Verified Web

NEWS STORIES

2015-01-06 15:54:59 MM.Minhaj

வாக்கு மோசடி என்பது அர்த்தமற்ற வாதம் : பிரதி ஆணையாளர் முஹம்மத்

வாக்கு மோசடி என்பது அர்த்தமற்ற வாதமாகும். நாட்டின் தேர்தல்கள்  மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இல்லையேல் சிறந்த தேர்தல் முடிவினை எதிர்பார்க்க இயலாது என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் குறிப்பிடுகிறார்.

2015-01-05 22:37:31 Razeen Rasmin

அராஜக அரசியலுக்கு முற்றுப் புள்ளி : ஹக்கீம்

இந்த அரசாங்கத்தின் அராஜக அரசியல் கலாசாரத்திற்கு துணை போனவர்கள் இன்று  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து இருப்பதால் அந்த அராஜகம் இந்த புதிய ஆட்சியிலும் தொடருமோ என்கின்ற அச்சம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உள்ளது.

2015-01-05 16:39:25 MBM.Fairooz

முஸ்லிம்கள் அனைவரையும் கண்டிப்பாக வாக்களிக்குமாறு கோரிக்கை

வாக்குரிமை பெற்ற அனைவரும் தமது உரிமையை முறையோடு பயன்படுத்திவிட்டு தொடர்ந்தும் அமைதிக்காகவும் நாட்டில் சமாதானம் நிலவவும் சகல சமூகங்களோடும் ஐக்கியமாக வாழவும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

2015-01-05 09:43:39 SNM.Suhail

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவு

நாட்டின் ஏழா­வது ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பிர­சாரப் பணிகள் யாவும் இன்று திங்­கட்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளன. அதன்­படி எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை 8 ஆம் திகதி ஏழா­வது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. 

2015-01-04 23:06:09 SNM.Suhail

ஜனாதிபதியின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும்: அதாவுல்லாஹ்

பிற இன சோதரர்களுடன் கைகோர்த்து செயல்பட நேர்மையான அரசியல் பாதையை மர்ஹும் அஷ்ரப் எங்களுக்கு கற்பித்து விட்டு சென்றுள்ளார். அந்த வகையில் தேசிய காங்கிரஸ் எப்போதும் மக்களுக்கு சிறந்த அரசியல் பாதையை காட்டி வருகின்றது.

2015-01-04 15:54:40 MBM.Fairooz

தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து 'தேர்தல் வன்முறைகளுக்கு எதிரான ஒருமித்த குரல்' எனும் தலைப்பில் நேற்று மாலை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தின.

2015-01-04 14:24:26 SNM.Suhail

ஜனாதிபதிக்கு இப்போது ஹக்கீம் புளிக்கிறார்: இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

இந்த அரசாங்கம் சம்பந்தனையும் ஹக்கீமையும் மக்கள் மத்தியில் சிங்களவர்களின் எதிரியாக காட்டி பிரச்சாரங்களை முன்னெடுக்கிறது. ஹக்கீம் இதுவரை காலமும் அரசாங்கத்துடனேயே இருந்தார். அப்போதெல்லாம் ஜனாதிபதிக்கு ஹக்கீம் மிகவும் நல்லவராகவே தெரிந்தார். 

2015-01-03 12:24:36 MBM.Fairooz

காத்தான்குடியில் சிப்லி பாரூக்கை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள்

நேற்றிரவு கடற்கரை பிரதேசத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் பங்கேற்புடன் சிப்லி பாரூக்கின் தலைமையில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் பிரதான வீதியில் உள்ள அவரது தேர்தல் பிரசார அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.