புனரமைக்கப்பட்டு மீள திறக்கப்படவுள்ள தாக்குதலுக்குள்ளான திகன பள்ளிவாசல்

0 391

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2018 ஆம் ஆண்டு கண்டி திகன பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்­க­ளின்­போது முழு­மை­யாக சேத­மாக்­கப்­பட்ட கென்­கல்ல பள்­ளே­கலை பஸார் மஸ்­ஜிதுல் லாபீர் ஜும்ஆ பள்­ளி­வாசல் 4.25 கோடி ரூபாய் செலவில் புன­ர­மைக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் தற்­போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அசா­தா­ரண நிலைமை முடி­வுக்கு வந்து சீரா­னதும் புன­ர­மைக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வாசல் திறந்­து­வைக்­கப்­ப­டு­மென பள்­ளி­வாசல் பரி­பா­லன சபையின் தலைவர் ஏ.எப்.எம்.ரிஸ்வி ‘விடி­வெள்­ளிக்குத்’ தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் ­தொ­டர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், வன்­செயல் கார­ண­மாக முழு­மை­யாக சேத­மாக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சலின் இழப்­பீ­டு­களை அர­சாங்கம் மிகவும் குறை­வா­கவே மதிப்­பீடு செய்­தது. பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்டஈடாக 6½ இலட்சம் ரூபாவை மதிப்­பீடு செய்­த­துடன் அத்­தொ­கையில் இது­வரை ஒரு இலட்சம் ரூபாவே வழங்­கப்­பட்­டுள்­ளது. தீக்­கி­ரை­யான பள்­ளி­வா­சலின் தரை­வி­ரிப்பின் (காபட்) பெறு­மதி மாத்­தி­ரமே 10 இலட்சம் ரூபாய்­க­ளாகும்.

பள்­ளி­வாசல் புனர் நிர்­மா­ணத்­திற்கு 8½ கோடி ரூபாய் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டது. தற்­போது 4.25 கோடி ரூபாய் செலவில் முதற்­கட்ட நிர்­மா­ணப்­ப­ணிகள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. மேலும் இரண்­டு­ மா­டிகள் இரண்டாம் கட்­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது. இரண்டாம் கட்ட நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு 4.24 கோடி ரூபாய் தேவைப்­ப­டு­கி­றது.

பள்­ளி­வாசல் புனர்­நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­காக தும்­பற திகன உதவி நிதியம் (Dumbara Digana Relief Fund) என்னும் அமைப்­பினால் 2½ கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. இந்த நிதி­யத்தின் மூலமே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட சேத­மாக்­கப்­பட்ட 90 வீடு­களும் புன­ர­மைக்­கப்­பட்­டது. பள்­ளி­வாசல் நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு மேலும் பலர் உத­விகள் செய்­தார்கள்.

முஸ்லிம் அர­சியல்வாதிகள் எவரும் உத­விகள் செய்­ய­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் நிர்மாணப் பணிகளுக்காக பொறி­யி­ய­லாளர் குழு­வொன்­றினை அனுப்பி வைத்தார். பள்­ளி­வா­சலில் இரண்டாம் கட்ட நிர்­மாணப் பணி­களைப் பூர்த்தி செய்­வதற்கு சமூகம் உதவி நல்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.