புர்கா தடை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதுவிடயத்தில் அவசரப்படத் தேவையில் எனத் தெரிவித்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவையில் உள்ள சகலரினதும் கருத்துக்களைப் பெற்று நாட்டுக்கு உகந்த தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், சிலருக்கு சட்டம் தொடர்பான சரியான தெளிவில்லை. தான் அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டதாகவே அவர் (சரத் வீரசேகர) கூறினார். அமைச்சரவையில் காத்திருப்பு பட்டியல் ஒன்றுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையான அமைச்சரவைப் பத்திரங்களே ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். புர்கா விடயத்திற்கு அவசரப்படத்தேவையில்லை. அது வந்ததும் அமைச்சரவையில் உள்ள சகலரதும் அபிப்பிராயங்களைப் பெற்று நாட்டுக்கு உகந்த தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை புர்கா தடை தொடர்பில் தான் நீதியமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli