படங்­க­ளோடும் பதற்றத்­தோடு நின்­று­கொண்­டி­ருந்தார்.
Good morning sir, this is my husband என பேசத்­தொ­டங்­கிய அவர் தனது குடும்ப உறுப்­பி­னர்கள் பல­ருக்கு அண்­மையில் கொரோனா தொற்று ஏற்­பட்­ட­தா­கவும் தனது கண­வனும் கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி சிகிச்சை பெற்று இரு வாரங்­க­ளுக்கு முன்­னரே வீடு திரும்­பி­யி­ருந்தார் எனவும் குறிப்­பிட்டார்.

சேர், டிக்கட் வெட்டி வந்­த­தி­லி­ருந்து அவர் வீட்­டையே தான் சேர் இருக்­கிறார். வேலைக்கும் போகல்ல, ஆனா வந்ததில இருந்து அவர்ர உடம்பு நால்­லால்ல, எப்­பயும் டயடாவே இருக்­கேண்டு சொல்­றாரு. இப்ப நாலஞ்சு நாளா மூச்­செ­டுக்க கஷ்­டமா இருக்கு என்டு சொல்­றாரு. படுத்­தாலும், பாத்­ரூ­முக்கு போக நடந்­தாலும் கஸ்­டப்­ப­டு­ராரு. எல்­லாத்­துக்கும் நான்தான் ஹோஸ்­பி­டல்ல இருந்து கொரா­னாவ கொண்­டுபோய் அவ­ருக்கு குடுத்­துட்­டெ­னாக்கும் எனக் கூறி அழத்­தொ­டங்­கி­விட்டார் அந்தப் பெண் வைத்­தியர்.

அனைத்து சுகா­தார துறை ஊழி­யர்­களும் எதிர்­கொள்­ளக்­கூ­டிய ஒரு பிரச்­சி­னைதான் இது என்­பதை புரிந்­து­கொண்ட விஷேட வைத்­திய நிபுணர் அந்த வைத்­தி­யரின் கண­வரை பரி­சோ­தித்து விட்டு அவ­ரது ரிபோர்ட் களை பார்­வை­யிட்டார். x ray யில் கொவிட் நியூ­மோ­னி­யாவின் தாக்கம் சுவா­சப்­பை­களை பதம்­பார்த்­தி­ருந்­தது தெளி­வாக இருந்­தது.

வைத்­திய நிபுணர் அப்பெண் வைத்­தி­யரை அமரச் செய்து மெது­வாக பேச ஆரம்­பித்தார். இது கொரோனா வைர­சினால் சுவா­சப்­பையில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பாகும். கொவிட் நியூ­மோ­னியா ஏற்­பட்ட ஒரு­வ­ருக்கு உட­லி­லி­ருந்து வைர­சுகள் அழிந்த பின்­னரும் வைர­சு­களால் உடலில் ஏற்­பட்ட பாதிப்­புகள் சரி­யா­வ­தற்கு நீண்ட நாட்­க­ளா­கலாம். சில­ருக்கு ஆறு வாரங்­க­ளுக்கு மூச்­சு­வி­டு­வதில் சிர­ம­மி­ருக்கும். இன்னும் சில­ருக்கு Post Covid Lung Fibrosis எனும் சுவா­சப்பை கன­ம­டைதல் நோய் நிலை ஏற்­பலாம். இது சுவா­சப்­பை­களில் நிரந்­தர பாதிப்பை ஏற்­ப­டுத்தும். ஆனால் இதனை இப்­போது அறிந்து கொள்ள முடி­யாது. இன்னும் இரு மாதங்­களின் பின் CT Scan பரி­சோ­தனை செய்து பார்ப்போம். இப்­போ­தைக்கு நான் தரும் மருந்துகளை பாவித்து ஓய்­வாக இருங்கள் என ஆறுதல் கூறி அவர்­களை அனுப்­பி­வைத்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் இன்­று­வரை பல்­லா­யிரம் உயிர்­களை பலி­வாங்­கி­யுள்­ளது. தற்­போது எமது நாட்­டிலும் கொரோனா கோரத்­தாண்­டவம் ஆடிக்­கொண்­டி­ருக்­கி­றது. கொரோனா தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு ஆரம்­பத்தில் பாரிய அறி­கு­றி­களோ நோய் நிலை­மை­களோ ஏற்­ப­டா­ம­லேயே குண­ம­டைந்­து­வி­டு­வார்கள். ஆனால் சில­ருக்கு தொற்­றி­லி­ருந்து குண­மான பின்­னரும் பல்­வேறு பிரச்­சி­னைகள் நீண்ட நாட்­க­ளுக்கு தொடரும் என அமெ­ரிக்­காவின் Mayo Clinic சஞ்­சிகை உட்­பட பல வைத்­திய நிபு­ணர்­களும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். வயோ­தி­பர்­களும் தொற்றின் போது அதிக நோய் அறி­கு­றிகள் ஏற்­பட்­ட­வர்கள் மட்­டு­மன்றி இளம்­வ­ய­தி­ன­ருக்கும் நீண்­டநாள் பாதிப்­புகள் ஏற்­ப­டலாம் என Mayo Clinic சஞ்­சிகை எச்­ச­ரிக்­கின்­றது.

