Verified Web

ரோஹிங்யா முஸ்லிம்களும் நமது கடப்பாடும்

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2015-06-01 17:03:49 Ash Sheikh SHM Faleel

"இதில் எது உண்மை என்­பதை முதலில் கண்­ட­றி­வது முஸ்­லிம்­க­ளது கட­மை­யாகும். எதிரி என்­ப­தற்­காக அவன் பற்­றி பொய்­யு­ரைப்­ப­தற்கு எமது மார்க்கம் இடம் தர­வில்லை என்­பதை முதலில் புரிய வேண்டும்."பர்மா ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளது அடிப்­படை உரி­மைகள் பறிக்­கப்­பட்ட பலர் படு­மோ­ச­மாக கொலை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் பள்­ளி­களும் மற்றும் கட்­ட­டங்­களும் தீக்­கி­ரை­யாக்­கப்­ப­டு­வ­தா­கவும் அண்­மைக்­கால தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

சித்­தி­ர­வ­தைகள் தாங்க முடி­யா­த­தனால் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் பட­கு­களில் தப்­பி­யோ­டு­வ­தா­கவும் அவர்­களை ஏற்க இந்­தோ­னே­ஷியா மலே­சியா ஆகிய நாடுகள் கூட மறுப்­ப­தா­கவும் அந்தத் தக­வல்­களில் மேலும் கூறப்­ப­டு­கி­றது. 

இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளா­கிய எமது கட­மை­யாது?

1. ரோஹிங்யா முஸ்­லிம்கள் தொடர்­பாக அண்­மைய நாட்­களில் வெளி­யி­டப்­படும் வீடி­யோக்­களும் புகைப்­ப­டங்­களும் மற்றும் அவர்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாகக் கூறப்­படும் தக­வல்­களும் இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு முந்­தி­யவை என்று சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் கூறி வரு­கி­றார்கள். அதற்­கான ஆதா­ரங்­களை அவர்கள் புறத்­தி­லி­ருந்து தரு­கி­றார்கள். 

எனவே இதில் எது உண்மை என்­பதை முதலில் கண்­ட­றி­வது முஸ்­லிம்­க­ளது கட­மை­யாகும். எதிரி என்­ப­தற்­காக அவன் பற்­றி பொய்­யு­ரைப்­ப­தற்கு எமது மார்க்கம் இடம் தர­வில்லை என்­பதை முதலில் புரிய வேண்டும். 

அடுத்­த­தாக கிடைக்கும் தக­வல்­களை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தாமல் வெளி­யி­டு­வது 'பாஸிக்' எனப்­படும் பாவி­க­ளது பண்பு என குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ளது. 

2. அவை இப்­போது நடக்­க­வில்லை என்று வைத்துக் கொண்­டாலும் அதா­வது இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் தான் நடந்­தது  என்­றாலும் அந்த வீடி­யோக்­க­ளும் புகைப்­ப­டங்­களும் பௌத்த தீவி­ர­வாத பாஸிஸ்­டு­க­ளது மனதில் இருக்கும் வக்­கி­ரத்­தையும் கொடூ­ரத்­தையும் படம்­பி­டித்துக் காட்­டு­கின்­றன. 

அவை இஸ்­லா­மிய ரீதியில் மட்­டு­மன்றி பொது­வாக மனி­தா­பி­மான ரீதியில் கடு­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கன.

 ஒரு முஸ்லிம் சகோ­தரன் அவன் அவனை (எதி­ரி­யிடம்) ஒப்­ப­டைத்து விட­மாட்டான்; முஸ்­லிம்கள் ஒரே உடம்பைப் போன்­ற­வர்கள். அதில் ஓர் உறுப்­புக்கு துன்பம் வந்தால் உடம்பில் ஏனைய உறுப்­புக்கள் விழித்­தி­ருப்­பதன் மூலமும் காய்ச்­சலை வெளிப்­ப­டுத்­து­வதன் மூலமும் அத்­துன்­பத்தில் பங்கு கொள்ளும் ; முஸ்­லிம்­க­ளது இரத்தம் சம­மா­னது;  உங்­களில் ஒருவர் தனக்கு விரும்­பு­வ­தையே பிற சகோ­த­ர­னுக்கும் விரும்­பாத வரை விசு­வாசம் கொண்­ட­வ­ராகமாட்டார் போன்ற நபி மொழிகள் முஸ்­லிம்­க­ளது சகோ­த­ரத்­து­வத்தை வலி­யு­றுத்­து­கின்­றன.

