பொத்துவில், அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவர்களையும் அவர்கள் சார் ஸ்தலங்களையும் இலக்கு வைத்து ஒருங்கமைக்கப்படாத தாக்குதல்கள் நடாத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஈரானியர் ஒருவர் என தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை விசாரணையின் ஆரம்பத்திலேயே சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு கைது செய்துவிட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்ததாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன. குறித்த தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி வழங்குவதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தார்.
ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ்தான், நாட்டில் முஸ்லிம்களுக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எனவே, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து சிறுபான்மை மக்கள் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கான சூழ்ச்சி மிகவும் உக்கிரமடைந்துள்ளது. இதனடிப்படையில் திட்டமிட்டு முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறடிக்க முயற்சிக்கப்படுவதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் அக்குறணை பிரதேசபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட அலவத்துகொட பொலிஸ் பிரிவின் கண்டி மாத்தளை பிரதான வீதியில் இலக்கம் 178/3 எனும் இலக்கத்தில் அமைந்துள்ள, பெயார்லைன் கட்டிடம் என பரவலாக அறியப்படும் கட்டிடத்தை இடிக்க, கண்டி மேலதிக நீதிவான் வழங்கிய இடிப்பு கட்டளையை தற்காலிகமாக செயற்படுத்தாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவும், குரோதத்தை பரப்பவும் திட்டமிட்டு சதி செய்து போலியான கதை ஒன்றினை கட்டி, தன்னை கைது செய்து இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சார்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.