Verified Web

புதிய ஆட்சி மாற்றத்தை எங்களால் ஏற்க முடியாது

6 days ago ARA.Fareel

Image result for ரவூப் ஹக்கீம் vidivelli

புதிய ஆட்­சி­மாற்­றத்தை எங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாடு என்ற நிலைப்­பாட்­டி­லேயே கட்சி தொடர்ந்து இருந்து வரு­கி­றது. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் முன்­னைய சந்­தர்ப்­பங்­களில் இருந்­துள்ள கார­ணத்­தினால் அவ­ருக்கு மீண்டும் ஒத்­து­ழைக்க வேண்டும் என கூறு­வது நியா­ய­மா­காது. அது எமது கட்­சிக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தும் அதை எங்­களால் செய்­ய­மு­டி­யாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் இரவு உம்ரா கட­மைக்­காக கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பய­ண­மான ரவூப் ஹக்கீம் புறப்­பட்டுச் செல்­வ­தற்கு முன்பு கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டி­யான சூழ்­நி­லையில் இரு­கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி பிரச்­சி­னைக்குத் தீர்வு காண­வேண்டும்.

அத்­தோடு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்க முயற்­சிப்­ப­வர்கள் இப்­ப­டி­யான கீழ்த்­த­ர­மான செயற்­பா­டு­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து, ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு சட்­ட­பூர்­வ­மாக கட்சித் தலை­வர்­க­ளுடன் இணக்­கப்­பாட்­டுக்கு வந்து தீர்­மானம் எடுப்­ப­தாயின் எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. ஆனால் கட்­சி­க­ளுடன் நேர­டி­யாகப் பேச்­சு­வார்­த­தையில் ஈடு­ப­டாமல் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­மைக்கு தீர்­வு­காண முடி­யாது. உரிய முறையில் நம்­ப­கத்­தன்­மை­யுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வதன் மூலமே சரி­யான தீர்வை எட்­டலாம்.

புதிய ஆட்­சி­மாற்­றத்தை எங்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாடு என்ற நிலைப்­பாட்­டிலே கட்சி தொடர்ந்து இருந்து வரு­கி­றது.

எமது கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கட்சித் தலை­வரின் அனு­ம­தி­யின்றி வேறு எவ­ரு­டனும் கூட்­டுச்­சே­ரு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என்றார்.

இதே­வேளை உம்ரா கட­மையை மேற்­கொண்­டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் 5 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உம்ரா கடமையை நிறைவேற்றியதன் பின்பு எதிர்வரும் 12ஆம் திகதி இரவு நாடுதிரும்பவுள்ளனர்.

பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடவுள்ள நிலையில் இருகட்சிகளும் எதிர்வரும் 13ஆம் திகதி தங்களது நிலைப்பாட்டினை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-Vidivelli