Verified Web

FEATURE

2015-04-22 15:00:35 Administrator

கொழும்பு முஸ்லிம்களின் எதிர்காலம்

சிங்­கள மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் கல்விப் பிரச்­சினைகள்

"முஸ்லிம்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கும், சிங்கள மக்களின் கருத்துக்களை முஸ்லிம்களிடமும் கொண்டு வருவதிலுள்ள இதன் பெறுமானம் குறைவுபட்ட ஒன்றல்ல. இது இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஆரோக்கியமானதே."

2015-04-22 14:18:06 Administrator

சாய்ந்­த­ம­ருது மக்­களின் தாகத்­துடன் முஸ்லிம் காங்­கிரஸ் விளை­யாடக் கூடாது

சாய்ந்­த­ம­ருது மக்கள்  தமக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்றி வந்த மயோன்  முஸ்­த­பாவை விடுத்து வேறு எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வாக்­க­ளிப்­ப­தற்கு நியாயம் இல்­லாத போதிலும் மு.கா. எனும் போதை கார­ண­மாக பிர­தேச சிந்­த­னையை உத­றித்­தள்ளிவிட்டு தமது மூன்று விருப்பு வாக்­கு­க­ளையும் தமக்கு எந்த சேவை­யையும் செய்­யாத வெளி ஊர்­களைச் சேர்ந்த ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் ஆகி­யோ­ருக்கே வழங்­கி­யி­ருந்­தனர் என்­பது முக்­கிய வர­லா­றாகும்.
 

2015-04-21 13:06:47 Administrator

தேர்தல் முறை மாற்றம்...அவசரம் வேண்டாம்.

சிறிய, சிறுபான்மை கட்சிகள் ஒருமித்து கோரிக்கை
தேர்தல் முறை­மையில் மாற்­றங்­களை கொண்­டு­வரும் விட­யத்தில் அர­சாங்­கமோ ஏனைய கட்­சி­க­ளோ அவ­ச­ரப்­படக் கூடாது எனச் சிறிய, சிறு­பான்மைக் கட்­சிகள் ஒரு­மித்து கோரிக்கை விடுத்­துள்­ளன.  இது தொடர்பில் ஆராய்ந்து முன்­மொ­ழி­வு­களை வழங்­கு­வ­தற்­காக   குழுவொன்றை அமைப்­ப­தற்கும் இக் கட்­சிகள் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளன.

 

2015-04-19 13:42:53 Administrator

முறை­கே­டான மருந்துப் பாவனை உங்கள் உயி­ரையும் பறிக்கலாம்

மருத்துவ  ஆலோசனை :
நோய்கள் உட­ன­டி­யாக குண­ம­டைய வேண்டும் என்­கின்ற எமது மக்­களின் மனோ­நிலை மிகவும்  ஆபத்­தான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இதனால் சாதா­ரண ஒரு நோய்க்கு ஒரு வைத்­தி­ய­ரிடம் ஒரு நாளில் சிகிச்சை பெற்று அடுத்த நாளி­லேயே அல்­லது மருந்­துகள் உடலில் செயற்­பட முன்­னரே மற்­று­மொரு வைத்­தி­யரை நாடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும்

2015-04-19 13:21:56 Administrator

ஹூதிகளின் இராணுவ புவிசார் மூலோபாயமும் சவுதி அணியின் இராஜதந்திரமும்

சவுதி தலை­நகர் ரியாத் இற்கு அண்­மை­யி­லான விமா­னப்­படைத் தளங்­களில் இருந்து சவுதி தலை­மை­யி­லான கூட்­டுப்­ப­டை­களின் போர் விமா­னங்கள் ஹுதி நிலைகள் மீது இரவு பக­லாக தாக்­கு­தலைத் தொடர்ந்த வண்­ண­முள்­ளன. சவு­தி-­- யெமன் எல்லைக் கோட்­டினில் உறு­தி­யாக நிலை­கொண்­டுள்ள சவுதி தரைப்­படைப் பிரி­வு­களின் 'ஆட்­டி­லரி'களும் முழங்கத் தொடங்கி விட்­டன. 

2015-04-19 13:05:07 SNM.Suhail

ஐக்கிய தேசிய கட்சியூடாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுமா?

பொதுத் தேர்­தலில்  முஸ்லிம் கட்­சிகள்  யானை மீது ஏறி சவாரி செய்­­வ­தற்கு இட­ம­ளிக்­கக் கூடாது என்­கிற நிலைப்­பாடு ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளி­டத்தில் காணப்படுகின்றது

2015-04-19 12:14:49 MFM.Fazeer

அதிகரிக்கும் மஹிந்த அலை

மஹிந்த ராஜ­பக் ஷ. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட இலங்­கையின் ஐந்­தா­வது ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தவர்.  தொடர்ச்­சி­யாக இரு தட­வைகள் ஜனாதி­ப­தி­யாக பதவி வகித்­து­ விட்டு மூன்­றா­வது முறை­யா­கவும் ஜனா­தி­பதி தேர்­தலில்  வேட்­பா­ள­ராகி  கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தற்­போ­தைய ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்த்­து­
போட்­டி­யிட்ட நிலையில் தோல்­வியை சந்­தித்­தவர். 

2015-04-17 15:04:48 Administrator

யார் இந்த ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள்?

ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் யெமன் நாட்டின் வடக்கில் அமைந்­துள்ள “ஸாஇதா” மாகா­ணத்தில் தோன்­றிய “ஷிஆ” சிந்­த­னையின் பின்­ன­ணியில் இயங்கும் அர­சியல் இயக்கம். அந்த மாகா­ணத்­தையே தனது கேந்­திர நிலை­ய­மாக அமைத்து செயல்­பட்டு வரு­கி­றது. “ஷிஆ” க்களின் கொள்­கை­க­ளையும், திட்­டங்­க­ளையும் நிறை­வேற்றவே இவ்­வி­யக்கம் ஆயுதம் ஏந்தி போராடுகின்றது.