பலஸ்தீன பிரச்சினையை தென்னிலங்கையில் தெளிவுபடுத்தியவர் சமித தேரர்

0 918

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

‘அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சிறப்பான சமய மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் பத்தேகம சமித தேரர். மேலைத்தேய பலம் வாய்ந்த நாடுகளின்  தலையீட்டின் காரணமாக பலஸ்தீன மக்கள் தங்களது நாட்டை பறிகொடுப்பதற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து அவர் மிகவும் கவலை கொண்டார். அவருக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்’ என பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டு இயக்கம் (Sri Lanka Committee for Solidarity with Palestine) பத்தேகம சமித தேரரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ அவர் தனது போதனைகள்  மூலமும் சமூகத்தில் நிலவும் அநீதி மற்றும் அநியாயங்களுக்கு எதிராகவும் மக்களுடன் கைகோர்த்து தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

தேசிய அரசியலுக்கும் அப்பால் சென்று சர்வதேச அரசியலில் அவர் காட்டிய அக்கறை மற்றும் அர்ப்பணிப்பினை நாம் மதிக்கிறோம். பாராட்டுகின்றோம். மேலைத்தேய பலம் வாய்ந்த நாடுகளின் தலையீட்டின் காரணமாக பலஸ்தீன மக்கள் தங்களது நாட்டை பறிகொடுப்பதற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து அவர் மிகவும் கவலை கொண்டார்.

பலஸ்தீன மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்காக பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டு இயக்கத்தின்  செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இலங்கை மக்களுக்கு குறிப்பாக தென்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அவர் செய்த சேவையை நாம் பெரிதும் மதிக்கிறோம்.

பிரிவினைவாதம், இனவாதம் மற்றும் மதவாதத்தினை வெறுத்து ஒதுக்கிய அவர்  தேசிய, சமய ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவருக்காக நாம் பிரார்த்திப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.