Verified Web

மழை எனும் மகத்தான அருள்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

6 days ago T.M.Mufaris Rashadi

மழை என்­பது அல்­லாஹ்வின் மிகப்­பெரும் ஓர் அரு­ளாகும், அதனை அல்லாஹ் தான் நாடி­ய­போது இறக்கி வைக்­கிறான், மழை எப்­பொ­ழுது பொழியும், எங்கு பொழியும், எந்த அளவு பொழியும் என்­பது பற்­றிய அறிவு அவ­னிடம் மட்­டுமே உள்­ளது.

"நிச்­ச­ய­மாக அந்த (கியாம) நாள் பற்­றிய ஞானம் அல்­லாஹ்­வி­டமே உள்­ளது. அவனே மழையை இறக்­கு­கிறான்.” (அல்­குர்ஆன் 31:34)

“ஐந்து காரி­யங்­களை அல்­லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடி­யாது."

"நாளை என்ன நடக்கும் என்று எவரும் அறிய முடி­யாது, கரு­வ­றை­க­ளி­லுள்­ள­வற்றை எவரும் அறிய முடி­யாது, மழை எப்­பொ­ழுது வரு­மென்­ப­தையும் எவரும் அறிய முடி­யாது, ஒருவர் எந்த இடத்தில் மர­ணிப்பார் என்று எவரும் அறிய முடி­யாது, மறுமை நாள் எப்­பொ­ழுது வரும் என்று எவரும் அறிய முடி­யாது"  என்று இறைத்­தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: என அப்­துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி 1039)

"மழை இதனால் தான் பொழிந்­தது, இந்த நட்­சத்­தி­ரங்­களால் தான் மழை பொழிந்­தது என்று காரணம் சொல்­வதும் அல்­லாஹ்­வை­யன்றி ஏனைய படைப்­பி­னங்­க­ளோடு மழை பொழி­வதை தொடர்­பு­ப­டுத்திப் பேசு­வதும் இறை நிரா­க­ரிப்­பாகும்.”

ஸைத் பின் காலித் அல்­ஜு­ஹனீ (ரழி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்; அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹுதை­பியா' எனு­மி­டத்தில் எங்­க­ளுக்கு சுப்ஹுத் தொழுகை தொழு­வித்­தார்கள். (அன்­றி­ரவு மழை பெய்­தி­ருந்­தது.) தொழுது முடித்­ததும் மக்­களை நோக்கி நேராகத் திரும்பி, ”உங்கள் இறைவன் என்ன கூறினான் என்­பதை நீங்கள் அறி­வீர்­களா?” என்று கேட்­டார்கள். அதற்கு மக்கள், ”அல்­லாஹ்வும் அவ­னு­டைய தூத­ருமே நன்கு அறிந்­த­வர்கள்” என்று கூறினர். அப்­போது ”என் அடி­யார்­களில் என்னை நம்­பக்­கூ­டி­ய­வர்­களும் உள்­ளனர்; (என்னை) மறுக்­கக்­கூ­டி­ய­வர்­களும் உள்­ளனர். அல்­லாஹ்வின் தய­வாலும் அவன் கரு­ணை­யா­லும்தான் நமக்கு மழை பொழிந்­தது” எனக் கூறி­ய­வர்கள் என்னை நம்பி, நட்­சத்­தி­ரத்தை மறுத்­த­வர்­க­ளாவர். ”இன்ன இன்ன நட்­சத்­தி­ரத்­தினால் தான் எங்­க­ளுக்கு மழை பொழிந்­தது” எனக் கூறி­ய­வர்கள் என்னை மறுத்து நட்­சத்­தி­ரத்தை நம்­பி­ய­வர்கள் ஆவர்” என அல்லாஹ் சொன்னான்” என்று அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 125)

பொது­வாக மழை பற்றி அல்லாஹ் தனது திரு­ம­றையில் இவ்­வாறு கூறு­கின்றான்;

