Verified Web

முகா அஇமகா வில் தேவை ஏற்பாட்டால் கைவைப்போம்

6 days ago Administrator

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யு­தீனின் கட்­சி எங்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றன. அவர்­களின் கட்­சி­யி­லி­ருந்து உறுப்­பி­னர்­களை தனித்­த­னி­யாக எடுக்­கலாம். என்­றாலும் கட்­சி­களை பிள­வு­ப­டுத்­து­வது எமது நோக்­க­மல்ல. அவர்கள் கூட்­டாகத் தீர்­மானம் எடுக்­க­வி­ருப்­பதால் நாங்கள் அதில் கைவைக்­க­வில்லை. தேவை ஏற்­படின் கைவைப்போம். அது தொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் நன்­க­றிந்து வைத்­தி­ருக்­கின்­றனர்  என நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்தி அமைச்சர் எஸ்.பி திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

கொழும்பில் அமைந்­துள்ள சுதந்­திர ஊடக மத்­திய நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாய­கத்தின் வேண்­டு­கோளை கௌர­விக்கும் வகையில் 16ஆம் திகதி கூட்­ட­வி­ருந்த பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி 14ஆம் திகதி கூட்ட நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யதால் குழப்­ப­ம­டைந்­தி­ருக்கும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் ஒரு­சில வெளி­நாட்டுத் தூத­ர­கங்­க­ளுமே பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

அத்­துடன் சபா­நா­ய­கரும் தற்­போது குழப்­ப­ம­டைந்­தி­ருக்­கின்றார். அத­னால்தான் அவர் ஒன்­றுக்­கொன்று முரண்­பட்ட அறிக்­கை­களை விடுத்து வரு­கின்றார். அவர் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­ன­ராக இருக்­கின்­ற­மை­யா­லேயே இவ்­வாறு செயற்­ப­டு­கின்றார். அதனால் அது தொடர்பில் நாங்கள் அலட்­டிக்­கொள்ள மாட்டோம். என்­றாலும் அவர் கட்சி சார்­பாக நடந்­து­கொள்வார் என்று நாங்கள் எதிர்­பார்க்­க­வில்லை. சபா­நா­ய­கரின் இன்­றைய செயற்­பா­டு­களை பார்க்­கும்­போது முற்­றா­கவே கட்சி சார்­பா­கவே செயற்­பட்டு வரு­கின்றார்.

சபா­நா­யகர் என்ற வகையில் அவ­ருக்கு பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­ட­ளையின் பிர­காரம் செயற்­பட மாத்­தி­ரமே முடியும். மாறாக சண்­டித்­தனம் காட்­ட­மு­டி­யாது. அதற்கு நாங்கள் இட­ம­ளிக்­கவும் மாட்டோம். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முறைப்­பா­டு­க­ளுக்­கி­ணங்க செயற்­பட அவ­ருக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை.

அத்­துடன் நாங்கள் ஒரு­போதும் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கோ மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பொன்­றுக்கோ தேர்­த­லொன்­றுக்கோ செல்­ல­மாட்டோம். சட்­டத்தில் இட­மி­ருந்­தாலும் அவ்­வாறு செல்ல எந்தத் தேவையும் எங்­க­ளுக்­கில்லை. மாறாக நாங்கள் மாகா­ண­சபை தேர்­தலை விரைவில் நடத்­தவே ஆலோ­சித்து வரு­கின்றோம். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே திட்­ட­மிட்டு மாகா­ண­சபை தேர்­தலை பிற்­ப­டுத்தி வந்தார். அந்த தவ­று­களை நிவர்த்தி செய்­து­கொண்டு இரண்டு மாதங்­க­ளுக்குள் மாகா­ண­சபை தேர்­த­லுக்கு அழைப்பு விடுக்க முயற்­சிக்­கின்றோம்.

அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை தற்­போது நாங்கள் அமைத்­தி­ருக்­கின்றோம். தேவை­யான நேரத்தில் அவர்­களை நாங்கள் முன்­னி­லைப்­ப­டுத்த தயா­ராக இருக்­கின்றோம். அதனால் எதிர்­பார்க்க முடி­யாத பல  விட­யங்கள் எதிர்­வரும் சில தினங்­களில் இடம்­பெறும். தற்­போது  105பேர் இருக்­கின்றோம். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு 97பேர் மாத்­தி­ரமே இருக்­கின்­றனர். நாங்­கள்தான் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்றோம். மக்கள் விடு­தலை முன்­னணி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தற்­போது 4 பிரி­வு­க­ளாக பிளவு பட்­டி­ருக்­கின்­றது. அதனால் அவர்­களில் சிலரை எங்கள் பக்கம் திருப்­பிக்­கொள்­ளலாம்.  அதே­போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யு­தீனின் கட்சி எங்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றன. அவர்­களின் கட்­சியில் இருந்து உறுப்­பி­னர்­களை தனித்­த­னி­யாக எடுக்­கலாம். என்­றாலும் கட்­சி­களை பிள­வு­ப­டுத்­து­வது எமது நோக்­க­மல்ல. அவர்கள் கூட்­டாகத் தீர்மானம் எடுக்க இருப்பதால் நாங்கள் அதில் கைவைக்கவில்லை. தேவை ஏற்படின் கைவைப்போம். அதுதொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிசஷாத் பதியுதீன் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

அதனால் பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டப்படும்போது நாங்கள் பெரும்பான்மையுடனே செல்வோம். அத்துடன் மைத்திரி – -மஹிந்த அரசாங்கம் எந்த சிக்கலும் இன்றி உறுதியாகப் பயணிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
-Vidivelli