கொவிட் மர­ணங்­கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டோர் தொகை 100 ஐ தாண்டியது

ஒரே நாளில் 8 ஜனாஸாக்கள் அடக்கம்

0 358

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்ய அனு­ம­தி­ய­ளிப்­ப­ட்­டதைத் தொடர்ந்து, அங்கு இது­வரை நூற்­றுக்கும் மேற்­பட்ட உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபைக்­குட்­பட்ட மஜ்மா நகர் பகு­தியில் தெரிவு செய்­யப்­பட்ட காணியில் கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை அடக்கம் செய்யும் பணிகள் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. அந்­த­வ­கையில், புதன்­கி­ழமை 5 ஆம் திகதி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட 8 ஜனா­ஸாக்­க­ளுடன் 2 மாதங்­க­ளுக்குள் இது­வரை 101 கொரோனா தொற்­றா­ளர்­களின் உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதில், 98 முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களும் 2 கிறிஸ்­த­வர்­களின் சட­லமும் 1 பெளத்­தரின் சடலம் உட்­பட 101 நபர்­களின் உடல்கள் அங்கு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.