Verified Web

FEATURE

2015-08-09 15:53:01 Administrator

பிரதமர் பதவி யாருக்கு?

கள ஆய்வின் முடிவுகள் : 
இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்­வரும் 17 ஆம் திகதி நடக்­க­வி­ருக்கும் நிலையில் தேர்தல் பிர­சார கள­நி­ல­வ­ரங்கள் தற்­போது சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளன.

இலங்கை ஆட்­சி­முறை வர­லாற்றில் திடீர் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­திய கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலை அடுத்து நடை­பெ­ற­வி­ருக்கும் இப்­பொதுத் தேர்­த­லா­னது மக்­க­ளி­டையே குறிப்­பாக சிறு­பான்மை இனத்­த­வ­ரி­டையே மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

2015-08-09 13:24:09 Administrator

காத்திருக்கும் பகல் நேரத்து படுகுழி

ஜன­வரி 08 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இரட்டைக் குழந்தை பிறப்­பெ­டுத்த நாள். ஒரு புறத்தில் இது சதி முயற்சி நடந்த தினம் என்று சிலர் சொல்­கி­றார்கள். இன்­னொரு புறத்தில் இது அமைதிப் புரட்சி நடந்த தினம் என்று கொண்­டா­டு­கி­றார்கள். விநோதம் என்­ன­வென்றால் சதி முயற்சி நடத்­தி­ய­வர்­களும் அமைதிப் புரட்சி நடத்­தி­ய­வர்­களும் ஒன்­றாக விருந்து உண்­கி­றார்கள். கொண்­டாட்­டத்தில் பங்கு கொண்ட  மக்களின் பாடுதான் திண்­டாட்­ட­மா­க­வி­ருக்­கி­றது.

2015-08-09 10:50:45 MFM.Fazeer

புளூமெண்டல் துப்பாக்கிச் சூடு

வீடு தேடி   வீதிக்கு வந்த நஸீமா
"எனது உம்மா எங்­க­ளுக்கு வாழ வீடொன்றைக் கோரியே கூட்­டத்­துக்கு போனார். இப்­போது எமக்கு வீடும் இல்லை. உம்­மாவும் இல்லை. எனக்கு தங்­கையும் நாநாவும் உள்­ளனர். எங்­க­ளுக்கு இப்­போது உம்மா இல்லை. எமக்கு உம்மா வேண்டும்...உம்மா 
வேண்டும்..."

 


 

2015-08-02 16:57:12 MFM.Fazeer

ரக்பி வீரர் தாஜு­தீனின் மரணம் குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

கைகால் உடைக்­கப்­பட்டு, பற்கள் கழற்­றப்­பட்டு, கூரிய ஆயு­தத்தால் குத்தி தட்­டை­யான ஆயு­தத்தால் அடித்து கொன்­ற­தற்­கான சான்­றுகள் அம்­பலம் -

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும் இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்­போது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்த சம்­ப­வமும் வந்­தி­ருக்­கின்­றது.

 

2015-08-02 16:35:21 ARA.Fareel

பள்ளிவாசல் விவகாரங்கள் : தீர்ப்புகளை நோக்கி...

மதங்கள் நேர்­வ­ழி­யையே போதிக்­கின்­றன. தீவி­ர­வா­தத்­தையும், வன்­மு­றை­க­ளையும் எதிர்க்­கின்­றன. சக­வாழ்­வுக்கு களம் அமைக்­கின்­றன. எமது நாட்டைப் பொறுத்­த­மட்டில் பல்­லின மக்கள் வாழும் பல­க­லா­சா­ரங்­களைப் பின்­பற்றும் பரந்து பட்ட பின்­புல மொன்று காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவம் என்று பல­ம­தங்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான மத ஸ்தலங்கள் நாட்டின் மூலை முடுக்­குகள் எல்லாம் இயங்கி வரு­கின்­றன.

2015-08-02 14:54:21 Administrator

முஸ்லிம் அர­சி­யலின் சிதைவும் தோல்­வியும்

2015 பொதுத்­தேர்­தலை முன்­வைத்த ஒரு பார்வை!
எனது இந்தக் குறிப்­புகள்  முஸ்­லிம்­களின் அர­சியல் ,சமூக விடு­த­லைக்­காக அர­சி­யலில் இன்­னமும் இருக்­கிறோம் என சொல்லி வரு­கின்ற எந்த முஸ்லிம்  கட்­சி­களின் மீதான அர­சியல் விமர்­ச­ன­முமல்ல. நான் இங்கு பேச விரும்­பு­வது இலங்­கையில் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சியல் போக்­கு­களும் அது  கொண்டு வந்து நிறுத்தி இருக்­கின்ற அர­சியல் திசை­வழி குறித்தும் மட்­டுமே.

2015-07-31 16:38:45 MFM.Fazeer

ஐ. எஸ். இல் இலங்கையர்

உஷார் நிலையில் பாதுகாப்பு தரப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்­கையில் இருக்­கின்­றதா இல்­லையா?, அந்த அமைப்பின் அங்­கத்­த­வர்கள் இலங்­கைக்குள் ஊடு­ரு­வி­யுள்­ள­னரா?, இங்­குள்­ள­வர்கள் எவ­ருக்­கேனும் அந்த அமைப்­புடன் தொடர்­புகள் உள்­ளதா?, அவர்கள் இலங்­கைக்குள் ஏதேனும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்­ள­னரா? போன்ற கேள்­விகள் இன்று பர­வ­லாக எல்­லோ­ராலும் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

2015-07-30 13:28:35 Administrator

வாக்­கா­ளர்­களின் பொறுப்பு

“ஒற்­றுமை எனுக் கயிற்றைப் பல­மாகப் பற்றிக் கொள்­ளுங்கள் பிரிந்து விடா­தீர்கள்” என்று போதிக்கும் குர்­ஆனின் ஏவல்­களை மறந்தும், “ஒரு சமூ­கத்தின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பது கொலை செய்­வ­தற்கு சம­மா­னது” என்ற நபி­க­ளாரின் போத­னையை மறந்தும்  செயற்­ப­டு­கின்ற முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தனித்தும் இணைந்தும் இத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான காரண மூட்­டை­களை மக்கள் மத்­தியில் அவிழ்த்து விட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.