தடையை எதிர்த்து நீதிமன்றை நாடும் முஸ்லிம் அமைப்புக்கள்

திங்களன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல்செய்ய ஏற்பாடு

0 473

(எம்.எப்.எம்.பஸீர்)
பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்க தீர்­மா­னித்­துள்­ளன. அதன்­படி, அண்­மையில் தடை செய்­யப்­பட்ட 11 அமைப்­புக்­களில் உள்­ள­டங்கும் ஐந்து அமைப்­புக்கள் எதிர்­வரும் வாரம் வரை உயர் நீதி­மன்றில் தனித் தனி­யாக அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்ய முடி­வெ­டுத்­துள்­ளன.

அதன்­படி எதிர்­வரும் மூன்றாம் திகதி திங்­க­ளன்று சி.டி.ஜே எனும் சிலோன் தெளஹீத் ஜமா அத் அமைப்பு முதல் மனுவை தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.) ஆகிய அமைப்­புக்­களும், ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) அமைப்பும் தமது தடையை சவா­லுக்கு உட்­ப­டுத்தி வழக்குத் தாக்கல் செய்ய தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாது­காப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக கடந்த 13 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய பின்­வரும் அமைப்­புக்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளன.:
1. ஐக்­கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யூ.டி.ஜே.)
2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.டி.ஜே.)
3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.)
4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.)
5. ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) மறு­பெயர் ஜம்­மாஅத் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹ­ம­தியா ஒழுங்­க­மைப்பு மறு­பெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா மறு­பெயர் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா கழகம் மறு­பெயர் ஜமாஅத் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா
6. தாருல் அதர் மறு­பெயர் ஜாமிஉல் அதர் பள்­ளி­வாசல் மறு­பெயர் தாருல் அதர் குர் ஆன் மத்­ரசா மறு­பெயர் தாருல் அதர்­அத்­த­பா­விய்யா
7. ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்.) மறு­பெயர் ஜம்­இய்யா
8. ஈராக் மற்றும் சிரியா இஸ்­லா­மிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்.) மறு­பெயர் அல் – தௌலா அல் – இஸ்­லா­மியா
9. அல்­கைதா அமைப்பு
10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறு­பெயர் சேவ் த பேர்ள் சங்கம்
11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

இலங்­கையில் அல்­லது இலங்­கைக்கு வெளியில் குறித்த அமைப்­பு­களில்
(அ) உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ராக அல்­லது அங்­கத்­த­வ­ரொ­ரு­வ­ராக இருத்­த­லா­காது,
(ஆ) அதற்குத் தலை­மைத்­துவம் அளித்­த­லா­காது,
(இ) சீரு­டையை, உடையை, சின்­னத்தை, தனிக்­கு­றியை அல்­லது கொடியை அணி­தலோ, வெளிக்­காட்­டு­தலோ, ஏந்­து­த­லோ­அல்­லது உடை­மையில் வைத்­தி­ருத்­தலோ ஆகாது,
(ஈ) கூட்­ட­மொன்றை அழைத்­தலோ, கூட்­டு­தலோ, நடாத்­து­தலோ அல்­லது அதில் பங்­கு­பற்­று­தலோ ஆகாது,
(உ) உறுப்­பாண்­மையைப் பெறு­தலோ அல்­லது அதைச் சேரு­தலோ ஆகாது,
(ஊ) ஓர் உறுப்­பி­ன­ருக்கு, அங்­கத்­த­வ­ருக்கு அல்­லது வேறெ­வ­ரேனும் இணை­யா­ள­ருக்குப் புக­லி­ட­ம­ளித்­தலோ, அவரை மறைத்­து­வைத்­தலோ அல்­லது அவ­ருக்கு உத­வு­தலோ ஆகாது,
(எ) மேம்­பாட்­டுக்கு உத­வு­தலோ, அதனை ஊக்­கு­வித்­தலோ, அதற்கு ஆத­ர­வ­ளித்­தலோ, மதி­யு­ரை­ய­ளித்­தலோ, உத­வு­தலோ அல்­லது அதன் சார்பில் செய­லாற்­று­தலோ ஆகாது,
(ஏ) ஏதேனும் செயற்­பாட்டை அல்­லது நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­த­லோ­அல்­லது அதில் பங்­கு­பற்­று­தலோ ஆகாது,
(ஐ) பணத்தை அல்­லது பொருட்­களை நன்­கொ­டை­ய­ளித்­தலோ அல்­லது உத­வு­தொ­கை­ய­ளித்­தலோ ஆகாது,
(ஒ) அதற்­காக அல்­லது அதன் பொருட்­களைப் பெறு­தலோ, களஞ்­சி­யப்­ப­டுத்­தலோ, இடம்­பெ­யர்த்­தலோ, உடை­மையில் வைத்­தி­ருத்­தலோ அல்­லது விநி­யோ­கித்­தலோ ஆகாது,
(ஓ) நோக்­கத்தை ஊக்­கு­வித்­தலோ அல்­லது பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தலோ ஆகாது,
(ஒள) அத­னோடு ஏதேனும் கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­த­லா­காது, அல்­லது
(க) அதன் சார்பில் தக­வலைப் பரப்­பு­வித்­த­லா­காது,
என தடைச் செய்யும் வர்த்­த­மா­னியில் கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­மைப்­புக்­களை தடைச் செய்யும் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டதன் பின்னர், அவ்­வ­மைப்­புக்­களைச் சார்ந்­த­வர்கள், பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரும் நிலையில், அமைப்­புக்­களின் வங்கிக் கணக்­கு­களும் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்கள், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே, தடை பட்டியலில் தாம் எவ்வித காரணமும் இன்றி இணைக்கப்பட்டுள்ளதாக கூறி சில முஸ்லிம் அமைப்புக்கள் நீதிமன்றை நாட முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.