Verified Web

பலஸ்தீன எதிர்ப்புணர்வின் சின்னமான போராளிக்கு காயத்தை ஏற்படுத்திய இஸ்ரேல்

7 days ago M.I.Abdul Nazar

பலஸ்­தீன எதிர்ப்­பு­ணர்வின் சின்­ன­மான புகைப்­ப­ட­மாக   உலகம் முழு­வ­திலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள இளம் போரா­ளிக்கு இஸ்­ரே­லிய படை­யினர் காயத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஒரு கையில் பலஸ்­தீன கொடி­யையும் மறு­கையில் கல்­லெ­றியும் உப­க­ர­ணத்­தையும் வைத்­தி­ருக்கும் 22 வய­தான அயித் அபூ அம்­ரோவின் புகைப்­படம் பிரஞ்சு புரட்சி ஓவியம் மற்றும் விடு­த­லைக்­காக மக்­களை தலைமை தாங்கிச் செல்லும் ஓவியம் என்­ப­வற்­றோடு ஒப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

11 ஆண்­டு­க­ளாக விதிக்­கப்­பட்­டுள்ள இஸ்­ரேலின் தரை, வான் மற்றும் கடல் தடை­க­ளுக்கு எதி­ராக வடக்கு காஸா எல்­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் அபூ அம்ரோ பங்­கேற்­றி­ருந்தார். இதன்­போது இஸ்ரேல் படை­யினர் உண்­மை­யான துப்­பாக்கி ரவை­களைக் கொண்டு நடத்­திய தாக்­கு­தலில் அபூ அம்­ரோ­வுக்கு காலில் காயம் ஏற்­பட்­டது. ஒவ்­வொரு திங்கள் மற்றும் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் தனது நண்­பர்­க­ளுடன் அவர் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்று வரு­கின்றார். நான் கொல்­லப்­பட்டால், எனது ஜனாஸா இந்தக் கொடி­யி­னா­லேயே சுற்­றப்­பட வேண்டும். மீளத் திரும்­பு­வ­தற்­கான எமது உரி­மை­யி­னையும், எங்கள் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரதும் கெள­ர­வத்­தையும் வேண்டி நிற்­கின்றோம் என அபூ அம்ரோ கடந்த மாதம் அல்-­ஜெ­ஸீ­ரா­விடம் தெரி­வித்­தி­ருந்தார்.

காஸா பள்­ளத்­தாக்கில் இஸ்­ரே­லிய தடை­களை நீக்­கு­மாறு கோரி இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­ட­மொன்­றின்­போது அன­டொலு முக­வ­ர­கத்தின் புகைப்­பட ஊட­க­வி­ய­லா­ள­ரான முஸ்­தபா ஹஸோ­னா­வினால் எடுக்­கப்­பட்ட இப் புகைப்­படம் இணை­யத்­த­ளங்­களில் வைர­லாகப் பரவி சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஈர்த்­தது.

நான் புகைப்­படம் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக போராட்டத்திற்குச் செல்லவில்லை, ஆனால் இது எனக்கு தொடர்ந்து போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான ஆர்வத்தைத் தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli