முஸ்லிம் திணைக்களத்தின் 9 மாடி கட்டடம் புத்தசாசன அமைச்சுக்கு

அமைச்சரவையும் அங்கீகாரமளிப்பு

0 408

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரும் 9 மாடிக்­கட்­டி­டத்­துக்கு புத்­த­சா­சன சமய விவ­கா­ரங்கள் மற்றும் கலா­சார அமைச்சும் அதன் கீழுள்ள திணைக்­க­ளங்கள் மற்றும் நிறு­வ­னங்­களும் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.இவ்­வாரம் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது.

தற்­போது புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கா­ரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்­க­ளங்கள், நிறு­வ­னங்கள் என்­பன பல இடங்­களில் இயங்கி வரு­கின்­றன. அதனால் அமைச்சு மற்றும் குறிப்­பிட்ட திணைக்­க­ளங்கள், நிறு­வ­னங்­களை ஒரு கட்­டி­டத்தில் நிர்­மா­ணிப்­ப­தற்­கான தேவை எழுந்­துள்­ளது. அதற்­காக கொழும்பு 10, டீ.ஆர். விஜ­ய­வர்­தன மாவத்­தையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்­காக தற்­போது நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் 9 மாடி­களைக் கொண்ட கட்­டிடம் பொருத்­த­மா­ன­தென அடை­யாளங் காணப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய குறித்த கட்­டிடம் மற்றும் குறித்த காணியை புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கா­ரங்கள் அமைச்­சுக்குப் பெற்றுக் கொள்­வ­தற்கும் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கா­ரங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறு­வ­னங்­க­ளையும் குறித்த கட்­டி­டத்தில் தாபிப்­ப­தற்கும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தைச் சமர்ப்­பித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 2017 ஆம் ஆண்டு தற்­போது இருக்கும் புதிய கட்­டி­டத்­துக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டது. 9 மாடி­க­ளைக்­கொண்ட இக்­கட்­டி­டத்தின் மூன்று மாடி­களை மாத்­தி­ரமே தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களம் பயன்படுத்தி வருகிறது. அத்தோடு ஏனைய 3 மாடிகளில் கேட்போர் கூடம் அமைந்துள்ளது. எஞ்சிய மூன்று மாடிகளின் நிர்மாணப் பணிகளே தற்போது நடைபெற்று வருகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.