Verified Web

கிழக்கில் தொடர் மழை: வெள்ள அபாய நிலை

6 days ago Administrator

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாகப் பெய்­து­வரும் அடை மழை கார­ண­மாக இது­வரை 499 குடும்­பங்­களைச் சேர்ந்த 1706பேர் இடம்­பெ­யர்ந்து 5 இடைத்­தங்­கல் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளதாக அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் எம்.ஏ.சி. முஹம்மத் றியாஸ் தெரி­வித்தார். 

வாகரை பிர­தேச செய­லாளர் பிரிவில் ஊரி­யன்­கட்டு, கட்­டு­மு­றிவு, அம்­பந்­தா­வெளி, வாழைச்­சேனை பிர­தேச செய­லாளர் பிரிவில்  நாசிவன் தீவு ஆகிய கிரா­மங்­க­ளி­லி­ருந்து மக்கள் இடம்­பெ­யர்ந்து இடைத்­தங்கல் முகாம்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பெய்­து­வரும் அடை மழை, வெள்ளம் கார­ண­மாக கிரான் - புலி­பாய்ந்­தகல் தரை­வழிப் பாதை துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. கிரான் - தொப்­பி­கல பிர­தான வீதி வெள்­ளத்தில் மூழ்­கி­யதால் ஐந்து கிராம சேவகர் பிரி­வு­களைச் சேர்ந்த சுமார் 1500 குடும்­பங்­களின் தரை­வழிப் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து பொது­மக்­களின் போக்­கு­வ­ரத்­திற்­காக இயந்­திரப் படகுச் சேவைகள் கிரான் பிர­தேச செய­ல­கத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. கிரான் தொடக்கம் புலி­பாய்ந்­தகல் பிர­தேசம் வரைக்­கு­மான சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம்  இப்­ப­ட­குச்­சேவை நடை­பெ­று­கி­றது. சித்­தாண்டி ஈர­ளக்­குளம் வீதி வெள்­ளத்தில் மூழ்­கி­யதால் ஏறா­வூர்ப்­பற்று பிரதே செய­ல­கத்­தினால் இயந்­தி­ரப்ப படகுச் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு நேரடி விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் நிலை­மை­களை கேட்­ட­றிந்­த­துடன் அவ­சர உத­வி­களை மேற்­கொள்ள ஆவன செய்­யு­மாறு அதி­கா­ரி­களைக் கேட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

போக்­கு­வ­ரத்து பாதிப்பு

கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால நிலை­யினால் கொழும்பு - மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதியின் ரிதி­தென்னை மற்றும் வெலிக்­கந்த பகு­தியில் ஏற்­பட்ட வெள்­ளத்­தினால் செவ்­வாய்க்­கி­ழமை மாலை முதல் புதன்­கி­ழமை அதி­காலை வரை சிறிய வாக­னங்கள் இந்த வீதி­யினால் செல்ல முடி­யாத நிலை காணப்­பட்­டது.

இந்த வீதியில் மூன்­ற­டிக்கு மேல் வெள்ள நீர் செல்­வதால் சிறிய வாக­னங்கள் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டதால் பய­ணிகள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர் நோக்­கினர். பெரிய பஸ் வண்­டி­க­ளிலும் புகை­யி­ர­தத்­திலும் பய­ணிகள் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. எனினும் புதன்­கி­ழமை அதி­காலை இந்த வீதி­களில் வெள்ள நீர் குறை­வ­டைந்­த­தை­ய­டுத்து சிறிய வாக­னங்­களும் செல்­வ­தாக வெலிக்­கந்த பொலிசார் தெரி­வித்­தனர்.

