Verified Web

FEATURE

2015-08-14 15:57:50 Administrator

சிந்தித்து வாக்களிப்போம்...

இந்த நாட்டு மக்­க­ளா­கிய நாம் மிக முக்­கி­ய­மான பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்­றுக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்­கிறோம். எதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இந்தத் தேர்­தலில் வாக்­கா­ளர்­க­ளா­கிய நாம் நமது பொன்­னான வாக்­கு­களை அளிப்­பதன் மூல­மாக நமக்­கு­ரிய பிர­தி­நி­தியை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பத் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். 

2015-08-14 13:02:15 Administrator

தேர்தல் : இஸ்லாத்தின் வழிகாட்டல்கள்

ஆட்சி அதி­காரம் அல்­லாஹ்­வுக்­கு­ரி­யவை என அல்­குர்ஆன் பல இடங்­களில் குறிப்­பி­டு­கின்­றது. அல்லாஹ் விரும்­பு­வோ­ருக்கு விரும்­பு­கின்ற ஆட்சி அதி­கா­ரத்தைக் கொடுக்­கின்றான். அவ்­வாறே அவன் விரும்­பும்­வேளை அவற்­றைப் பறித் தெடுத்துக் கொள்­கின்றான். இதனை நாம் உலகின் நாலா­ப­கு­தி­க­ளிலும் அன்­றாடம் காண்­கின்றோம்.

2015-08-11 17:55:44 Administrator

கண்டி மக்கள் ஏன் ஹக்கீமை ஓரக் கண்கொண்டு பார்க்கின்றனர் ?

"யார் என்­னதான் சொன்­னாலும் மர்ஹூம் அஷ்ரப், கண்டி போன்ற சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற பகு­தி­களில் முஸ்லிம் காங்­கி­ரஸை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது மிகப் ­பெ­ரிய வர­லாற்றுத் தவ­றாகும். அதன் பாதிப்­புக்­களை இன்று சமூகம் நிறை­யவே அனு­ப­விக்­கின்­றது."

2015-08-11 14:42:07 Administrator

அநு­ரா­த­புர மாவட்ட முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம்

​நடை­பெற இருக்­கின்ற பொதுத்­தேர்தல் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கப்­போ­கின்­றது. கடந்த காலங்­களில் பெருந்­தே­சிய வாத சக்­தி­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடாத்­தப்­பட்ட அரா­ஜ­கங்­க­ளுக்கு ஜனவரி 8 ஜனா­தி­பதி தேர்­தலில் பழி தீர்த்துக் கொண்ட முஸ்லிம் சமூ­கத்­திற்கு  நடை­பெற இருக்­கின்ற பாரா­ளு­மன்ற தேர்தல் இன்­னொரு மைல்­கல்­லாக அமையப் போகின்­றது. 

கடந்த காலங்­களில் வட கிழக்கு, கொழும்பு, கண்டி ஆகிய பிர­தே­சங்­களில் இருந்தே பாரா­ளு­மன்ற முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் என்­பது அடை­யப்­பட்டு வந்­துள்­ளது. ஆனால் இம்­முறை வட­மத்­திய, வடமேல், தென் மாகா­ணங்­களில் இருந்தும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தின் தேவைப்­பாடு தோன்­றியிருப்­பதை அவதானிக்க முடி­கின்­றது. 

2015-08-10 12:53:59 Administrator

முஸ்லிம் அர­சியல் களம் சில அவ­தா­னங்கள்

புதி­ய­தொரு பாரா­ளு­மன்­றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்­நாட்டுப் பிர­ஜைகள் நாம். முஸ்லிம் சிறு­பான்­மை­யினர். நாட்­டுக்கு ஆற்ற வேண்­டிய கட­மைகள் எமக்­குள்­ளன. அத்­தோடு நாம் எம்மை பலப்­ப­டுத்திக் கொள்­வது அக் கட­மையை ஆற்ற எம்மைத் தகு­தி­யுள்­ள­வர்­க­ளாக ஆக்கும். 

2015-08-09 15:53:01 Administrator

பிரதமர் பதவி யாருக்கு?

கள ஆய்வின் முடிவுகள் : 
இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்­வரும் 17 ஆம் திகதி நடக்­க­வி­ருக்கும் நிலையில் தேர்தல் பிர­சார கள­நி­ல­வ­ரங்கள் தற்­போது சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளன.

இலங்கை ஆட்­சி­முறை வர­லாற்றில் திடீர் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­திய கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலை அடுத்து நடை­பெ­ற­வி­ருக்கும் இப்­பொதுத் தேர்­த­லா­னது மக்­க­ளி­டையே குறிப்­பாக சிறு­பான்மை இனத்­த­வ­ரி­டையே மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

2015-08-09 13:24:09 Administrator

காத்திருக்கும் பகல் நேரத்து படுகுழி

ஜன­வரி 08 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இரட்டைக் குழந்தை பிறப்­பெ­டுத்த நாள். ஒரு புறத்தில் இது சதி முயற்சி நடந்த தினம் என்று சிலர் சொல்­கி­றார்கள். இன்­னொரு புறத்தில் இது அமைதிப் புரட்சி நடந்த தினம் என்று கொண்­டா­டு­கி­றார்கள். விநோதம் என்­ன­வென்றால் சதி முயற்சி நடத்­தி­ய­வர்­களும் அமைதிப் புரட்சி நடத்­தி­ய­வர்­களும் ஒன்­றாக விருந்து உண்­கி­றார்கள். கொண்­டாட்­டத்தில் பங்கு கொண்ட  மக்களின் பாடுதான் திண்­டாட்­ட­மா­க­வி­ருக்­கி­றது.

2015-08-09 10:50:45 MFM.Fazeer

புளூமெண்டல் துப்பாக்கிச் சூடு

வீடு தேடி   வீதிக்கு வந்த நஸீமா
"எனது உம்மா எங்­க­ளுக்கு வாழ வீடொன்றைக் கோரியே கூட்­டத்­துக்கு போனார். இப்­போது எமக்கு வீடும் இல்லை. உம்­மாவும் இல்லை. எனக்கு தங்­கையும் நாநாவும் உள்­ளனர். எங்­க­ளுக்கு இப்­போது உம்மா இல்லை. எமக்கு உம்மா வேண்டும்...உம்மா 
வேண்டும்..."