ஹஜ் யாத்திரை 2019: பதிவு செய்த முதல் 2000 பேரும் பதிவுக் கட்டணம் செலுத்துக
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளில் முதல் 2000 பேரின் பயணத்தை மீள கையளிக்கப்படக்கூடிய 25ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணத்தைச் செலுத்தி உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடிதங்களை அனுப்பிவைக்கவுள்ளது. ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இதுவரை 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 2800 பேர் இவ்வருடம் ஹஜ் கடமையை பூர்த்தி செய்துள்ளார்கள். எஞ்சிய விண்ணப்பங்களில் முதல் 2000 பேருக்கே தங்களது பயணத்தை உறுதிசெய்யுமாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை இவ்வருடம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்தவர்களில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள 760 விண்ணப்பதாரிகள் ஹஜ் கடமைக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தற்போது அமைச்சரொருவர் இல்லாத காரணத்தினால் அரச ஹஜ் குழு இயங்காது ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமே ஹஜ் ஏற்பாடுகளுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
-Vidivelli