மட்­டக்­க­ளப்பில் 20 ஆயிரம்

பேர் பாதிப்பு

கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால நிலை­யினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 20000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரி­வித்­துள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வாகரை, வாழைச்­சேனை,ஓட்­ட­மா­வடி, ஏறாவூர் பற்று ஓட்­ட­மா­வடி, கோற­ளைப்­பற்று மத்தி ஆகிய ஐந்து பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் இந்த 20000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அரச நிறு­வ­னங்கள் தயார் நிலையில்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எந்­த­வொரு அனர்த்­தத்­தையும் எதிர் கொள்­வ­தற்கு மாவட்­டத்­தி­லுள்ள திணைக்­க­ளங்­களின் தலை­வர்கள் அதி­கா­ரிகள் ஆயத்த நிலையில் இருக்க வேண்­டு­மென மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் எம்.உத­ய­குமார் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுவின் அவ­சரக் கூட்டம் நேற்று மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால நிலை­யினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்கள் மற்றும் அது தொடர்­பாக எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராயும் பொருட்டு அனர்த்த முகா­மைத்­துவ ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுவின் இந்த அவ­சரக் கூட்டம் நடை­பெற்­றது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரி­வித்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் எம்.உத­ய­குமார், சூறா­வளி, சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்ற எந்­த­வொரு அனர்­தத்­தையும் எதிர்கொள்ள நாம் ஆயத்­த­மாக இருக்க வேண்டும். அவ்­வா­றான அனர்த்­தங்­களின் போது நாம் செய்ய வேண்­டிய செயற் திட்­டங்கள் குறித்த முன்­னா­யத்த திட்ட அறிக்கை மாவட்ட அனர்த்த முகா­மைத்­து­வக்­கு­ழு­விடம் இருக்க வேண்டும்.

கடந்த இரண்டு தினங்­க­ளாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால நிலை­யினால் மாவட்­டத்தில் 180 மில்லி மீற்றர் மழை பெய்­துள்­ளது. வீதி­களில் காணப்­படும் வடி­கான்­களை உட­ன­டி­யாக துப்­பு­ரவு செய்து வடி­கான்­களில் வெள்ள நீர் தேங்கி நிற்­காமல் அதனை ஓடச் செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு மக்கள் இடம்­பெ­யரும் போது அவர்­க­ளுக்கு தேவை­யான அவசர உத­விகள், உணவு வச­திகள் போன்ற வற்றை வழங்க ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.

இது தொடர்பில் பிர­தேச செய­லாளர் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள், திணைக்­கள தலை­வர்­க­ளுடன் தொடர்பு கொண்டு அதற்­கான கரு­மங்­களை ஆற்ற வேண்டும். மட்­டக்­க­ளப்­பி­லுள்ள முகத்­து­வா­ரத்­தினை வெட்டி அதனை திறந்து விடு­வது தொடர்பில் ஆரா­யப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு மக்கள் இடம் பெயரும் போது பாட­சாலைக் கட்­ட­டங்­களை தவிர்த்து ஏனைய பொதுக் கட்­ட­டங்­களை அதற்­காக பயன்­ப­டுத்த முன் வர­வேண்டும்.

இலங்கை மின்­சார சபை, மற்றும் பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம், நீர்ப்­பா­சனத் திணைக்­களம், உள்­ளூ­ராட்சி திணைக்­களம் மற்றும் பாது­காப்பு படை­யினர் உட்­பட அனை­வரும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என தெரி­வித்தார்.

இக் கூட்­டத்தின் போது சீரற்ற கால நிலை­யினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்கள் குறித்து ஆரா­யப்­பட்­ட­துடன் எடுக்­கப்­பட வேண்­டிய அவசர நட­வ­டிக்­கைகள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

