Verified Web

ஜனநாயகத்துக்கான போராட்டம் வெற்றிவரை தொடரவேண்டும்

6 days ago Administrator

Image result for ரணில் vidivelli

ஜன­நா­யகம் சிறை­ப்பி­டிக்­கப்­பட்டு 13 நாட்கள் கடந்­துள்ள நிலையில், மீண்டும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவும் நாட்டை சர்­வா­தி­கார ஆட்­சி­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­கா­கவும் தொடர்ச்­சி­யாக வீதி­களில் இறங்கிப் போரா­டி­வரும் இந்­நாட்டு மக்­க­ளுக்கு எனது நன்­றியை தெரி­விக்­கின்றேன். ஜன­நா­ய­கத்­துக்­கான இப்­போ­ராட்டம் வெற்­றி­பெறும் வகையில் இதனைக் கைவி­டாது தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டு­மென ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் புதிய பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக் ஷ நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, அந்­நி­ய­மனம் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­னது எனவும் ஜன­நா­ய­கத்தை பாதித்­துள்­ளது எனவும் கூறி பல்­வேறு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பாரா­ளு­மன்­றத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்றும், நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பையும் ஜன­நா­ய­கத்­தையும் பாது­காக்க வேண்டும் என்­பதே போராட்­டக்­கா­ரர்­களின் கோரிக்­கை­யாக உள்­ளது. இந்­நி­லையில் ஜன­நா­ய­கத்­துக்­கான மக்­களின் போராட்­டத்­துக்கு நன்றி தெரி­விக்கும் வகை­யிலும், போராட்­டத்தை தொடர்ந்து முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளி­யிட்­டுள்ள காணொ­லி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  காணொ­லியின் ஊடாக அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

ஜன­நா­ய­கத்தை சிறை­ப்பி­டித்து இன்­றுடன் 13 நாட்கள் கடந்­துள்­ளன. இந்த 13 இருண்ட நாட்­களில் நாட்டு மக்­க­ளா­கிய உங்­களால் ஜன­நா­ய­கத்தை வெற்றி கொள்­வ­தற்­காகப் பல்­வேறு வகை­யான செயற்­பா­டுகள் மற்றும் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கான பாரிய மக்கள் பலத்தை நிரூ­பிக்கும் வகையில் அன்­றி­லி­ருந்து இன்று வரை வீதி­களில் இறங்கி போராடி வரு­கின்­றீர்கள்.

உங்­க­ளு­டைய போராட்­டங்­களின் மீது அச்­சு­றுத்­தல்கள், வன்­மு­றைகள் போன்­ற­வற்றை எதிர்­கொண்ட போதும் அவற்றை பொருட்­ப­டுத்­தாது தைரி­யத்­து­டனும்,  இலக்கை நோக்­கிய உறு­தி­யு­டனும் தொடர்ந்து போராடி மீண்டும் ஒரு சர்­வா­தி­கார, ஊழல் நிறைந்த ஆட்­சிக்குள் நாடு செல்­வதை தடுத்­தி­ருக்­கின்­றீர்கள்.

நாட்டின் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்­கா­கவும் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவும் நீங்கள் அனை­வரும் ஒரு­மித்து போரா­டி­வ­ரு­வ­தை­யிட்டு எனது நன்­றியை தெரி­வித்துக் கொள்கின்றேன். உங்களுடைய இந்தப் போராட்டம் தனியொரு கட்சி, கட்சியின் தலைவர் , கட்சியின் உறுப்பினர்களுக்கானது என்பதைக் கடந்து இது எமது சுதந்திரம் , அடிப்படை உரிமைகள் மற்றும் எமது நாட்டுக்கான போராட்டமாகும். இதனை கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
-Vidivelli