"அல்லாஹ் எத்­த­கை­யவன் என்றால் அவன்தான் வானங்­க­ளையும், பூமி­யையும் படைத்து வானத்­தி­லி­ருந்து மழை­யையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனி­வர்க்­கங்­க­ளையும் உங்­க­ளுக்கு ஆகா­ர­மாக வெளிப்­ப­டுத்தி தன் கட்­ட­ளை­யினால் கடலில் செல்­லு­மாறு கப்­பலை உங்­க­ளுக்கு வசப்­ப­டுத்திக் கொடுத்தும், ஆறு­க­ளையும் உங்­க­ளுக்கு வசப்­ப­டுத்தித் தந்தான்.'' (அல் குர்ஆன் 14:32)

அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இட­மா­கவும், வானத்தை ஒரு முக­டா­கவும் அமைத்து, மேகத்­தி­லி­ருந்து மழையைப் பொழி­வித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்­கக்­கூ­டிய கனி வர்க்­கங்­க­ளையும் உங்­க­ளுக்கு வெளி­யாக்­கு­கின்றான். ஆகவே (இவை­க­ளை­யெல்லாம்) நீங்கள் தெளி­வாக அறிந்­து­கொண்டே அல்­லாஹ்­வுக்கு எத­னையும் இணை­யாக்­கா­தீர்கள்.(அல் குர்ஆன் 2.22)

(நபியே!) நீர் பார்க்­க­வில்­லையா? நிச்­ச­ய­மாக அல்லாஹ் மேகத்தை மெது­வாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்­றாக இணை­யச்­செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்­தி­யாக்­கு­கிறான்; அப்பால் அதன் நடு­வே­யி­ருந்து மழை வெளி­யா­வதைப் பார்க்­கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்­டங்க)ளிலி­ருந்து பனிக்­கட்­டி­யையும் இறக்கி வைக்­கின்றான்; அதைத் தான் நாடி­ய­வர்கள் மீது விழும்­படிச் செய்­கிறான் தான் நாடி­ய­வர்­களை விட்டும் அதை விலக்­கியும் விடு­கிறான்  அதன் மின்­னொளி பார்­வை­களைப் பறிக்க நெருங்­கு­கி­றது. (அல்­குர்ஆன் 24:43)

மழை என்­பது அல்­லாஹ்வின் மிகப்­பெரும் அருள் என்­ப­தனை பின்­வரும் இறைச் செய்­திகள் நமக்கு தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

அவர்கள் நிரா­சை­யான பின்னர் மழையை இறக்கி வைப்­பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்­மத்தை (அருளை) பரப்­பு­கிறான்; இன்னும் அவனே புக­ழுக்­கு­ரிய பாது­கா­வலன்.

(அல்­குர்ஆன் 42:28)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி­னார்கள்;

அல்­லாஹ்வின் தூதர் மழை பொழி­வதைப் பார்த்தால் "இது அல்­லாஹ்வின் அருள் "என்று கூறு­வார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மழை பொழி­யும்­போது தன் மீது ஒரு சில மழைத் துளிகள் விழு­வதை விரும்­பு­வதும் நபி­க­ளாரின் சுன்­னா­வாகும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்; (ஒரு நாள்) நாங்கள் அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்­க­ளுடன் இருந்த போது மழை பெய்­தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்­மீது விழும் வித­மாக தமது ஆடையைச் சற்று விலக்­கி­னார்கள். நாங்கள், ”அல்­லாஹ்வின் தூதரே, ஏன் இவ்­வாறு செய்­தீர்கள்?”என்று கேட்டோம். அதற்கு அவர்கள் ”இது (புத்தம் புதி­தாக) இப்­போ­துதான் இறை­வ­னி­ட­மி­ருந்து வரு­கி­றது” என்று பதி­ல­ளித்­தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 1638)

மழை பொழி­யும்­போது அந்த மழையை மனி­தர்­க­ளுக்கு பய­ன­ளிக்கக் கூடிய மழை­யாக ஆக்­கி­ய­ரு­ளும்­படி இறை­வ­னிடம் பிரார்த்­தனை செய்தல் விரும்­பத்­தக்க ஒரு சுன்­னா­வாகும்.