பாசிக்­கு­டாவில் 342

மில்லி மீற்றர் மழை­வீழ்ச்சி

இலங்­கைக்கு மேலாக காணப்­ப­டு­கின்ற தாழ­முக்கம் தற்­போது மேற்குத் திசையில் நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இதனால் தற்­போது நில­விக்­கொண்­டி­ருக்கும் மழை­கொண்ட கால­நிலை இன்று வியா­ழக்­கி­ழமை குறை­வ­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக வானிலை அவ­தான நிலை­யத்தின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நிலையப் பொறுப்­பதி­காரி கே. சூரி­ய­கு­மாரன் நேற்றுத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், தாழ­முக்கம் எதிர்­வரும் 9 ஆம் திகதி தென்­கி­ழக்கு வங்­காள விரி­குடா கடல் பிராந்­தி­யத்தில் அந்­தமான் தீவிற்கு அண்­மையில் உரு­வாகும் சாத்­தி­ய­முள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் நேற்றுக் காலை 8.30 மணி­வ­ரையில் மட்­டக்­க­ளப்பு நகர்ப் பகு­தியில் 145.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், நவ­கிரிப் பகு­தியில் 59.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், தும்­பங்­கேணிப் பகு­தியில் 80.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், மைலம்­பா­வெளிப் பகு­தியில் 187.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், பாசிக்­கு­டாவில் 342.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், உன்­னிச்சைப் பகு­தியில் 61.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், வாக­னேரிப் பகு­தியில் 288.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், உறு­காமம் பகு­தி­யில 94.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், கட்­டு­மு­றிவுப் பகு­தியில் 139.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், கிரான் பகு­தியில் 290.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், கதி­ர­வெளிப் பகு­தியில் 153.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்­சியும், பதி­வா­கி­யுள்­ளன.

இந்­நி­லையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பர­வ­லாக தொடர்ந்து மழை பெய்து வரு­கின்­றது. இதனால் பல கிரா­மங்­க­ளி­லுள்ள உள்­வீ­திகள் மழை நீரில் மூழ்­கி­யுள்­ள­தோடு, உள்ளூர் போக்­கு­வ­ரத்­துக்­க­ளிலும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளன. இவற்­றை­விட அண்­மைக்­கா­ல­மாக மழை­யின்றி வற்றி வறண்டு கிடந்த சிறிய குளங்கள் மழை நீரில் நிரம்­பி­யுள்­ள­துடன், வாய்க்­கால்கள், குட்­டைகள், ஏரி­களும், நிரம்­பிக்­கா­ணப்­ப­டு­கின்­றன.

பாட­சாலை, கல்வி

அலு­வ­ல­கங்­களில் வெள்ளம்

தொடரும் மழை கார­ண­மாக ஏறா­வூ­ரி­லுள்ள மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வலய அலு­வ­லகம் உட்­பட பிர­தே­சத்­தி­லுள்ள பல பாட­சாலை வளா­கங்­களில் வெள்ள நீர் தேங்கி நிற்­பதைக் காண­மு­டிந்­தது.

இதனால் அலு­வ­லர்கள், ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் உள்­ளிட்டோர் மிகவும் சிர­மத்­தோடு பாட­சா­லை­க­ளுக்கும் அலு­வ­ல­கங்­க­ளுக்கும் செல்ல வேண்­டி­யேற்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி அலு­வ­ல­கத்தின் ஒரு பகு­திக்குள் வெள்ள நீர் புகுந்­ததால் பாது­காப்புக் கருதி அலு­வ­லக தள­வா­டங்­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் அப்­பு­றப்­ப­டுத்தும் முயற்­சியில் அலு­வ­லர்கள் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். புதன்­கி­ழமை (07.11.2018) நண்­பகல் வரை மட்­டக்­க­ளப்பின் சில பகு­தி­களில் அடை­மழை சற்று ஓய்ந்­தி­ருந்­தது.

திரு­மலை மாவட்­டத்­திலும் வெள்ளம்

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மழை கார­ண­மாக பல்­வேறு இடங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. கிண்­ணியா, மூதூர், சேருவில, கந்­தளாய் உட்­பட வெள்ள அனர்த்­தங்­களை எதிர் நோக்­கியும் உள்­ளன.

