தடை செய்யப்பட்ட அமைப்புகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

சொத்துகள் பற்றிய விபரங்களை ரிஐடி திரட்டுகிறது

0 515
  • தடையை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனு
  • நிலைமைகள் பற்றி பிரதமரைச் சந்தித்து முஸ்லிம் எம்.பி.க்கள் விளக்கமளிப்பு

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடை செய்­யப்­பட்­டுள்ள அமைப்­புகள் தொடர்­பான விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்து வரும் அதே­வேளை குறித்த அமைப்­பு­களின் வங்கிக் கணக்­குகள் முடக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றின் சொத்­து­வி­ப­ரங்கள் பற்­றிய விப­ரங்கள் திரட்­டப்­பட்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இத­னி­டையே இத் தடைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தனித்­த­னி­யாக தாக்கல் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சில அமைப்­புகள் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதலாவது மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக கடந்த 13 ஆம் திகதி அதி­ வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­தது. இந் நிலையில் இவ்­வாறு தடை செய்­யப்­பட்ட இயக்­கங்­களின் நிர்­வா­கிகள், உறுப்­பி­னர்கள், அந்த அமைப்­பு­க­ளுக்கு உள்ள அசையும் மற்றும் அசையா சொத்­துக்கள் போன்ற விப­ரங்­களைப் பெறும் பொருட்டு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­களின் பிர­தா­னி­களை கொழும்­புக்கு அழைத்து விசா­ர­ணை­க­ளுக்­குட்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை மேற்­படி அமைப்­பு­க­ளுக்குச் சொந்­த­மான நூற்றுக் கணக்­கான பள்­ளி­வா­சல்கள் நாட­ளா­விய ரீதியில் மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை அர­சாங்­கத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் வெளி­யான தக­வல்­களில் உண்­மை­யில்லை என்றும் அறிய முடி­கி­றது.

தடை செய்­யப்­பட்ட ஒரு இயக்­கத்­திற்குச் சொந்­த­மான சில பள்­ளி­வா­சல்­களின் செயற்­பா­டுகள் அவ்­வ­மைப்­பினால் கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.

இதே­வேளை தடை செய்­யப்­பட்ட அமைப்­பு­களைச் சேர்ந்­த­வர்கள் எவரும் பள்­ளி­வா­சல்­களில் நிர்­வா­கி­க­க­ளாக பதவி வகிப்பின் அவர்­களை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமாச் செய்­யு­மாறு வக்பு சபை வேண்­டு­கோள்­வி­டுத்­தி­ருந்த நிலையில், சிலர் அவ்­வாறு இரா­ஜி­னாமாக் கடி­தங்­களை கைய­ளித்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பாரா­ளு­மன்­றத்தில் பிரஸ்­தாபம்
இதே­வேளை முஸ்லிம் அமைப்­புகள் தடை செய்­யப்­பட்ட விவ­காரம் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம் மற்றும் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் சபையில் பிரஸ்­தா­பித்­தனர்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சபையில் உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தடை செய்­யப்­பட்ட அமைப்­புகள் இஸ்­லா­மிய மார்க்க கொள்­கை­களை பின்­பற்­று­கின்ற அமைப்­பு­க­ளாக செயற்­பட்­டார்­களே தவிர பயங்­க­ர­வா­தத்தை ஊக்­கு­விக்­கின்ற அமைப்­பு­க­ளாக ஒரு­போதும் செயற்­ப­ட­வில்லை எனக் குறிப்­பிட்டார். இவற்றில் பெரும்­பா­லா­னவை பொதுச் சேவை­களில் ஈடு­படும் அமைப்­புகள் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

அதே­போன்று நேற்று முன்­தினம் சபையில் உரை­யாற்­றிய மு.கா. தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பின்னர் வெறு­மனே தவ்ஹீத் என்ற பெயரில் இயங்­கிய அனைத்து அமைப்­புக்­க­ளுமே தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இதனை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் பிர­த­மரை சந்­தித்து விளக்­கி­யி­ருக்­கின்­றார்கள். அவ­ருக்கும் இதில் தெளிவு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­கி­றது.

தேவை­யில்­லாத விதத்தில் தடை செய்­யப்­பட்­டுள்ள ஜமாஅத் அன்­சாரி சுன்­னத்துல் முஹம்­ம­தியா, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஐக்­கிய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்­புக்கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையை இங்கு சமர்ப்­பிக்­கின்றேன். இது பற்றி உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும். எங்­கேயோ உள்­ள­வர்­களின் கதை­களைக் கேட்டு வேண்­டு­மென்றே அதற்­கான அத்­தாட்­சிகள் எவை­யு­மின்றி, இவ்­வாறு அவை தடை செய்­யப்­பட்­டுள்­ளன’’ என்றார்.

பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் விளக்­க­ம­ளிப்பு
இதே­வேளை 20 ஆம் திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பிர­தமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்த விவகாரம் ஆராயப்பட்டதாக அறிய முடிகிறது. இது குறித்து சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் எம்.பி. ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது சந்திப்பின் விபரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட விரும்பவில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.