இதை இல­கு­வாக சொல்­வ­தானால் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் பர­விய சிக்கன் குனியா காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தற்­போதும் மூட்­டு­வ­லியால் அவஸ்­தைப்­ப­டு­வதை உதா­ர­ண­மாக குறிப்­பி­டலாம்.

பொது­வாக கொரோனா தொற்­றுக்கு பின்னர் தொடர்ச்­சி­யான களைப்பு, மூச்சு விடு­வதில் சிரமம், இருமல், மூட்டு வலி, நெஞ்­சு­வலி, ஞாபக மறதி, தூக்­க­மின்மை, மன அழுத்தம் என்­பன ஏற்­ப­டலாம்.

கொரோனா வைரசின் நீண்ட கால பாதிப்­பாக உள் உறுப்­புகள் பாதிக்­கப்­ப­டலாம். இத­யத்­த­சைகள் பாதிக்­கப்­பட்டு- இதயம் பல­வீ­ன­ம­டை­யலாம், நரம்­புத்­த­ளர்ச்சி, பக்­க­வாதம் போன்­றவை ஏற்­ப­டலாம், இரத்தம் உறை­வ­டைதல் மூலம் சிறு­நீ­ரகம், ஈரல் போன்ற உறுப்­புகள் பாதிக்­கப்­ப­டலாம். அவ்­வாறே ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று Post Covid Lung fibrosis எனப்­படும் சுவா­சப்பை கன­ம­டைதல் நோய் ஏற்­ப­டலாம். இதன்­போது சுவா­சப்பை தான் சுருங்கி விரி­யக்­கூ­டிய மென்மை தன்­மையை இழந்து தடிப்­ப­டை­வ­தனால் சுவாசம் தடைப்­படும். எப்­படி தோலில் ஏற்­படும் காயங்கள் குண­ம­டையும் போது தழும்­புகள் ஏற்­ப­டு­கி­றதோ அவ்­வாறே சுவா­சப்­பையின் காற்­ற­றை­களில் ஏற்­படும் தழும்­பு­களால் (fibrosis) இந்­நிலை ஏற்­ப­டு­கி­றது. இவர்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக வீட்டில் ஒக்­சிஜன் பாவிக்க வேண்­டியோ அல்­லது சுவா­சப்பை மாற்று அறுவை சிகிச்­சையோ செய்­ய­வேண்டி ஏற்­ப­டலாம். (இலங்­கையில் செய்­யப்­ப­டு­வ­தில்லை).

இவ்­வா­றான பல பிரச்­சி­னைகள் குறைந்த சத­வீ­த­மா­ன­வர்­க­ளுக்கே ஏற்­ப­டக்­கூ­டி­ய­தாக இருப்­பினும் இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்கள் கொரோனா தொற்­றினால் பாதிக்­கப்­ப­டும்­போது ஒரு பாரிய தொகை­யினர் Post Covid Complications – கொவிட்­டிற்கு பின்­ன­ரான சிக்கல் நிலைக்கு ஆளாக நேரிடும். இதனை முகம்­கொ­டுக்க வேண்­டிய பாரிய சிக்கல் நிலை சுகா­தா­ரத்­து­றைக்கும் அர­சாங்­கத்­திற்கும் பெரும் தலை­வ­லி­யாக விரைவில் உரு­வெ­டுக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சில நாடுகள் இதற்கு முகம் கொடுக்­கு­மு­க­மாக post Covid Clinic களை ஆரம்­பித்து நோயா­ளி­களை கண்­கா­ணித்து சிகிச்­சை­ய­ளிக்க ஆரம்­பித்­துள்­ளனர்.

எமது நாட்டை பொறுத்­த­வரை தொற்றை கட்­டுப்­ப­டுத்­து­வ­தி­லேயே இன்னும் நாம் வெற்றி காணாத ஒரு சூழ்­நி­லையில் Post Covid Clinic களை பற்றி சிந்­திப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் தற்­போ­தைக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

ஆரம்­பத்தில் கொரோனா தாக்கம் ஏற்­பட்ட போது பல மேலைத்­தேய நாடுகள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டன. ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வைத்திய ஆலோசனைக்கு புறம்பாக மூடநம்பிக்கைகளின் பின்னால் சென்றதன் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே எதிர்கால இலங்கை யின் ஆரோக்கியத்தை ஓரளவேனும் பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கை பிரஜையாகிய நீங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதே தினமும் கொரோனா வைரசோடு போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சுகாதாரத்துறை ஊழியர்களதும் பணிவான வேண்டுகோளாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.