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: மழை பொழி­யாமல் இருப்­ப­தற்குப் பெயர் பஞ்­ச­மன்று. மாறாக, பஞ்சம் என்­பது, மழை பெய்து கொண்­டே­யி­ருந்தும் பூமியில் (புற்­பூண்­டுகள்) எதுவும் முளைக்­கா­ம­லி­ருப்­ப­தாகும். இதனை அபூ­ஹு­ரைரா (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 5563)

"நபி(ஸல்)அவர்கள்

மழை பொழியும் போது

"அல்­லா­ஹும்ம ஸய்­யிபன் நாஃபிஆ"

பொருள் : இறைவா! பய­னுள்ள மழை­யாக இதை ஆக்கு! என்று பிரார்த்­தனை செய்­வார்கள்! (ஆதாரம்: புகாரி )

மழை அல்­லாஹ்­வி­ட­மி­ருந்து அரு­ளாக இறக்­கி­ய­ரு­ளப்­பட்­டாலும் சில­போது அதுவே மனி­த­னுக்கு சோத­னை­யாக மாறி­வி­டு­வ­தற்­கான வாய்ப்­புண்டு. அத­னால்தான் நபி­களார் (ஸல்) அவர்கள்  சில சம­யங்­களில் மழை மேகங்­களைக் காணும்­போது பதற்­ற­ம­டைந்து ஒரு­வி­த­மான கலக்க நிலையில் காணப்­ப­டு­வார்கள் என்­ப­த­னையும் பின்­வரும் செய்­தியின் மூலம் எம்மால் அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஆயிஷா ரழி­யல்­லாஹு அன்ஹா அவர்கள் அறி­விக்­கி­றார்கள் ; ''மேகத்­தையோ அல்­லது (சூறா­வளிக்) காற்­றையோ கண்டால், நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­களின் முகத்தில் (ஒரு­வி­த­மான கலக்­கத்தின்) ரேகை தென்­படும். (ஒருநாள்) நான், 'இறைத்­தூதர் அவர்­களே! மக்கள் மேகத்தைக் காணும்­போது அது மழை மேக­மாக இருக்­கலாம் என்­றெண்ணி மகிழ்ச்­சி­ய­டை­கின்­றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும் போது ஒரு­வி­த­மான கலக்கம் தங்கள் முகத்தில் தென்­படக் காண்­கி­றேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்­லாஹ்வின்) வேதனை இருக்­கலாம் என்­பதால் என்னால் கலக்­க­ம­டை­யாமல் இருக்க இய­ல­வில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூ­கத்தார் (சூறா­வளிக்) காற்­றினால் வேதனை செய்­யப்­பட்­டனர். (அந்தச்) சமூ­கத்தார் (மேக­மாக வந்த) அந்த வேத­னையைப் பார்த்­து­விட்டு, 'இது நமக்கு மழையைப் பொழி­விக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதி­ல­ளித்­தார்கள்.'' (ஆதாரம்: புகாரி 4829)

என­வேதான் காற்று சற்று பல­மாக வீசு­கின்ற போது­கூட நபி­களார் பிரார்த்­தனை செய்­துள்­ளார்கள். பல­மான காற்று வீசும்­போது கீழ் வரும் துஆவை ஓதிக் கொள்­வது நபி­வ­ழி­யாகும்.

"அல்­லா­ஹும்ம இன்னி அஸ்­அ­லுக்க கைரஹா, வ கைர மா ஃபீஹா, வ கைர மா உர்­ஸிலத் பிஹி, வ அஊது பிக மின் ஷர்­ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்­ஸிலத் பிஹி"

பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்­மை­யையும், இதி­லுள்­ளதின் நன்­மை­யையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்­பப்­பட்­டதோ அதன் நன்­மை­யையும் நான் உன்­னி­டத்தில் கேட்­கிறேன். இந்த காற்றின் தீமையை விட்டும் இதி­லுள்­ளதின் தீமையை விட்டும் எதனைக் கொண்டு இது அனுப்­பப்­பட்­டுள்­ளதோ அதன் தீமையை விட்டும் நான் உன்­னிடம் பாது­காவல் தேடு­கிறேன்.

(ஆதாரம் : முஸ்லிம், புகாரி)

அபூ தாவூத், இப்­னு­மாஜா போன்ற கிரந்­தங்­களில் கீழுள்ள இந்த சிறிய துஆவும் பதி­வா­கி­யுள்­ளது.

