Verified Web

தலைநகர முஸ்லிம்களின் தலையெழுத்து

2015-06-14 13:18:35 SNM.Suhail

தலை­நகர் வாழ் மக்கள் என்­ற­வுடன் பிராந்­தி­யங்­களில் வாழும் மக்­களின் எண்­ணங்கள் மிகவும் உயர்ந்­த­தா­கவே இருக்கும்.
 
குறிப்­பாக தலை நகரில் எந்­த­வொரு வேலை­யையும் இல­கு­வாக செய்­து­கொள்ள முடியும். மட்­டு­மன்றி அவர்­களின் வாழ்க்கை மிகவும் சிறந்­த­தாக இருக்கும் என்­கிற எண்­ணப்­பாடே மேலோங்­கி­யி­ருக்கும். 

கொழும்பு நகரில் வாழும் அதி­க­மானோர் முஸ்­லிம்­க­ளாவர். ஆனால் அவர்கள் வாழும் நிலைமை தெரி­யா­த­வர்கள் பலர். ஏனெ­னில் இவர்கள் யாராலும் கண்­டு­கொள்­ளப்­ப­டாத சமூ­க­மா­கவே இருக்­கின்­றனர். 

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிர­ரே­ம­தாஸ பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அபி­வி­ருத்­தியின் பாதையில் இட்­டுச்­சென்ற மத்­திய கொழும்­பா­னது இன்று சேரிப்­புற வாழ்க்­கைக்கு மக்­களை பல­வந்­த­மாக தள்­ளி­விட்­டுள்­ளது.

சந்­தி­ரிக்கா அம்­மை­யாரின் காலப்­ப­கு­தியில் இந்த மக்கள் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை. மட்­டு­மன்றி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் மோச­மாக சேரிப்­புற வாழ்க்கை வாழ்ந்த மக்­களை இன்­னு­மொ­ரு­ப­டி பின்­தள்­ளி­ நடு வீதியில் நிறுத்தும் அள­விற்கு கொழும்­பி­லி­ருந்தே அப்­பு­றப்­ப­டுத்தும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

கொழும்பு வாழ் மக்கள் இன்று பெரும்­பாலும் வீடு­க­ளற்ற நிலை­மை­யி­லேயே இருக்­கின்­றனர். குறிப்­பாக 50 வீதத்­திற்கும் மேற்­பட்டோர் வாடகை வீட்­டி­லேயே குடி­யி­ருக்­கின்­றனர்.

இம்­மக்கள் குடி­யி­ருக்கும் வீடும் வீட்­டுச்­சூ­ழலும் ஆரோக்­கி­ய­மான சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு ஏது­வாக இல்லை. இதுவே குற்­றச்­செ­யல்கள் இடம்­பெ­றுவ­தற்கும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தடங்கல் ஏற்­ப­டு­வ­தற்கும் கார­ண­மாக அமை­யலாம். 

முன்­னொரு காலத்தில் இலங்­கையின் முக்­கிய தலை­வர்­களை கொழும்பு நகரம் உரு­வாக்­கி­யது. அப்­போது முஸ்­லிம்கள் கல்­வியில் ஆர்­வம்­காட்­டி­ய­தை­விட வர்த்­த­கத்­தி­லேயே மூழ்­கி­யி­ருந்­தனர் என்­பதை மறுக்க முடி­யாது. அனாலும் அன்று முஸ்­லிம்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்­தனர். ஆனால் இன்­றைய நிலைமை தலை கீழாக மாறி­யி­ருக்­கின்­றது. 

கடந்த சனிக்­கி­ழமை மாளி­கா­வத்தை வடக்கு பகு­தியில் அமைந்­துள்ள ரயில் ஊழி­யர்­களின் வதி­விட பகு­தியில் இடம்­பெற்ற அர­சியல் கூட்­ட­மொன்­றுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்­தது. அங்கு மேல் மாகாண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்தார்.

அங்கு அவர் இன்­றைய கொழும்பு மக்­களின் வாழ்க்கை நிலையை பற்றி விப­ரித்­துக்­கொண்­டி­ருந்தார். 

