Verified Web

நாளைய தினம் முதல் காலநிலையில் மாற்றம்

6 days ago Administrator


இலங்­கைக்கு தென்­மேற்­காக காணப்­பட்ட குறைந்த அழுத்தப் பிர­தேசம் தற்­போது இலங்­கையை விட்டு விலகிச் சென்று கொண்­டுள்­ளது. எனவே நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­படும் மழை­யுடன் கூடிய நிலைமை நாளைய தினத்­தி­லி­ருந்து குறை­வ­டை­யு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

வடக்கு மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­களில் ஓர­ளவு குளி­ரான வானிலை நில­வக்­கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் நேற்று பிற்­பகல் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வடக்கு, வட­மத்­திய, கிழக்கு மற்றும் தென் மாகா­ணங்­களில் அவ்­வப்­போது மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­யக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது.

நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் குறிப்­பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­யக்­கூடும்.

சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் காலி, மாத்­தறை மற்றும் களுத்­துறை மாவட்­டங்­களின் சில இடங்­க­ளிலும் 75 மி.மீக்கும் அதி­க­மான ஓர­ளவு பலத்த மழை­வீழ்ச்சி பதி­வா­கக்­கூடும்.

இடி­யுடன் கூடிய மழையின் போது அப்­பி­ர­தே­சங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்த காற்றும் வீசக்­கூடும். இடி மின்னல் தாக்­கங்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை குறைத்­துக்­கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli