Verified Web

NEWS STORIES

2015-01-14 20:06:09 Administrator

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு அல் கைதா பொறுப்பேற்பு

கடந்த வாரம் பிரான்ஸில் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல் - காய்தா  இயக்கத்தின் ஏமன் நாட்டுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

2015-01-14 19:54:00 Administrator

ஊவா ஐ.தே.க. வசம் - முதலமைச்சரானார் ஹரீன்

ஊவா மாகாண சபையின் பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ளது. அதன் படி ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஐக்கிய தேசிய கட்சியின் ஹரீன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

2015-01-14 19:39:14 MFM.Fazeer

தேர்தல் வன்முறைகளுடன் கோத்தாபயவுக்கும் தொடர்பு?

ஜனாதிபதி தேர்தல் காலத்தின் இடம்பெற்ற பல வன்முறைகளுடன் முன்னாள்  பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் செயற்பட்ட ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் தரத்திலான அதிகாரி ஒருவருக்கும் மேலும் மூவருக்கும் தொடர்புள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. 

2015-01-13 21:38:34 Administrator

உலமாக்களுடன் பாப்பரசர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாப்பாரசர் பிரான்சிஸ் இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வ மத தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்றிருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அளவளாவினார்.

2015-01-13 16:12:09 MBM.Fairooz

தேர்தல் முடிவை மாற்ற முயற்சிக்கவில்லை: மஹிந்த

இராணுவத்தினரின் உதவியோடு தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு இறுதிக் கட்டத்தில் நான் முயற்சிகளை மேற்கொண்டதாக புதிய அரசாங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

2015-01-13 11:17:54 R.Yasikaran

பஷில் நாமல் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது : ஜே.வி.பி

சட்டத்தினையும் நீதித்துறையினையும் ஏமாற்றி சர்வாதிகாரத்தின் மூலம் சொத்துக்குவித்த, ஊழல் மோசடிகளை செய்த பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சிலருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

2015-01-12 23:46:02 MM.Minhaj

200 பேரின் பைல்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரின் பைல்களை இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுடம் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்க கையளித்துள்ளார்.

2015-01-12 20:44:10 SNM.Suhail

முஸ்லிம் விவகார அமைச்சு ஹலீமுக்கு- நாளை பதவியேற்பார்

அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் விவகார அமைச்சராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.ஏ.ஹலீம் நியமிக்கப்படவுள்ளார்.