அல்­லா­ஹும்ம இன்னி அஸ்­அ­லுக்க கைரஹா, வ அஊது பிக மின் ஷர்­ரிஹா"

பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்­மையை நான் உன்­னிடம் கேட்­கிறேன். இதன் தீமையை விட்டும் உன்­னிடம் பாது­காவல் தேடு­கிறேன்.

இடி, மின்னல் பற்றி அல்லாஹ் தனது திரு­ம­றையில் இவ்­வாறு தெளி­வு­ப­டுத்­து­கிறான்;

அச்­சத்­தையும், எதிர்­பார்ப்­பையும் ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாக அவனே மின்­னலை உங்­க­ளுக்குக் காட்­டு­கிறான். பளு­வான மேகங்­க­ளையும் அவன் உரு­வாக்­கு­கிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்­று­கி­றது. அவனைப் பற்­றிய அச்­சத்­தினால் வான­வர்­களும் (புகழ்ந்து போற்­று­கின்­றனர்). இடி முழக்­கங்­க­ளையும் அவனே அனுப்­பு­கிறான். தான் நாடி­யோரை அவற்றின் மூலம் தண்­டிக்­கிறான். அவர்­களோ அல்­லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்­கின்­றனர். அவன் வலிமை மிக்­கவன். (அல்­குர்ஆன் 13:12,13)

இடி இடிக்­கின்ற போது  இந்த துஆவை ஓதிக் கொள்­வது விரும்­பத்­தக்க வழி­மு­றை­யாகும்.

"சுப்­ஹா­னல்­லதீ யுஸப்­பிஹுர் ரஃது பிஹம்­திஹி வல் மலா­யி­கது மின் ஹீப­திஹி"

பொருள் ; தூய­வ­னா­கிய அவன் எத்­த­கை­யவன் என்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்­கி­றது. மற்றும் வான­வர்கள் அவனின் பயத்தால் துதிக்­கின்­றனர். (நூல்: முஅத்தா 2/992, அல் அதபுல் முப்ரத்)

தேவைக்கு அதி­க­மாக மழை பெய்­யும்­போது கீழுள்ள துஆவை நாம் ஓதி அந்த மழை­யினால் நமக்கு ஏற்­ப­ட­வி­ருக்கும் பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து பாது­காவல் தேடிக்­கொள்ள வேண்டும்.

"அல்­லா­ஹும்ம ஹவா­லைனா வலா அலைனா அல்­லா­ஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வழ்­ழி­ராபி வபு­தூனில் அவ்­தி­யத்தி வம­னா­பிதிஷ் ஷஜரி" என்று நபி­களார் (ஸல்) அவர்கள் கூறு­வார்கள்.

பொருள் : இறைவா! எங்­களின் சுற்­றுப்­பு­றங்­க­ளுக்கு இதை அனுப்பி விடு­வா­யாக! எங்­க­ளுக்குக் கேடு தரு­வ­தாக இதை ஆக்­கி­வி­டாதே! யா அல்லாஹ்! குன்­று­களின் மீதும் மலையின் மீதும் உயர்ந்த பகு­தி­களின் மீதும் ஓடை­களின் உட்­பு­றங்­க­ளிலும் தாவ­ரங்கள் முளைக்கும் இடங்­க­ளிலும் மழை பொழிந்­திடச் செய்வாயாக! (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மேற்சொல்லப்பட்டவாறு மழைக்காலங்களில் பேண வேண்டிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு மழை அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அதனால் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவுவதும் அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையும் பெற்றுத் தரும் உயர்ந்த ஓர் அமலாகும் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் பொதுவான காலங்களில் செய்யப்படுகின்ற தானதர்மங்களை விட இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் தர்மம் செய்வது மிக ஏற்றமானதாகும் பாதிக்கப்பட்டவர்களின் அடி நெஞ்சிலிருந்து வரும் பிரார்த்தனைகளும் நிர்க்கதியான நிலையிலுள்ளவர்களுக்கு நாம் உதவுகின்ற போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் எம்மை எம் இறைவனின் பால் நெருக்கி வைக்கப் போதுமானதாகும்.
-Vidivelli