Verified Web

பாராளுமன்றம் கலைக்கப்படுமா

7 days ago Administrator

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாத சூழ்­நிலை ஏற்­படும் பட்­சத்தில் ஜனா­தி­பதி மிக விரைவில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கக் கூடும் என சிலர் அபிப்­பி­ராயம் வெளி­யிட்­டுள்­ளனர்.

19 ஆவது திருத்­தத்தின் 70 ஆவது ஷரத்­துக்கு அமைய நான்­கரை வரு­டங்­களின் பின்­னரே பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடியும் எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பினும், அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­பு­ரை­க­ளுக்கு வழங்­கப்­படும் வியாக்­கி­யா­னங்­க­ளி­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முற்­படக் கூடும் என்றும் சிலர் கரு­து­கின்­றனர்.

எனினும் இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா, 150 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­கு­மாறு கோரும் பட்­சத்தில் மாத்­தி­ரமே ஜனா­தி­ப­தி­யினால் நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்றைக் கலைக்க முடியும் என சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­கும்­பட்­சத்தில், அதற்­கெ­தி­ராக உயர் நீதி­மன்றை நாடு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் உள்­ள­தா­கவும் சட்­டத்­த­ர­ணிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எதிர்­வரும் 14 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூட­வுள்ள நிலையில் அன்­றைய தினம் மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு  113 எம்.பி.க்களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள முடி­யாத நிலை தோன்றியுள்ளதாகவும் இதன் காரணமாகவே பாராளுமன்றத்தைக் கலைப்பது பற்றி சிந்திக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
-Vidivelli