 உலகின் எந்­த­வொரு மூலையில் ஒரு முஸ்லிம் பாதிக்­கப்­பட்­டாலும்  அது பற்றி கரி­சனை எடுப்­பதும் கவ­லைப்­ப­டு­வதும் அந்தத் துன்­பத்தை நீக்க முயற்­சிப்­பதும் "பர்ழு" ஆகும். இல்­லாத போதும் அது ஈமானின் பல­வீ­னத்தைக் காட்டும்.

 பரிந்து பேசு­வது, ஆட்­சே­பனை தெரி­விப்­பது, பிற­ருக்கு இது பற்றி அறி­வூட்­டு­வது, பொரு­ளா­தார ரீதியில் உத­வு­வது போன்­றன மூலம் எமது இந்த ஈமானை பாது­காத்து சகோ­த­ரத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தலாம். 

ரோஹிங்யா முஸ்­லிம்கள் மட்­டு­மன்றி உலகின் நாலா புறத்­திலும் கசக்கிப் பிழி­யப்­படும் எமது இஸ்­லா­மிய உற­வுகள் அனை­வ­ருக்கும் இந்தக் கட­மையை நாம் செய்­தாக வேண்டும். 

3. இலங்கை வாழ் முஸ்­லிம்கள் இதில் ஈடு­ப­ட முன் கவ­னிக்க வேண்­டிய மிகவும் முக்­கி­ய­மான ஓர் அம்சம் உள்­ளது. 

இலங்­கையில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக சித­றுண்டு வாழு­கின்­றார்கள். 

இந்­நாட்டின் பெரும்­பான்­மை­யினர் அதா­வது 70% ஆன­வர்கள் பௌத்­தர்கள். மியன்­மா­ரிலும் பௌத்­தர்கள் தான் பெரும்­பான்­மை­யினர். 
எனவே மியன்­மாரில் இடம்­பெறும் அடா­வ­டித்­த­னங்­களை கண்­டிக்கும் போது நாம் வாழும் நாட்­டி­லுள்ள எமது நாட்டு பௌத்­தர்­க­ளது மன நிலை­க­ளையும் நாம் கவ­னத்தில் எடுக்க வேண்டும். 

இலங்­கையில் பொது­பல சேனா போன்ற தீவி­ர­வாத அமைப்­பு­களை வெறுக்­கின்ற நாட்டில் சகல இனங்­களும் சமா­தா­னத்­துடன் வாழ வேண்டும் என விரும்­பு­கின்ற பல பௌத்த பிக்­கு­களும் அர­சியல்,கல்வி,நிரு­வாகம்,ஊடகம் போன்ற துறை­களைச் சேர்ந்­த­வர்­களும் இருக்­கி­றார்கள். அதா­வது எல்­லாரும் மோச­ன­மா­வர்கள் அல்லர். 

எமக்கு இந்­நாட்­டி­லுள்ள நல்­லுள்ளம் படைத்த பௌத்­தர்­க­ளது உறவும் ஒத்­தா­சையும் என்­றென்றும் தேவை.

 எனவே நாம் மியன்மார் பௌத்­தர்­களைப் பொது­வாக தாறு­மா­றாக எவ்­வித நிதா­னமும் இன்றி பழிக்­கவோ தூஷிக்­கவோ ஆரம்­பித்தால் அது இங்­குள்ள பௌத்­தர்­க­ளது அடி­ம­னதை பாதிக்­காமல் இருக்கும் எனக் கூற முடி­யாது.