பாதிப்­புக்­களை குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை 24 மணி நேரமும் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் எந்­நே­ரத்­திலும் தயார் நிலையில் இருந்து வரு­வ­தா­கவும் திரு­கோ­ண­மலை மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் கே.சுகு­னதாஸ் தெரி­வித்தார்.

அனர்த்த பாதிப்­புக்கள் தொடர்பில் நேற்று வின­வி­ய­போதே  அவர் இவ்­வாறு தெரி­வித்தார். வெள்ள பாதிப்­புக்­குள்­ளான பகு­தி­களில் வடி­கான்­களை சுத்­தப்­ப­டுத்தும் பணி­க­ளிலும் பெகோ இயந்­தி­ரங்­களைக் கொண்டும் நீர் வடிந்­தோ­டக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நேற்­றைய தினம் 106.0  மில்லி மீற்றர் அள­வி­லான மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

மூதூர்

கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக மூதூர் பிர­தே­சத்தில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள மூதூர் வெளி, ஹைரியா நகர், சாபி நகர், ஆலிம் நகர் உள்­ளிட்ட தாழ்­நிலப் பரப்­புக்கள் நீரில் மூழ்கி வரு­கின்­றன.

இடிமண் ஆறு பெருக்­கெ­டுத்து மூதூர்- சம்பூர் வீதிக்கு மேலாகப் பரவிச் செல்வதால்  அரபா நகர், அம்மன் நகர், சேனையூர் சம்பூர் முத­லான கிரா­மங்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்தில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. 

மூதூர் பிர­தே­சத்தில் சம்­மான்­துறை, வண்ணான் குழி உள்­ளிட்ட பகு­தி­களில் விதைப்­புக்­குள்­ளான ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட ஏக்கர்  நெல் வயல்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

மூதூர் பிர­தே­சத்­திற்கு மேற்­காக மூதூர் பிர­தே­சத்தை வெள்­ளப்­பெ­ருக்கில் இருந்து பாது­காப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்ட பாரிய அணைக்­கட்டு சிதை­வ­டைந்­துள்ள நிலையில்  கிழக்கில்  அடை­மழை தொட­ரும்­போது மூதூரில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

நீரை வடிந்­தோடச் செய்ய ஏற்­பாடு

தற்­போது பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக மூதூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் உள்ள பல கிரா­மங்­களில் நீர் வடிந்­தோ­டாது தேங்கி காணப்­ப­டு­வ­தினால் மழை நீரை வடிந்­தோட வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மூதூர் பிர­தேச சபை மேற்­கொண்டு வரு­கி­றது.

நீர் தேங்கி காணப்­ப­டு­வ­தினால் தொற்­றுநோய் பரவும் அபாயம் காணப்­ப­டு­வ­தோடு, பொது­மக்கள் சுற்­றுச்­சூழல் தொடர்­பான பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்கி வரு­வ­தி­னாலும் பெக்கோ இயந்­தி­ரங்­களைக் கொண்டு வீதிகள் துப்­ப­ரவு செய்­யப்­பட்டு மழை நீரை வடிந்­தோடச் செய்யும் செயற்­பாடு மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

கிண்ணியா

தொடர்  அடை மழையினால் கிண்ணியா பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க  கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி,  தலைமையில் அனர்த்த முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாடசாலைகளும் பாதிப்பு

இதே.வேளை கடும் அடை மழை காரணமாக கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தினுள்ளும் வகுப்பறைகளுக்குள்ளும் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்ததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்.

இரு நாட்கள் தொடர்ச்சியான அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  குறித்த பாடசாலையின் வகுப்பறைக்குள் நீர் புகுந்ததால் தளபாடங்கள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக பெற்றார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழமையான நிலைமைக்கு கால நிலை மாற்றம் திரும்புவதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தின் தாழ் நிலப் பகுதிகளை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்க உரிய அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு கல்விக்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்யுமாறு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
-Vidivelli