Verified Web

விமர்சனங்கள் முரண்பாடுகளை தவிர்க்க உடன் தேர்தலை நடத்த வேண்டும்

6 days ago Administrator

விமர்­ச­னங்கள் மற்றும் முரண்­பா­டு­களை தவிர்க்க உட­ன­டி­யாக தேர்­த­லொன்றை நடத்தி ஜன­நா­யக ரீதி­யி­லான அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டு­மென ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்சி மற்றும் அதன் பங்­காளிக் கட்சி உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

ஆளும் தரப்பின் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­க­ளுடன் நடத்­தி­வரும் பேச்­சு­வார்த்­தையை கைவிட வேண்டாம் எனவும்  கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு மற்றும் அதன் பங்­காளிக் கட்சி உறுப்­பி­னர்­களின் கூட்டம் நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. நிகழ்­கால அர­சியல் செயற்­பா­டுகள் மற்றும் பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வது தொடர்­பி­லான நெருக்­க­டிகள் குறித்தும் ஆழ­மாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன.

பாரா­ளு­மன்­றத்தை கலைக்க ஜனா­தி­பதி ஆலோ­சித்து வரு­வ­தாக நேற்று முன்­தினம் சமூக வலைத்­ தளங்கள் மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களில் வெளி­யா­கி­யி­ருந்த நிலையில் நேற்று முன்­தினம் இரவு கூட்­டத்தில் இது­கு­றித்தும் சில உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். எனினும் உரிய திக­தியில் (14ஆம் திகதி ) பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தா­கவும் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் ஆட்­சியை கொண்டு செல்­லவும் ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார். எதிர்­வரும்  14 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்­டும்­போது பிர­த­ம­ருக்­கான பெரும்­பான்மையை நிரூ­பிக்கத் தொடர்ந்தும்  நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தவும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு இப்­போது வரையில் 105 பேர் ஆத­ர­வாக உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தவும் நகர்­வுகள் முன்­னெ­டுப்­பது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. மேலும் இப்­போ­துள்ள நிலையில் ஜன­நா­யக விரோத ஆட்­சியை அமைத்­துள்­ள­தாக பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் தேர்தல்  ஒன்­றுக்கு சென்றால் இல­கு­வாக வெற்­றி­கொள்ள முடியும். ஆகவே தேர்தல் ஒன்­றினை நடத்தி  ஜன­நா­யக ரீதியில்  அர­சாங்­கத்தை அமைக்க முடியும்.  ஆகவே உட­ன­டி­யாக தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்டும் எனவும்  ஆளும் கட்சி தரப்­பினர் ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் தெரி­வித்­துள்­ளனர்.

ஜனா­தி­பதி –- பிர­தமர் இணைந்த ஆளும்­கட்சி சந்­திப்பு குறித்து திலங்க சும­தி­பால எம்.பி. கூறு­கையில், எம்மால் பெரும்­பான்மை ஆத­ரவை நிரூ­பிக்க முடியும். எதிர்­வரும் 14ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடும் வேளையில் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்க 120 பேர் எம்­முடன் இருப்­பார்கள். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அதேபோல் இப்­போது பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவு எம்­மி­ட­முள்ள நிலையில் தேர்­தலை நடத்தி எமது பெரும்­பான்­மையை நிரூ­பித்து வர­லாற்றில் எப்­போதும் இல்­லாத அளவு ஐக்­கிய தேசியக் கட்­சியை தோல்­வி­ய­டைய செய்ய வேண்டும் என்­பதை நாம் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் வலி­யு­றுத்­தினோம். அதேபோல் இப்­போது அமைச்­சுக்கள் மற்றும் பிரதி அமைச்­சுக்கள் நிய­ம­னங்கள் இடம்பெற்று வருகின்றன. இன்னமும் 9 அமைச்சரவை அமைச்சுக்களுக்கான வெற்றிடங்கள் உள்ள நிலையில் அவற்றையும் நிரப்பி முழுமையாக அரசாங்கத்தை உடனடியாக கொண்டுசெல்ல வேண்டும் என்ற காரணிகளும் ஆராயப்பட்டுள்ளன. சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை இணைத்து செல்வது குறித்தும் ஆராயப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli