திணைக்களத்தை குறை கூறாதீர்கள்

பணிப்பாளர் அஷ்ரப் வேண்டுகோள்

0 494

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழுகை, தராவீஹ் தொழுகை மற்றும் ரமழான் மாத அமல்கள் நிறுத்­தப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தை குறை கூறா­தீர்கள். விமர்­சிக்­கா­தீர்கள், சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­த­னவின் சுற்று நிரு­பத்­தையே திணைக்­களம் அமு­லுக்கு கொண்­டு­வந்­துள்­ளது. நாட்­டி­னதும் சமூ­கத்­தி­னதும் பாது­காப்பு கருதி கொவிட் வைரஸ் தொற்­றி­லி­ருந்து தவிர்ந்து கொள்­வ­தற்கு நாம் ஒத்­து­ழைக்க வேண்டும்.

ஆகக் கூடிய தொகை­யாக 25 பேரே பள்­ளி­வாசல் ஐவேளை தொழு­கை­களில் கலந்து கொள்ள முடியும் என்­பது பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மல்ல ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கும் இந்த எண்­ணிக்­கை­யா­னோரே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். எனவே கட்­டுப்­பா­டுகள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு மாத்­திரம் அல்ல என்­பதில் நாம் தெளிவு பெற­வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; தனி­மைப்­ப­டுத்தும் சட்­டத்தின் கீழ் கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்­பான சுற்­று­நி­ரு­பங்கள் வெளி­யி­டு­வ­தற்கு சுகா­தார அமைச்­சுக்கே அதி­கா­ர­முள்­ளது. எனக்கு அது தொடர்பில் சுற்று நிருபம் வெளி­யிட முடி­யாது. அவ்­வா­றான சுற்று நிரு­பங்­களை அமுல்­ப­டுத்­து­வதே எனது கடமை.

சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கென்று பிரத்­தி­யே­க­மாக சுற்று நிரு­பங்கள் வெளி­யி­டு­வ­தில்லை. சுகா­தார அமைச்சின் சுற்று நிரு­பங்கள் அனைத்து மதத்­த­லங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள். திணைக்­களம் பள்­ளி­வா­சல்­களில் ரமழான் கஞ்­சியை நிறுத்­தி­விட்­ட­தாக சிலர்­குறை கூறு­கி­றார்கள். விமர்­சிக்­கி­றார்கள். சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாய­கத்தின் சுற்று நிருபம் கஞ்சி கொடுக்க வேண்டாம் எனக்­கூ­ற­வில்லை. பள்­ளி­வா­ச­லுக்குள்ளே கஞ்சி விநி­யோ­கிப்­ப­தற்கே தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் வளா­கத்தில் விநி­யோ­கிக்­கலாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுற்று நிரு­பத்தை தவ­றாக விளங்­கிக்­கொண்­டுள்ள சுகா­தார அதி­கா­ரிகள் சிலரே பள்­ளி­வாசல் வளா­கத்தில் விநி­யோ­கிக்­கப்­படும் கஞ்சிக்கு தடை­வி­திக்­கி­றார்கள்.

பள்ளி வாசல்­களை நாம் மூடச் சொல்­ல­வில்லை. பள்­ளி­வா­சல்­களில் கூட்­ட­மாக கூடா­தீர்கள். சுகா­தார வழி­காட்­டல்­களை தவ­றாது பின்­பற்­றுங்கள் என்றே கூறு­கிறோம். எமது சமூகத்தில் ஒருசிலரே. அரசாங்கத்தையும், திணைக்களத்தையும் இவ்விவகாரத்தில் விமர்சிக்கிறார்கள், பெரும்பாலானோர் ஒத்துழைக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் உணர்ச்சி மேலீட்டினாலே இவ்வாறு செயற்படுகிறார்கள். அவர்கள் மீது நாம் கோபப்படவில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.