4/21 அறிக்கை மீதான விவாதம்: முஸ்லிம் எம்.பி.க்கள் அக்கறை காட்டவில்லை

0 1,405

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக விவாதம் இடம்­பெற்று வரும் நிலையில் இவ்­வி­வா­தத்தில் பங்­கேற்று உரை­யாற்­றவோ, முஸ்லிம் சமூகம் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கோ முஸ்லிம் எம்.பி.க்களில் கணி­ச­மானோர் அக்­கறை காட்­ட­வில்லை என கவலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் 10 ஆம் திக­தியும் நேற்­றைய தினமும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான விவாதம் இடம்­பெற்­றது. இன்­றைய தினம் மூன்­றா­வது நாளா­கவும் இந்த விவாதம் தொட­ர­வுள்­ளது. எனினும் கடந்த இரு நாட்கள் நடைபெற்ற விவா­தங்­க­ளிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அதா­வுல்லா மற்றும் மரிக்கார் ஆகியோர் மாத்­தி­ரமே உரை­யாற்­றி­யுள்­ளனர். அது மாத்­தி­ர­மன்றி இவ்­வி­வாதம் இடம்­பெற்ற வேளையில் முஸ்லிம் எம்.பி.க்களில் பெரும்­பான்­மை­யானோர் சபையில் கூட இருக்­க­வில்லை என எமது பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ளர்கள் தெரி­வித்தனர்.

இதே­வேளை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­திகள் இம்­மாத ஆரம்­பத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. அவை சபையில் உறுப்­பி­னர்­களின் மேசை­களின் மீது வைக்­கப்­பட்­டி­ருந்­தன. துர­திஷ்­ட­வ­ச­மாக அரை­வா­சிக்கும் மேற்­பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் குறித்த அறிக்­கையின் பிர­தி­களைக் கூட திறந்து பார்க்­க­வில்லை என்றும் நீண்ட நாட்­க­ளாக குறித்த அறிக்­கைகள் மேசை­க­ளி­லேயே இருந்­த­தா­கவும் பிர­முகர் ஒருவர் கவ­லை­யுடன் குறிப்­பிட்டார்.

இன்­றைய தினம் மூன்­றா­வது நாளாக விவாதம் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாவது ஆணைக்குழு அறிக்கையை முன்வைத்து சமூகத்தின் சார்பில் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.