கொழும்­புக்கு நாளாந்தம் 2 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வந்து செல்­கின்­றனர். வெளிமாவட்­டங்­க­ளி­லி­ருந்து கொழும்­புக்கு வந்து போகும் மக்­க­ளுக்கு உணவுப் பொதி­களை விற்­பவர்களாகவும், சிறு கைத் தொ­ழில்­க­ளாக வீடு­க­ளி­லி­ருந்து இடி­யப்­பமும் பிட்டும் தயா­ரித்து விற்­ப­வர்­க­ளா­கவும், மர­வள்­ளி­க்கி­ழங்கு பொரியல் விற்­ப­வர்­க­ளா­கவும் வீதி­யோ­ரத்தில் கஞ்சி காய்ச்சி விற்­ப­வர்­க­ளா­க­வுமே கொழும்பு வாழ்மக்கள் இருக்கின்றனர்.

இப்­ப­டி­யான ஜீவ­னோ­ப­ாயத்­தையே கொழும்­புவாழ் மக்கள் நம்பி வசிக்­கின்­றனர். முன்னர் பெரும் வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டனர். ஆனால் அவை இப்­போது கைந­ழு­விப்­போய்­விட்­டன. இப்­படி பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ந்த மக்கள் கல்வி மட்­டத்­திலும் பூச்­சிய நிலையில் இருக்­கின்­றனர். கடந்த 10 வரு­டங்­களின் கொழும்பு கல்வி வலய பரீட்சை பெறு­பே­றுகள் 30 வீதத்­தையும் தாண்­டா­த­தா­கவே இருக்­கின்­றன.
கல்­வி­மட்டம் வீழ்ச்­சி­ய­டைய கொழும்பு மக்கள் வாழும் சூழலே கார­ண­மாக இருக்­கின்­றது. 

மத்­திய கொழும்பு அர­சியல் நிலைமை பற்றி இந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. இங்­குள்ள மக்­களின் அர­சியல் உரி­மைகள் விலை­பே­சப்­ப­டு­கின்­றன. அதா­வது அவர்­களின் வறு­மையை பயன்­ப­டுத்தி வாக்­கு­க­ளுக்­காக பணமோ பொருட்­களோ வழங்­கப்­ப­டு­வது உண்­மை­யாகும்.

குறிப்­பாக ரமழான் காலங்­க­ளிலும், தேர்தல் காலங்­க­ளிலும் சில பொதிகள் ஒவ்­வொரு வீட்­டுக்கும் சென்­று­விடும். இதுவே சில அர­சி­யல்­வா­தி­களின் வாக்கு வங்­கி­களை நிரப்­பக்­கூ­டி­ய­தாக இருக்கும். உதா­ர­ண­மாக முன்னாள் அமைச்­சர்­க­ள் பலர் இந்த அர­சி­யலை கொழும்பில் நடத்­தி­யுள்­ளனர்.

இவர்கள் பண பலத்­தின்­மூலம் வாக்­கு­ரி­மையை பெற்­றுக்­கொள்­வதால் கொழும்பில் மக்­களின் வாழ்க்கை முறைக்­கான சிறந்த திட்­டத்தை ஏற்­ப­டுத்­தாது அடுத்த தேர்­த­லுக்கு வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இதே குறுக்கு வழி­க­ளையே பயன்­ப­டுத்­தியுள்ளனர். இது மக்­களை வாங்கும் சமூ­க­மாக பழக்­கப்­ப­டுத்தும் செயலே தவிர மக்­களின் வாழ்க்­கையை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டல்ல என்­பதை மக்கள் இது­வரை புரிந்­து­கொள்­ளா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

கொழும்பு வாழ் மக்­களின் வாழ்க்கை முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த அவர்­களின் வாழ்­வி­டங்கள் தொடர்பில் புதி­ய­தொரு திட்­டத்தை உரு­வாக்க வேண்டும். சேரி­ப்புற வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படல் வேண்டும். 

அண்­மைக்­கா­ல­மாக கொழும்பில் பல வீடுகள் உடைக்­கப்­பட்­டன. கொம்­ப­னித்­தெரு, மியுஸ் வீதி, மலே வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை உள்­ளிட்ட பல பகு­தி­களில் வீடுகள் உடைக்­கப்­பட்டு அந்த காணிகள் இந்­திய, பாகிஸ்தான் கம்­ப­னி­க­ளுக்கு விற்­கப்­பட்­டன. இதனால் வாழ்­வி­டங்­களை இழந்த மக்­களின் நிலைமை இன்னும் மோச­மா­கவே இருக்­கின்­றது. இவர்­களை சரி­யான முறையில் குடி­யமர்த்­து­வ­தற்­கான திட்­டங்­களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷ அரசு மேற்­கொள்­ளவில்லை.  