எல்­லோ­ரி­டத்திலும் மத இன உணர்­வுகள் இருக்­கவே செய்­கின்­றன. அவற்றை கவ­ன­மாக நாம் கையாள வேண்டும். உண்­மை­யாகக் கூறினால் பௌத்­தத்­துக்கும் வன்­மு­றைக்கும் சம்­பந்­த­மில்லை என்று எமது அறிவு கூறு­கி­றது.

பௌத்­தத்தின் பெயரை வைத்துக் கொண்டு காவி­யுடை தரித்து வெறி­யாட்டம் போடும் சிலர் அங்கு மட்­டு­மல்ல இங்கும் இருக்­கி­றார்கள்.

எனவே எமது செயற்­பா­டு­களை பௌத்­தத்­துக்கு எதி­ராகத் திருப்­பாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். 

மியன்­மாரில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சமா­தானத் தீர்வு தான் தற்­போது முக்­கியம். அதற்கு இலங்­கை­யி­லுள்ள நல்­லுள்ளம் படைத்த பௌத்த மதத்­த­லை­வர்கள் கல்­வி­மான்­க­ளது ஒத்­து­ழைப்பை பெறு­வ­தற்­கான முயற்­சிகள் தேவை. 

ரோஹிங்யா முஸ்­லிம்கள் எல்­லோரும் கடல் மார்க்­க­மாக தப்­பி­யோடி வரும் போது முஸ்லிம் நாடு­களே ஏற்க மறுக்கும் போது எல்­லோ­ருமே அங்­கி­ருந்து வெளி­யே­றினால் அவர்­களை யார்தான் பொறுப்­பேற்­பார்கள்?

எனவே எமது ஒவ்­வொரு பேச்சும் செயலும் சம­யோ­சி­த­மா­ன­தாக தூர­நோக்குக் கொண்­ட­தா­கவே அமைய வேண்டும். நாம் வாழும் நாட்டில் பல கல­வ­ரங்­களை நாம் பெரும்­பான்­மை­யி­ன­ரி­ட­மி­ருந்து சந்­தித்த அனு­ப­வங்கள் எமக்­குண்டு. 

ஆங்­கி­லத்தில் Reactive, proative என்று இரு வார்த்­தைகள் உண்டு. நாம் வழக்­க­மா­கவே சம்­ப­வங்கள் நடந்து முடிந்த பின்னர் பரி­காரம் தேடு­வ­துண்டு. அதே சம்­ப­வத்தின் சூடு தணிந்து விட்டால் முற்­றாக மறப்­ப­து­முண்டு. ஆனால் அசம்­பா­வி­தங்கள் நடக்­கா­ம­லி­ருக்­கவோ நிரந்­தர தீர்­வு­களைக் காண்­ப­தற்கோ நாம் முயற்­சி­களில் இறங்­கு­வது குறைவு. 

இறு­தி­யாக தற்­போது நடப்­ப­தாகக் கூறப்­படும் சம்­ப­வங்கள் உண்­மை­யா­கவே தற்­போதுதான் நடக்­கின்­றனவா என்பதை ஊர்ஜிதப்படுத்துவோம். 

அது நூறுவீத உண்மை என்றால் உடனடியான நிவாரணப் பணிகளுக்கும் பரிந்து பேசுவதற்கும் சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்தவும் எம்மால் ஆனதைச் செய்வோம். 

அதனை விட ஒரு படி மேலே சென்று இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதிருக்க கூட்டான செயற்பாடுகளில் இறங்குவோம். 

தனிமனித முயற்சிகள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், இயக்கத்தின் முயற்சிகளை விட ஒருங்கிணைந்த கூட்டான முயற்சிகள் அதிக பலன் தரும். 

அல்லாஹ் ரோஹிங்யா முஸ்லிம்களும் ஏனைய சர்வதேச முஸ்லிம்களும் படும் துன்பங்களுக்கும் மனித இனம் பொதுவாக அனுபவிக்கும் துன்பங்களுக்கும் விடிவுகளைத் தருவானாக!