மியுஸ் வீதி விவ­காரம் குறித்து நேற்று முன்­தினம் நகர அபி­வி­ருத்தி அமைச்­சினால் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. மாகாண சபை உறுப்­பினர் அர்ஷாட் நிஸா­முதீன் இதன்­போது அங்­குள்ள மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அமைச்­சருக்கு விப­ரித்தார். எதிர்­வரும் செப்­டம்பர் மாதத்­திற்குள் இம்­மக்­க­ளுக்­கான வீடு­களை வழங்­கு­மாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணித்­துள்ளார். 

எனினும் குறிப்­பிட்ட காலத்­திற்குள் வீடுகள் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான வீட்­டுத்­திட்­டங்கள் எதுவும் கொழும்பு நக­ருக்குள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் இந்த வாக்­கு­று­தியை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடியும் என்­கிற கேள்­வியும் எழத்தான் செய்­கின்­றது.

மட்­டு­மன்றி நேற்று முன்­தினம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனத்தின் ஏற்­பாட்டில் அவ்­வ­மைப்பின் தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்று இடம்­பெற்­றது. இதன்­போது மாளி­கா­வத்தை பகு­தியில் முஸ்லிம் மக்­களின் வீடுகள் தொடர்­பான பிரச்­சி­னைகள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. 

குறிப்­பாக அப்­பிள்­வத்தை பகு­தியில் வீடு­களை இழந்து நிர்க்­கதி நிலையில் இருக்கும் மக்­க­ளுக்கு மாளி­கா­வத்தை பகு­தி­யி­லேயே வீடுகள் வழங்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது. 

குறித்த மக்­களின் அபி­வி­ருத்­திகள் தொடர்பில் அர­சாங்கம் அக்­க­றை­யின்றி இருப்­ப­தா­கவும் அங்கு குற்­றம்­சாட்­டப்­பட்­டது. 
குறிப்­பாக மத்திய கொழும்­புவாழ் மக்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளாக  இருக்­கின்­றனர். இதற்கு முக்­கிய காரணம் 1993 களுக்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி இப்­ப­கு­தி­க­ளுக்கு வழங்­கிய சேவை­யாகும். அவர் இங்கு பல வீட்­டுத்­திட்­டங்­களை வழங்கி மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை முன்­னேற்ற உந்­து­சக்­தி­யாக இருந்தார்.

தற்­போது மீண்டும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான அர­சொன்று உரு­வா­கி­யுள்­ளது. இது நிரந்­த­ர­மான அர­சாங்­க­மாக இல்­லா­வி­டினும் இக்­கா­லப்­ப­கு­தியில் கொழும்பு மக்­களின் வாழ்க்கை முறை பற்றி சிந்­திக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. இதற்கு முக்­கிய காரணம் மத்­திய கொழும்பை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஐக்­கிய தேசிய கட்சி சார்­பான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்­லா­மை­யாகும். 

அது மட்­டு­மன்றி கொழும்பில் இனப் பரம்­பலை மாற்­றி­ய­மைக்கும் வேலைத்­திட்­ட­மொன்று கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. அதா­வது கொழும்­பி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை அப­க­ரித்து மக்களை வெளியேற்றும் திட்டமே இது எனக் கூறப்பட்டது.  

இந்த திட்டத்திற்கும் புதிய தேர்தல் திருத்தத்திற்கும் தொடர்புகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புதிய தேர்தல் திருத்தத்தின் அடிப்படையில் மத்திய கொழும்பின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக இந்தத் திட்டம் நீண்ட நாட்களாகவே முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் மேலெழ ஆரம்பித்துள்ளன. 

எது எப்படியோ வெறும் அரசியல் விளையாட்டுக்காக அப்பாவி மக்களின் வாழ்க்கை பந்தாடப்படுகின்றது. தலைநகர முஸ்லிம்களின் வாழ்விடங்களின் நிலைமை மிக மோசமானதாக அமைய அரசியல் காரணிகள் முக்கியமானதாகும்.

எனவே இதற்கு தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் அரசியல் தலைமையின் தேவையை மக்கள் உணர வேண்டும். அப்படியான தலைவர் ஒருவரை உருவாக்கி தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.

இதுவே எதிர்கால ஆரோக்கியமான முஸ்லிம் சந்ததியினரை உருவாக்க வழிகோலும். தலை நகர முஸ்லிம்களின் தலையெழுத்தை சிறந்ததாக மாற்றியமைக்க னைவரும் ஒன்றிணைய வேண்டும்.